தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் இலங்கைக்கு சென்று வந்த பின் சென்னையில் மேற்கண்ட வாசகங்களுடன் சில போஸ்டர்கள் முளைத்தன.
இதை கண்டித்து, Facebookல் சிலர், முக்கியமாக இலங்கைத் தமிழர்கள் கலைஞரை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லது. அவர்களுடைய கோபம் நியாயமானதே. ஆனால் கோபப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?
வயிற்று வலி எனக்கு என்றால், நான்தானே மருந்து சாப்பிட வேண்டும். கசப்பு என்பதால் எனக்காக இன்னொருவர் மருந்து சாப்பிட முடியுமா? பிரபாகரனின் (இன்னும் சிலரால் உறுதி செய்யப்படாத) முடிவுக்குப் பின்னால், ஈழத் தமிழர்களின் ஒருங்கிணைந்த தலைவர் யார்? யாராக இருந்தாலும் அவர் ஈழத்தில்தானே இருக்க வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் தி.க தலைவர்கள் அந்தந்த கட்சிக்குதான் தலைவர்களே தவிர, ஈழத் தமிழர்களின் தலைவர்கள் அல்ல. அப்படி இருக்கவும் முடியாது.
ஆனால் அதை மறந்துவிட்டு, சில ஈழத் தமிழர்கள் தங்களது தலைவர்களை தமிழ்நாட்டில் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்கு ”நான்கே நாட்களில் இலங்கை பிரச்சனையைத் தீர்த்த கலைஞர்” போஸ்டர்கள் கண்களில் படுகின்றன. அவர் கலைஞர் அல்ல, கொலைஞர் என்று அனல் கக்குகிறார்கள். மீண்டும் சொல்கிறேன். உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால் கலைஞர் அல்லது கொலைஞரின் மேல் கோப்படுவது மட்டுமே நியாயமாகிவிடுமா?
- உங்கள் விடுதலைக்கு உங்கள் பங்கு என்ன?
- இலங்கையில் உள்ள தமிழ்கட்சிகள் ஏன் தனித் தனி கட்சிகளாக இயங்குகின்றன?
- ஏன் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை?
- ஏன் அவர்களுக்குள் பொதுத் தலைமை இல்லை?
- அவர்களில் எந்தக் கட்சியை அல்லது அமைப்பை இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்?
- ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு இவர்களுக்கு பங்கே இல்லையா?
தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கருணாநிதியை அல்லது பிரபாகரனை திட்டித் தீர்த்துவிட்டு பொழுதை போக்குவதும், பிறகு ”மானாட மயிலாட” பார்ப்பதும் வாடிக்கை தான்.
தற்போது இலங்கைத் தமிழர்களும் பிரபாகரனை அல்லது கருணாநிதியைத் திட்டிவிட்டால் தங்கள் கடமை முடிந்தது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நினைப்பு மாறி, இது தங்கள் பிரச்சனை என்று நினைத்து ஒற்றுமையுடன் போராடும் வரை, தனி ஈழம் என்பது கனவாகவே நீடிக்கக் கூடிய அபாயம் உண்டு.
ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழ்நாட்டு போஸ்டர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களை குறி வைத்து ஒட்டப்படுகின்றன. அதைப் படித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.
”மானாட மயிலாட” நிகழ்ச்சிகள் எங்கள் (தமிழ்நாட்டு தமிழர்களின்) நேரத்தை வீணடிக்கப் பிறந்த நிகழ்ச்சிகள். அதைப் பார்த்துவிட்டு கோபப்படாதீரகள். கலைஞர் மீதும், நமீதாக்கள் மீதும் கோபப்படுவதுதான் ஈழப்போராட்டம், தனி ஈழ உணர்வு என்று (கொச்சையாக) வரைமுறைப் படுத்தாதீர்கள்.
உங்கள் தலைவர் யார்? அவரை கண்டுபிடியுங்கள். அவரைக் கண்டுபிடிக்க உங்கள் கோபம் உதவட்டும். தனி ஈழம் பிறக்கட்டும்.
30 comments:
நம் தமிழன் ஒற்றுமையாக இருந்திருந்தால் என்றோ ஈழம் பிறந்திருக்கும் தலை. நம்ம கூட்டத்தில் உள்ள கருப்பு ஆடுகள் எல்லாம் இப்போ தலைமை பொறுப்பில் இருப்பது தான் வேதனையானது...:-(
http://thisaikaati.blogspot.com
மதிப்புக்குரிய செல்வா அவர்களே!
