சென்ற வருடம் டிசம்பர் இறுதியில் நாகர்கோவிலுக்கு ஒரு இரயில் பயணம். அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸின் தட தட தாலாட்டை மீறி செல்போன் என்னை எழுப்பியது.
”ஹலோ குட்மார்னிங்! சொல்லுங்க என்ன விஷயம்?” என்றது எதிர் முனைக் குரல்.
அழைத்தவர் அவர். (அவர் யார்?) அவர்தானே விஷயத்தை சொல்ல வேண்டும். ஏதாவது ராங்காலாக இருக்குமோ என்று யோசித்தபடி அப்பர் பர்த்தில் தூக்கம் கலைந்தேன்.
”ஹலோ நான் செல்வக்குமார் பேசறேன்”
"ஒரே சத்தமா இருக்கு. என்ன விஷயம் சொல்லுங்க?”
”நீங்கதான் சொல்லணும்”
”கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்கதான் என்னைக் கூப்பிட்டீங்க”
”நானா..?” என்று ஆச்சரியப்பட்ட வினாடியில், நடந்தது எனக்குப் புரிந்து போனது.
”அடடா..மன்னிக்கணும். நான் டிரெயின்ல இருக்கேன். தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது, எப்படியோ உங்க நம்பர் டயல் ஆகியிருக்கிறது”
”பரவால்ல, நானும் இப்பதான் ஒரு வேலையை முடிச்சிட்டு படுத்தேன்”, குரலில் கோபமில்லை, எரிச்சல் இல்லை, தூக்கம் கெட்டதே என்ற அலுப்பு இல்லை.
”சரி நீங்க சென்னைக்கு வந்தப்புறம் சந்திக்கலாம்” என்று மிக அமைதியாக, இயல்பாக பேசிய அந்த குரலுக்கு சொந்தக்காரரை இரண்டு மாதங்கள் ஆகியும் நேரில் சந்திக்க முடியவில்லை.
அவ்வப்போது Facebookல் வந்து ”நண்பா எப்படி இருக்கீங்க?” என்பார். பல முறை தேதி குறித்தும் அவரவர் வேலை பளு காரணமாக, அவரை சந்திக்க முடியாமலேயே இந்தப் பதிவில் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
ஏண்டா விடிய காலையில் 3 மணிக்கு போன் பண்ணி தூக்கத்தை கெடுத்த என்று நியாயமாக கோபம் வரக் கூடிய நிலையிலும், நிதானித்த அவரை எண்ணி வியக்கிறேன். அவரை இதுவரை சந்திக்கவே இல்லை. ஆனாலும் சின்னச் சின்ன கண்ணியமான facebook உரையாடல்கள் மூலம், எப்போதும் நினைவில் நிற்கும் நண்பர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.
தன்னை ஆளத் தெரிந்தவர் தரணி ஆள்வார். விரைவில் அவர் தமிழ் மக்களின் மனதை வெல்வார்.
அவருடைய சிறந்த குணத்திற்கு மேலே நான் எழுதியிருப்பதே சாட்சி. அவருடைய திறமைக்கு சாட்சியாக விரைவில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. அவர் இயக்கியுள்ள ”அவர் பெயர் தமிழரசி” இம்மாதம் திரைக்கு வருகிறது
நல்ல குணம் படைத்த அவர், நிச்சயம் நல்ல திரைப்படத்தை தருவார்.
அவர் - இயக்குனர் மீரா கதிரவன்.
All the best Meera!
10 comments:
மீரா கதிரவன் சார், வெற்றி பெற வாழ்த்துக்கள்.
செல்வா அண்ணா,
மற்றவர்களின் திறமைகளையும் நல்ல எண்ணங்களையும் அடையாளம் கண்டு கொள்ளும், உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மீண்டும் எழுத வந்தது அறிந்து மகிழ்ச்சி. "அவர்" வேலைகள் சிறப்பாக நடக்கவும் வாழ்த்துக்கள்.
செல்வா, அந்த நல்ல குணம் படைத்த இயக்குநரை நானும் சந்திக்க ஆவலாய் காத்திருக்கிறேன்.
திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.
படத்தின் பாடல்கள் மிக மிக அருமையாய் வந்திருக்கிறது.. அவருக்கு வாழ்த்துகளைச்சொல்லுங்கள் :-)
அழகான தமிழ்ப்பெயருக்காகவே அந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம் :-)
செல்வா சார்...
நான் கூட பதிவின் தலைப்பை பார்த்ததும், நீங்கள் “அவர்” பற்றி எழுதினீர்களோ என்று படித்தேன்... கடைசியில் பார்த்தால் “இவர்” வேறு “அவர்”..
மீரா கதிரவன் அவர்களின் “அவள் பெயர் தமிழரசி” சாதனை படைக்க வாழ்த்துகிறேன்...
செல்வா சார் மிகவும் அருமை......... மீரா கதிரவன் அவர்களின் திரைபடம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
செல்வா சார் மிகவும் அருமை......... மீரா கதிரவன் அவர்களின் திரைபடம் வெற்றிபெற வாழ்த்துக்கள்
வெற்றி அவரை என்றும் பின் தொடர என் வாழ்த்துக்கள்
உங்கள் நண்பரின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள், உங்கள் "அவரின்" வெற்றிக்கும் தான், அதை explicit ஆக சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதபோதிலும்!
எல்லோரையும் ஊக்குவிக்கும் நல்ல மனம் உங்களுக்கு செல்வா வாழ்த்துக்கள் அவருக்கும்
ஓஹ்! நல்லது
வாழ்த்துகள் மீரா கதிரவன்.
Post a Comment