Friday, October 16, 2009

ஜாலியான அட்வைஸ் கதை - 3



”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”

சிட்டி சென்டர், பீச், பீட்சா கார்னர் என காலையிலிருந்து தவிர்த்த முத்தம்.
கடைசியாக நைட்ஷோவில் எதிர்பார்த்து கிடைக்காமல் போன முத்தம்.

”முடியாதுன்னா முடியாது”, செல்லச் சிணுங்கலுடன் அவனை தலை கலைத்து இறங்கி நடந்தாள்.

சத்தம் கேட்டு யாரும் விழித்து விடக் கூடாது என்பதற்க்காக தெரு முனையிலேயே மோட்டர் பைக்கை அணைத்திருந்தான் அவன். அதனால் அவளுடைய செல்லச் சிணுங்கல் கூட கூடுதல் டெசிபலில் கான்கிரிட் சுவர்களில் மோதி எதிரொலித்தன.

சன்னமான நிலா வெளிச்சத்தில் அவளது மெல்லிய உதடுகள் ”வா என்னை முத்தமிடு” என்பது போல ஒளிர்ந்தன.  பைக்கை ஸ்டாண்டு போட்டு விட்டு சட்டென அவளை அவள் வீட்டு சுவற்றுடன் அழுத்தினான்.

”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”

ஆர்வத்தை மீறிய தயக்கம். தயக்கத்தை மீறிய பயம். கிசு கிசுப்பான குரலில் ”ஹையோ சுவத்துல இருந்து கையை எடு. நான் உள்ள போகணும். யாராவது வந்துட்டாங்கன்னா பிரச்சனையாகிடும்” என்றாள்.

அவன் கையை எடுக்கவில்லை. பள பளவென ஒளிர்ந்த அவளுடைய உதடுகளுக்கும், அவனுடைய உதடுகளுக்கும் 10 மில்லி மீட்டர்தான் இடைவெளி. இருவருக்கும் நெருக்கம் தந்த மயக்கத்தில் அவர்களுடைய மூச்சு காற்று கூட புயல் காற்றைப் போல ஒலித்தது.


”ஒரே ஒரு முத்தம் ப்ளீஸ்”

”வேண்டாம். யாராவது பார்த்துடுவாங்க”

”ஒண்ணே ஒண்ணு”

”வேண்டாம் ப்ளீஸ்”

”ஜஸ்ட் ஒரே ஒரு கிஸ்”

”நோ”

”ஏண்டி ராட்சஷி, நோ சொல்ற? அவன் கேட்கிற முத்தத்தை குடுத்து தொலையேன்”

இருவரும் திடுக்கிட்டு திரும்பினார்கள்.  வாசலில் அவளுடைய அக்கா, தம்பி, அம்மா மற்றும் அப்பா. வீட்டில் எல்லா விளக்குகளும் மள மளவென எரிந்தன. அதிர்ச்சியில் விலகக் கூடத் தோன்றாமல் அவளை சுவற்றுடன் அழுத்தியபடியே நின்றிருந்தான் அவன்.


மிலிட்டரி ரிடையர்டு அப்பா கையில் துப்பாக்கியுடன் சர சரவென அருகில் வந்தார். அவர் கண்களில் கொலை வெறி!

”மரியாதையா அவனை சுவத்துல இருந்து கையை எடுக்கச் சொல்லு. 15 நிமிஷமா காலிங் பெல் அடிச்சுக்கிட்டே இருக்கு”

நீதி :
முத்தம் தர ஏற்ற இடம். காலிங் பெல் இல்லாத இடம். எனவே காலிங் பெல் இருக்கிற இடங்களில் முத்தம் தரவோ, பெறவோ முயற்சிக்காதீர்கள்.

15 comments:

பாலா said...

ஐயோ! செல்வா சான்சே இல்ல சிரிச்சு சிரிச்சு வாய வலிக்குது -:))))))))))))))))))))))))))))))))))
இத தீபாவளி போனசா எடுத்துக்கலாமா ????

மங்களூர் சிவா said...

ஹா ஹா

இது ஏற்கனவே படிச்சிருக்கேன் ஆனாலும் திரும்ப படிக்கிறப்பவும் அதே கிக்கா இருக்கு

:))

ISR Selvakumar said...

சிவா,
நீங்கள் சொல்வது சரி. இது நான் நெட்டில் படித்த ஒரு ஜோக். கொஞ்சம் மசாலா சேர்த்து, ஜாலியான கதையாக மாற்றியிருக்கின்றேன்.

ISR Selvakumar said...

பாலா,
தீபாவளி போனஸ் இது இல்ல. ஆதவன் விமர்சனம். இப்பதான் படம் பார்த்துட்டு வந்தேன். இன்னும் சில நொடிகளில் விமர்சனம் எழுத ஆரம்பித்துவிடுவேன்.

போனஸெல்லாம் இருக்கட்டும். முதலில் தீபாவளி வாழ்த்துக்கள்.

Unknown said...

இதே போல் எனக்கும் கூட நடத்ததுண்டு, நான் அமுக்கியது காலிங் பெல் இல்லை என் காதலியின் காலை ----- விவாதகன்

Unknown said...

இதே போல் எனக்கும் கூட நடத்ததுண்டு, நான் அமுக்கியது காலிங் பெல் இல்லை என் காதலியின் காலை ------- விவாதகன்

ISR Selvakumar said...

விவாதகன்,
அதுக்கப்புறம் அந்த முத்தம் என்ன ஆச்சு?

Unknown said...

முத்தம் என்னவோ சக்ஸஸ் ஆனால் என் காதலியின் சத்தம் கேட்டு அவளின் தங்கை வந்தால், அவளுக்கு எங்களின் காதல் விவகாரம் தெரியும் என்பதால் நான் பிளைத்துக் கொண்டேன் ----- விவாதகன்

Unknown said...

முத்தம் என்னவோ சக்ஸஸ் ஆனால் என் காதலியின் சத்தம் கேட்டு அவளின் தங்கை வந்தால், அவளுக்கு எங்களின் காதல் விவகாரம் தெரியும் என்பதால் நான் பிளைத்துக் கொண்டேன் ---- விவாதகன்

ISR Selvakumar said...

அக்காவின் காதலைப் பற்றித் தெரிந்த எல்லா தங்கைகளுமே, காதலுக்கு ஜே போடுவார்கள். ஆனாலும் முத்தத்திற்கு தடை போடுவார்கள்.

தங்கை வந்த பிறகு நின்ற முத்தம் தங்கை போன பிறகும் தொடர்ந்ததா?

Unknown said...

வந்த அவள் போகும் போது அக்காவையும் இழுத்து சென்றதால் ஒன்றுடன் அன்றைய பகுதி முடிந்தது, நீங்கள் போடும் வினாக்களை பார்க்கும் போது அடுத்த பதிவு என்னுடைய கதை தான் என்று நினைக்கிறேன்

ISR Selvakumar said...

உங்கள் கதையை எழுதலாம் போலத்தான் தோன்றுகிறது. முயற்சிக்கிறேன்.

Unknown said...

இது போன்ற பதிவுகள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் எழுதியிருக்கும் இந்த கதை உண்மைக் கதையா?

ISR Selvakumar said...

உண்மையில் கதை. உண்மைக் கதை அல்ல.

இரசிகை said...

sirichen.....:)