ஈழ உறவுகளாகிய எம் உறவுகள் இன்று காயங்களை தாங்கிய கற்பினி பெண்ணின் நிலமையை விட கொடுமையான நிலமையை இலங்கை முகாங்களில் வாடும் உறவுகள் எனப்தும் உங்களுக்கு நன்கு தெரியும் என்பது உன்மை.
புலம்பெயர் ஈழ தமிழர்கள் தமிழக தமிழர்களிடம் வேண்டிகொள்வது ஆதரவினை மட்டுமே எமது தலைவரை நாம் தேடிப்பிடிப்பதற்க்கு அவர் ஒன்றும் பொருலுமில்லை அல்லது வாக்கு மூலம் தமிழகத்தில் நடப்பது போல் நாடக மேடையும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எங்கள் தலைவர் எம் இன விடுதலைக்காக போராடி தற்போது ஓய்ந்திருக்கிரார் எனப்து உங்களுக்கு தெரியும்.
தாய விடிவிற்க்காக 4 தசாப்தங்கள் போராடி. ஓய்ந்திருக்கும் இவ் தருனத்தில் புது புது தலைவரை நாம் தெடிப்பிடிக்க இன்னும் 3 வருடம் கடக்க வேன்டிய நிலமைதான் நீங்கள் கூறும் பதில்
போராட்ட வடிவம் மாரலாம் ஆனால் போராட்ட இலக்கு மாறாது.
எம் இன விடுதலைக்காக தமிழகம் பட்ட பாடுகளும் தியாங்களும் நாம் நங்கு அரிவோம் மட்டுமில்லை அளியாத வரலாறாகிவிடுகிறது தமிழக தியக உணர்வுகள்.
எம் புலம்பெயர் இழ்ழத்து தமிழர்கள் கலைஞர் மேல் கோபப்படுவது மட்டும் நீயயமா எனப்து உங்கள் வினா??
நாம் என்ன கர்னாடக முத்லமைச்சர் மீதா அல்லது வேறு என மொழி முதலமைச்சர் மீதா கோவபடுகிறோம் சொல்லுங்கள்??
உரிமையுடனும் உணர்வுகளுடனும் தமிழின மூத்த கலஞரிடம்தானே??
எம் உறவுகள் பட்ட வேதனைகலை சுமந்தும் அதன் அடிபடையிலும் உணர்ச்சி வசப்பட்டு கலஞரையோ அல்லது தமிழகத்தையோ கோவபடுகிறார்கள் ஆனல் நீங்கள் கூறியது போல் அது மட்டுமே தீர்வாகது எனப்து உன்மை.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
மனது பாதிக்குமானல் உங்கள் உறவுகள் என்று நினைத்து மறந்து விடுங்கள்
உங்கள் விடுதலைக்கு உங்கள் பங்கு என்ன?
இலங்கையில் உள்ள தமிழ்கட்சிகள் ஏன் தனித் தனி கட்சிகளாக இயங்குகின்றன?
ஏன் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை?
ஏன் அவர்களுக்குள் பொதுத் தலைமை இல்லை?
அவர்களில் எந்தக் கட்சியை அல்லது அமைப்பை இலங்கைக்கு வெளியே உள்ள தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்?
ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு இவர்களுக்கு பங்கே இல்லையா?
நியாமான கேள்விதான் செல்வா ஆனால் எதிர் வினையாற்றுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்
தயாராய் இருங்கள் .
ஒரு நல்ல விவாதத்தை (தீர்வை ) எதிர் பார்க்கிறேன்
I like your comment, well said! Srilankan Tamils did not have unity among themselves, that is one of the main reason for the failure for Eelam
திரு. பாலா அவர்களுக்கு,
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி!
இந்தப் பதிவு ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஆரம்பித்து வைக்கும் என்று திடமாக நம்புகின்றேன்
திரு. கனோஜன் அவர்களுக்கு,
இன்றைக்கு ப.சிதம்பரம், 5000 தமிழர்கள் தமது, வாழ்விடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறதென பேட்டியளித்தார். கருணாநிதியை சந்தித்து விட்டு, அவர் கூறிய இந்த தகவல் வதந்தியாக அல்லது பொய்யாக இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்று மனது நினைக்கிறது.
ஆரம்பம் மெதுவாகத்தான் இருக்கும், போகப் போக வேகம் பிடித்து எல்லாம் நல்லபடி நடக்கும், என்றும் கூறினார்.
அவர் சொன்னபடி ஒருவேளை விரைவில் முகாம்களில் இருந்து தமது வீடுகளுக்கு தமிழர்கள் அனைவரும் திரும்பச் சென்றாலும் கூட அதுவே ஈழத் தமிழர்களின் நிம்மதிக்கு உத்திரவாதமில்லை.
ஈழத் தமிழர்களுக்கென ஒரு பொது அரசியல் தலைமை இல்லையென்றால், தமது வாழ்விடங்களுக்கு முகாம்களில் இருந்து திரும்பச் சென்ற பின்னரும், அடக்கு முறையை அல்லது இரண்டாம் குடிமகனாக நடத்தப்படும் அவலங்கள் நடக்க வாய்ப்புண்டு.
அதனால் தான் நான் திரும்பத் திரும்ப, எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களை காக்கக் கூடிய தலைவர் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கின்றேன். ஈழத் தமிழர்கள் அனைவரும் இந்தக் கேள்வியை எழுப்பி விரைவில் தீர்வு காண வேண்டும் என்று நினைக்கின்றேன்.
இது கருணாநிதியை ஆதரித்து எழுதப்பட்ட பதிவல்ல. ஈழத் தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உண்மையான கவலையுடன் எழுப்பப்பட்ட கேள்விகள்.
மண்ணிழந்து வாடும் ஈழத் தமிழர்களை எனது கேள்விகள் புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன். ஆனாலும் எனது கேள்விகள் நேர்மையானவை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
அருமையாக உறைக்க எழுதியிருக்கிறீர்கள்!
ஆனால் எனது ஆதங்கம் இதாவது இவர்களுக்கு மன்னிக்கவும் - எங்களுக்கு உறைக்குமா என்பது சந்தேகம்தான்! ஐ.நா சபையின் செயலாளர் நாயகமே வந்து செய்ய முடியாத எதையும் தமிழக குழு செய்யும் என்று எதிர்பார்ப்பதும் ?
இது நாங்களே தேடிக் கொண்டது - நாம்தான் தீர்வு காணவேண்டுமேயன்றி - மற்றவர்களை குறை சொல்லுவதில் அர்த்தமில்லை - ஒரு பேச்சுக்கு - கோபத்தில் தெரிவிக்க நியாயமிருப்பதாகவும் தெரியவில்லை.
உங்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம் - தமிழ்நாட்டிலும் சரி - பாரதம் முழுவதிலும் சரி நடமாடும் சுதந்திரம் - கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இலங்கையில் அரசுக்கு அல்லது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்(அவர்களின் அதிகாரம் இருந்த காலத்தில்) எதிராக கருத்துத் தெரிவிக்கவோ சுதந்திரமாக நடமாடவோ அனுமதி இருந்திருக்கவில்லை. இலங்கை அரசுக்கு சரிநிகராக எம் பக்கத்திலும் அடாவடிக்கும் கொலைகளுக்கும் குறைவில்லை! இதில் மாற்றுக் கட்சித் தலைவர்களை குறைசொல்லி அவர்களைக் கொன்று குவித்தவர்களுடன் எப்படி ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொள்ள முடியும்? சரி சமாதானம் செய்தவர்களாலும் தற்போதைய அழிவுகளைத் தடுக்க முடிந்ததா?
உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது! உங்களைப் போல பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அப்படியானவர்களில் மிகப் பெரிய கலைஞரையே நாம்(நானல்ல) தரக்குறைவாக விமர்சிக்கும் எமக்கு விடுதலைப் போராட்டம் - சுதந்திரம் ...........ஒன்றுபட்டவர்கள் இப்போது என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்! அவர்களால் 300,000 மக்களையே இதுவரை போய்ப்பார்க்க அனுமதி இல்லாதபோது இவர்கள் இருந்தென்ன! இல்லாமல் இருந்தாலென்ன!
எமக்கு முக்கியம் பதவிதான்! யார் சொன்னாலும் எமக்கு எம் வழி தெரியும் நீங்கள் யார் எமக்கு உபதேசம் செய்யவென முன்னர் சொல்லிய பாணியிலேயே நம்மவர்கள் கதை சொல்லுவார்கள். எமக்குத்தான் விடுதலைப் போராட்டம் ஒரு பொழுதுபோக்காக - மக்களைப் பகடைக்காய்களாக - வைத்துச் செய்தோம்! நீங்கள் ஏன் உங்கள் நேரத்தை வீண்விரயம் செய்து எமக்காக ........
தலைவர் இருக்கிறாரோ இல்லையோ நம் தலைவர்கள் என்ன வெல்லாம் அறிக்கைவிட்டார்கள்! பார்த்திருப்பீர்கள்தானே! அவருடன் இருந்தவர்களே இப்படி மாறும்போது நாம் மாறினால்தானென்ன - .......மாறாமல் ஜடமாக இருந்தாலென்ன!
பொதுமக்களை நிம்மதியாக (1985களுக்கு முன்னர் இருந்ததுபோல) வாழ விட்டாலும் பரவாயில்லை(அப்படி அவர்களின் இன்றைய நிலை இருக்கிறது) - யுத்தம் - குண்டு என ஓடியோடி மக்கள் இறுதியாக இயலாத நிலையில்தான் இப்போது திக்கற்றவர்களாக முள் வேலிகளுக்கிடையில் வாழ்கிறார்கள்! போதுமடா இந்தப் போராட்டம் என்று வலிமையற்று அடுத்த நொடிக்காக ஏங்குபவர்களிடம் மீண்டும் சுதந்திரம் தனிநாடு....எடுபடுமா?
நமக்கென்ன வெளிநாடுகளில் இருப்பவர்கள் தம் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தம் வேலையைப் பார்த்துக்கொண்டு இன்னோரு நாட்டில் அகதியாக - அடிமையாக இருந்துகொண்டு எமக்கு...... இதெல்லாம்..... தேவையா?
நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்..........
இதற்கிடையில் நாடு கடந்த ஏதோ ஒன்று - நாட்டில் மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு .... எனக்குத் தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது!
தங்க முகுந்தன் அவர்களுக்கு,
நீங்கள் உணரும் வலியும், நிராகரிப்பும், வேதனையும் எனக்கும் இருப்பதாகச் சொன்னால் அது மிகைப்படுத்தல்தான். ஆனால் உங்களுக்கு இருக்கும் சோர்வு, நான் உட்பட ஒவ்வொரு தமிழனையும் தொற்றிக் கொண்டுவிட்டது. பிரபாகரனின் (தலை)மறைவுக்குப் பின்னால், அதிர்ச்சியும், திகைப்பும் மேலோங்கி நிற்கின்றது. இனி அவ்வளவுதானா? இந்த மக்களுக்கு விடிவே கிடையாதா என்று இயலாமையில் மனது அரற்றுகிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல உங்களைப் பொறுத்தவரை வலியும், நிராகரிக்கும் நிஜம். நீங்கள் அந்த வேதனைகளை உணருகின்றீர்கள். நாங்கள் வெறும் பார்வையாளர்களே. ஆனால் வெறும் பார்வையாளனாக இல்லாமல் நாமும் ஏதாவது பங்கு கொள்ளலாமே என்று நினைக்கும்போது இந்தக் கேள்விகள் திரும்பத் திரும்ப எனக்குள் முளைத்தன. கேட்டுவிட்டேன்.
நீங்கள் எழுதியதை படிக்கும்போது, கண்களில் ஈரம் துளிர்த்தன. காரணம் கேள்விகள் அல்ல. அகப்படாத பதில்கள்தான். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தேடினால் நல்ல பதில்கள் அகப்படும். தேடுவோம்.
உங்களுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தபோதே - ஒரு செய்தி முகாமில் இருந்த சுமார் 1000 மக்களை இன்று யாழ்ப்பாணம் கொண்டு சென்று விடுவித்திருக்கிறார்கள். மனதுக்கு ஒரு நிம்மதி ஆனால் மிதமுள்ளோர் எப்போது? என்ற அங்கலாய்ப்பு வருகிறது
தங்களின் இந்தப் பதிவினை tamiljournal.comஇணையத்தளத்தில் சிறப்பு கட்டுரை பகுதியில் மீள் பதிவிட்டுள்ளோம்.வலைப்பதிபவர் பெயர் மற்றும் வலைப்பூ பதிவு முகவரி ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி
தமிழ் ஜேர்ணல் சார்பாக
மொழிவேந்தன்.
தங்களின் இந்தப் பதிவினை tamiljournal.comஇணையத்தளத்தில் சிறப்பு கட்டுரை பகுதியில் மீள் பதிவிட்டுள்ளோம்.வலைப்பதிபவர் பெயர் மற்றும் வலைப்பூ பதிவு முகவரி ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி
தமிழ் ஜேர்ணல் சார்பாக
மொழிவேந்தன்.
சகோதரர் முகுந்தன்,
இந்த பதிவைக் கண்டதும், நள்ளிரவு நேரமானாலும் டெலிபோனில் தொடர்பு கொண்டு, உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
குறிப்பாக என்னை ”ஆசிரியரே” என்று அழைத்ததற்கு நன்றி!
மற்ற எதையும் விட, ஒரு மாணவனுக்கு ஆசிரியராக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கின்றது.
முகாம்கள் விரைவில் காலி கூடாரங்களாக மாறி, மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு செல்வார்கள் என்று நம்புவோம். அது குறித்து தொடர்ந்து எழுதுவோம். கருத்துக்களையும் உணர்வுகளையும் பரிமாறிக் கொள்வோம்.
மொழிவேந்தன் அவர்களுக்கு,
இந்தப் பதிவை tamiljounal.comல் சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டு, விவாதக்களத்தை அகலப்படுத்தியதற்கு நன்றி!
ஈழம் பற்றிய கவிதைகளும் கட்டுரைகளும் மட்டும் போட்டு தன் வேதனையை போலியாக காட்டாமல், எதார்த்தமான இடுகை இட்டமைக்கு பாராட்டுக்கள்.
கருணாநிதி எதுவும் செய்யவில்லையே என்ற கோபம் அல்ல இது.
எதற்காக மக்களின் துயரங்களை தனது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்.. என்ற கோபம்.
இன்னமும் முகாமிலிருக்கும் ஏதோ ஒரு உறவின் சொந்தம் இந்த போஸ்டரை பார்த்தால் செத்து தொலையானா என யோசிப்பதில் பிழையொன்றும் இல்லை.
கலைஞர் தொடர்ச்சியாக இப்படி நாடகமாடுகிறாரே.. இவற்றையெல்லாம் நம்புகிற மக்களா தமிழக மக்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மற்றும்படி கலைஞர் எதுவும் செய்யவில்லை என்றால் நமக்கெதுவும் கோபம் கிடையாது. அல்லது உண்மையிலேயே முகாம்களில் இருந்து மக்களை விடுவித்தாரென்றால் அதை விட மகிழ்வும் இருக்கமுடியாது.
ஆனால்.. நூறு வீதம் உறுதியாகச் சொல்ல முடியும்.
கருணாநிதியால் எதையும் புடுங்கவோ கிழிக்கவோ முடியாது. புடுங்கியதாகவும் கிழித்ததாகவும் நாடகம் ஆட மட்டுமே முடியும்.
தமிழ்நாட்டு இந்திய நாத்தம் பிடித்த அரசியல் தலைவர்களை விட.. சிங்களவன் பரவாயில்லை என்ற நிலையை கருணாநிதி மாதிரியானவர்களே ஏற்படுத்துகிறார்கள்.
என்ன சொல்ல வருகிறீர்கள்?
ஈழத்தமிழர்கள் இந்த கேடுகெட்ட காவாலித்தனங்களை கண்டுகொண்டு அமைதியாய் இருக்க வேண்டுமா..? ஈழத்தமிழர்கள் எதுவும் பங்களிக்கவில்லையென்றால்.. கலைஞரின் இந்த நாத்தம்பிடித்த நாச அரசியலை அமைதியாய் கடந்து போக வேண்டுமா?
என்னை வைத்து அரசியல் செய்யாதே பன்னாடைப் பயலே என்று சொல்வதற்கு ஈழத்தமிழனுக்கு உரிமை இல்லையா..?
உங்களின் கேள்விகள் பெரும்பாலானவை நியாயம்தான்
ஆனாலும் அளவுக்கு மிஞ்சி தமிழகத் தலைவர்கள் மீது வைத்த நம்பிக்கை பொய்த்ததால் வந்த வேதனையும் ஆதங்கமும் இப்படி அவர்களைப் பேசவைக்கிறது என்று நினைக்கிறேன் ,அத்துடன் இழப்புக்களின் வலி பலரை குழப்பமான மனநிலைக்கு தள்ளி விட்டது
பெரிய இழப்புகளின் பின்பு இப்படியான ஒரு சூழ்நிலை உண்டாவது யதார்த்தம்தான் ,
இந்த நிலையிலிருந்து மீள்ந்து சரியான பாதையில் செல்வதில்தான் எமது எதிர்கால வெற்றி உள்ளது
இனிமேல் கருணாநிதியைக் குறைகூறவும் வேண்டாம் ,ஜெயலலிதாவை திட்டவும் வேண்டாம் ,அவர்கள் தங்கள் அரசியலைப் பார்க்கட்டும் ,ஆனால் அதே சமயம் விமர்சனம் செய்வதிலோ அல்லது தலைவர்கள் மக்களை தவறுதலாக நடத்த நினைத்தால் அதை சுட்டிக் காட்டுவதிலோ தவறு இல்லை ,ஜனநாயக நடைமுறை என்பது அதுதானே!ஆனால் கருத்தியல் ரீதியில் தர்க்கம் செய்யுங்கள்.,தரக்குறைவாகப் பேசாதீர்கள்
கடைசியாக 'அழுதாலும் ,பிள்ளை அவளே பெற வேண்டும்' என்று சுட்டிக் காட்டியதற்கு நன்றி ,பிள்ளை பெறும்போது பக்கத்தில் நின்று கை பிடித்து ஆதரவு தருவார்கள் என்று நினைத்த நம்பிக்கை பொய்த்ததில் சிலர் புலம்புகிறார்கள் ,அதை விட்டு ஆக்கபூர்வமான செயல்திட்டங்களில் இறங்குங்கள் .
---வானதி
மீண்டும் வணக்கத்துடன் செல்வா அவர்களே!
'' நீங்கள் கூறியது போல்:மண்ணிழந்து வாடும் ஈழத் தமிழர்களை எனது கேள்விகள் புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன்.
நாம் இன்று மண்னை மட்டும் இழக்கவில்லை, பலகோடி கனவில், பல கோடி செலவில்
கட்டிய மனைகளையும், எம் இன சொந்த பந்தங்களையும், நாம் நம்பியிருந்த சுதந்திர விடுதலையையும் இழந்து வண்ணியிலே வாடி நசுங்கி தரனி முகம் பார்க்க வைத்த இனம், இவ்வாறு வெறும் வார்த்தைகளால் மட்டுமே வடித்து விட முடியாத துன்பங்கள் மத்தியில் நாம் புண்பட்டு வருந்துவது எமாக்கு வாடிக்கை. ஆகவே இப்பொழுது பல தமிழர்களிடம் எழும் குழ்ப்பமன வினக்களுக்கு நாம் வருத்தப்படுவது என்பது அர்த்தமற்றது.
எமக்கு நன்றாக தெரியும் எம் மீது எவ்வளவு அக்கறை தமிழகம் குறிப்பாக தமிழக மக்கள் வைத்திருக்கிறது எனபது.
நாம் மீன்டும் மீன்டும் கூறுகிறோம் எம் இன தலவரை நாம் 30 வருடங்களுக்கு முன் தெடிப்பிடித்து விட்டொம்.
ஒன்று கூற விரும்புகிறேன் இவ்விடத்தில் செல்வா அவர்களே!
தமிழகத்தில் போல் இலங்கையில் அங்கு நாம் தனி கட்சியோ அல்லது புது தலவரையோ நாம் நியமிக்க முடியாத நிலமை.
தமிழர்கள் எல்லோரும் சிங்கள இனவாத அரசின் கீழ்தான் அங்கு நாம் வாழ முடியும்.அதனால் தான் ஆயுதம் ஏந்த வேன்டிய கட்டாய சூழ்னிலைக்கு தல்லபட்டோம் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.
இனிமேலும் நாம் முட்டால் தனமாக 40 வருடங்களை அனியாய்மாக கழித்து இளைய சமுதாயதிடம் எம் இன ஆயுத போராட்டத்தை தினித்து விட நாம் தயார் இல்லை.
ஆகவே தமிழர்களுக்கு ஒரே தீர்வு அவர்களுக்கான தலைவர்??
அவர் எம் இன விடுதலைக்காக களத்தில் இறுதிவரிக்கும் உறுதியுடன் போரடியவர் ஆவார்.
இனிமேல் புது தலைவரை நாம் எந்த அடிப்படையில் வைத்து எம் புது தலைவரை கன்டு பிடிப்பது???
இவ்வாறு புது புது தலைவரை கண்டுபிடிப்பது என்றால் எதற்க்காக் நாம் கிட்ட தட்ட 60 வருடங்கள் போராடி நொந்து ஓய்ந்திருக்கிறோம்???
செல்வா அவர்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள், எமக்கா நாம் விட்ட கலத்தை விரைவில் செயல் படுத்துவோம் என்று உலகத்தமிழர்கள் ஒருமித்து கட்டளை இடுகிறோம்.
இப்படிக்கு ஈழத்தில் பிறந்து புலத்தில் வாழும் ஈழத்தமிழர்கள்.
உங்கள் வினா எதுவாக இருந்தாலும் அதனை விளியிட தயங்காதீர்கள்.
எம் கருத்துக்களை செவிமெடுத்து வாசித்தமைக்கு நன்றிகள் பல...
அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய என் நண்பர் , என் ஆசான் செல்வா அவர்களே !
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
நியாமான கேள்வி!
எல்லாம் இழந்த ஈழத்தமிழரின் எதிர்காலம் நல்லபடி அமைவதற்கு இப்படியான விவாதம் - சிந்தனை பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
உங்கள் அன்பிற்கும் - உண்மையான அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள்!
தொடர்ந்தும் உங்கள் ஆக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
நன்றி! வணக்கம்!
அன்புடன்
ராஜா - லண்டன் .
19.10.09
அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய என் நண்பர் , என் ஆசான் செல்வா அவர்களே !
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
நியாமான கேள்வி!
எல்லாம் இழந்த ஈழத்தமிழரின் எதிர்காலம் நல்லபடி அமைவதற்கு இப்படியான விவாதம் - சிந்தனை பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
உங்கள் அன்பிற்கும் - உண்மையான அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள்!
தொடர்ந்தும் உங்கள் ஆக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
நன்றி! வணக்கம்!
அன்புடன்
ராஜா - லண்டன் .
19.10.09
அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய என் நண்பர் , என் ஆசான் செல்வா அவர்களே !
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
நியாமான கேள்வி!
எல்லாம் இழந்த ஈழத்தமிழரின் எதிர்காலம் நல்லபடி அமைவதற்கு இப்படியான விவாதம் - சிந்தனை பெரிதும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
உங்கள் அன்பிற்கும் - உண்மையான அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள்!
தொடர்ந்தும் உங்கள் ஆக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
நன்றி! வணக்கம்!
அன்புடன்
ராஜா - லண்டன் .
19.10.09
இன்று சேலம் செந்தில் எழுதியிருந்த பதிவு ஒன்றை படித்தேன். அவர் குறிப்பிட்டிருந்த கருத்தை இங்கே மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். http://salemsenthil.blogspot.com/2009/10/blog-post_18.html
இன்றையா நிலைமையில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியாது அடுத்து என்ன எனபது தான்?. மக்கள் தங்கள் இடங்களுக்கு இடம் பெயர் வேண்டும். அது ராஜபக்சே நினைத்தால் மட்டுமே முடியும் . ஐ நா (உண்மையில்) நினைத்தால் கூட முடியாது.
எனவே தந்திரமோ, நேர்வழியோ ஏதாவது ஒரு வழியில், ராஜபக்ஷேவை நிர்பந்திக்க வேண்டும். ராஜபக்ஷே வேறுவழியின்றி உடனடியாக முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களது தாய்மண்ணிற்கு திருப்பி அனுப்ப நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.
திரு.நாவாஸீதின் அவர்களுக்கு,
இந்தப் பதிவிற்கு பதில் சொல்லியுள்ள அனைவருமே, என்மேல் கண்மூடித் தனமான கோபத்தையோ, பாராட்டுதல்களையோ வழங்கிவிடவில்லை. இதுவே நாம் அனைவரும் அடுத்தது என்ன என்று ஒரே குரலில் சிந்திக்கத் துவங்கிவிட்டதற்க்கான அறிகுறி!
அனானி நண்பர்களுக்கு,
//தமிழ்நாட்டு இந்திய நாத்தம் பிடித்த அரசியல் தலைவர்களை விட.. சிங்களவன் பரவாயில்லை என்ற நிலையை கருணாநிதி மாதிரியானவர்களே ஏற்படுத்துகிறார்கள்.//
//என்னை வைத்து அரசியல் செய்யாதே பன்னாடைப் பயலே என்று சொல்வதற்கு ஈழத்தமிழனுக்கு உரிமை இல்லையா..?//
நான் மீண்டும் கூற விரும்புவது ஒரே ஒரு விஷயத்தைத்தான். தமிழக அரசியல்வாதிகளின் மேல் கோபப்பட்டு நேரத்தையும், இலக்கையும் இழக்காதீர்கள்.
தற்போதைய இலக்கு, முகாம்களில் உள்ள தமிழர்களை உடனடியாக அவர்களுடைய தாய்மண்ணிற்கு குடியேற்றுவது எப்படி? அதைச் செய்ய நமது பங்கு என்ன என்பதுதான்.
கருணாநிதியையும், திருமாவளவனையும் விமர்சிப்பது உங்கள் பங்களிப்பு அல்ல.
வானதி,
//ஆனாலும் அளவுக்கு மிஞ்சி தமிழகத் தலைவர்கள் மீது வைத்த நம்பிக்கை பொய்த்ததால் வந்த வேதனையும் ஆதங்கமும் இப்படி அவர்களைப் பேசவைக்கிறது என்று நினைக்கிறேன் ,அத்துடன் இழப்புக்களின் வலி பலரை குழப்பமான மனநிலைக்கு தள்ளி விட்டது
பெரிய இழப்புகளின் பின்பு இப்படியான ஒரு சூழ்நிலை உண்டாவது யதார்த்தம்தான் ,
இந்த நிலையிலிருந்து மீள்ந்து சரியான பாதையில் செல்வதில்தான் எமது எதிர்கால வெற்றி உள்ளது //
தற்போதைய நிலையின் ஆழ அகலத்தை மிகத் துல்லியமாக உணர்ந்து எழுதியிருக்கின்றீர்கள். இதை அனைவரும் உணரவேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம்.
கனோஜன்,
//இப்பொழுது பல தமிழர்களிடம் எழும் குழ்ப்பமன வினக்களுக்கு நாம் வருத்தப்படுவது என்பது அர்த்தமற்றது.
எமக்கு நன்றாக தெரியும் எம் மீது எவ்வளவு அக்கறை தமிழகம் குறிப்பாக தமிழக மக்கள் வைத்திருக்கிறது எனபது.//
தமிழக மக்களுக்கு ஈழத்தமிழர்களின் மேல் என்றுமே அக்கறை உண்டு. அது எழுச்சியாக இருந்த காலமும் உண்டு. தற்போது எழுச்சி வெறும் அக்கறையாக குறைந்துவிட்டது என்பதும் உண்மைதான்.
ஆனால் இந்த தளர்ச்சியும், அயற்சியும் ஈழத்தமிழர்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. ராஜபக்ஷேவின் கொடுரமான மற்றும் தந்திரமான நடவடிக்கைகள் ஈழமக்களை மனதளவில் பலவீனப்படுத்திக் கொண்டு வருகின்றது. அதற்கு இடம் தரக் கூடாது.
வெற்றுக் கோபங்கள் வெறும் பலவீனம்தான். அடுத்தது என்ன, அதில் நமது பங்கு என்ன என்று சிந்திக்கத் துவங்கினால், அது ஒரு திடமான ஆரம்பமாக இருக்கும்.
அனானி ஒருவர் தெரிவித்திருந்த கருத்து.
கருத்து நன்றாக இருந்தாலும், சில வார்த்தைகள் பிரசுரிக்க முடியாத அளவிற்கு தடிப்பாக இருந்தன.
எனவே அந்த அவற்றை * குறிகளால் நிரப்பியுள்ளேன்.
//இலவச தொலைகாட்சி இலவச அரிசி சேலை வேட்டி ஜட்டி.. குறித்து நோட்டீஸ் ஒட்டினால் நாம் ஏன் கோபப்படபோகிறோம்...?
அவரு நம்மளை வைத்து நோட்டீஸ் ஒட்டுவாராம்.. நாங்க ******* போகணுமாம்.. //
ஈழப் போரட்டத்தில் உள்ள weak links ஐ சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை இந்தியா அதிகாரம் மிக்க நாடு.சுமார் முப்பது ஆண்டு காலம் அவரவர் வசதிக்கேற்றபடி கொள்கைகளை மாற்றியுள்ளனர், அதிகாரத்திலிருப்பவர்கள்.இவர்கள் யாரும் நேர்மையாக ஒதுங்காத பட்சத்தில், ஒரு துரும்பாவது கிடக்காதா என ஏங்கும் நிலையில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்...உரக்கப்பேசுபவன் எல்லாம் தலைவனாய்த்தான் தெரிவான்!
//ஒரு துரும்பாவது கிடக்காதா என ஏங்கும் நிலையில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்...உரக்கப்பேசுபவன் எல்லாம் தலைவனாய்த்தான் தெரிவான்!//
சரியாகச் சொன்னீர்கள் வேல்ஜி,
ராஜபக்ஷே திட்டமிட்டு இந்தச் சோர்வை ஈழத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டார். இதிலிருந்து மனரீதியாக மீள்வதுதான் முதல்படி.
Post a Comment