Saturday, February 27, 2010

சுஜாதா நினைவாக இசை ரெடி - கேட்டுப்பாருங்க



இந்த முறை டிவிட்டர்கள் சந்திப்பை சுஜாதா நினைவு சந்திப்பாக வைத்துக்கொள்ளலாம் என்று கடந்த வாரம் முடிவானது. ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதாவின் கவிதை எதையாவது இசையமைக்கலாம் என்று முடிவு செய்தேன். முதலில் சுஜாதாவின் குறள் உரையை இசை வடிவில் தரமுடியுமா என்று சிந்தித்தேன். அதை நெட்டில் தேடியபோது முதலில் கண்ணில் சிக்கியது கீழே இருக்கும் கவிதை. சந்தம்-கிந்தம், மீட்டர் - கீட்டர் எல்லாம் பற்றி சிந்திக்கவே இல்லை. கனமான ஒரு சப்ஜெக்ட் படிப்பதற்கு இலகுவானதாக இருக்கவே அதையே இசைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

இசை என்றால் உடனே நான் அடுத்து போய் நிற்பது நண்பர் விவேக் நாராயண் இல்லம் தான். அவசரம் கருதி போன் போட்டேன். எந்தக் கவிதை என்று கேட்காமலயே சரி என்றார். நேற்று மதியம் வந்து கவிதையை படித்துவிட்டு எதையோ முணுமுணுத்துவிட்டு டியுன் ரெடி என்றார். எப்போ ரெக்கார்டிங் என்றேன். நாங்கள் எப்போதுமே அப்படித்தான். சட்டென சிந்தித்து, பட்டென முடிக்கப்பார்ப்போம். இரவு வா என்று சொல்லவிட்டு மாலை போனில் அழைத்தார்.

வா !
அப்புறம் வா !
போய்விட்டு அப்புறம் வா !
சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

சுஜாதாவின் கடைசி வரி தனித்தனி வார்த்தைகளாக படிக்கும்போது எப்படி ஜாலம் காட்டுகிறது பாருங்கள். எனவே அதையே துண்டுப்பல்லவிகளாக பயன்படுத்திக் கொண்டோம்.

ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சுஜாதா பற்றி அல்லது அவருடைய கவிதைகளைப் பற்றி விமர்சனங்கள் அல்லது நினைவுகளை பல குரல்களில் பாடலின் இடையே இணைக்கலாம் என்று முடிவு செய்தோம். அதற்க்க்காக இணைய நண்பர்களை அணுகியிருந்தேன். பலரும் தயங்க, இருவர் மட்டும் அனுப்பியிருந்தார்கள்.

ஜமால்(adiraijamal@gmail.com) சரியில்லேன்னா சொல்லுங்கண்ணே, திரும்ப அனுப்பறேன் என்று தனது குரலை அனுப்பியிருந்தார். சுந்தரவதனம்(vadanan2006@yahoo.co.in) .mp4 பார்மட்டில் மொபைல் போனில் பதிவு செய்த தனது குரலை அனுப்பியிருந்தார். இன்று காலை 11 மணி வரை வேறு ஏதாவது குரல்கள் வருகிறதா என்று காத்திருந்துவிட்டு, பாடல் பதிவை முடித்துவிட்டோம்.

வீட்டிலேயே எளிமையாக ரெக்கார்டிங் செய்யப்பட்டது. சுஜாதாவின் நினைவாக!

பாடலை கேட்கும்போது வரிகளை இரசிக்க, வரிகள் கீழே தரப்பட்டுள்ளது. இங்கே கிளிக் செய்து பாடலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

22 comments:

R.Gopi said...

பிரபல பாடகர்களுக்கு சவால் விடும் குரல் வளம் உடைய தோழமைகள் ஜமால் மற்றும் சுந்தரவதனம் இருவருக்கும் வாழ்த்துக்கள்....

க.பாலாசி said...

பாடல் நல்லாருக்குங்க....

ISR Selvakumar said...

கோபி,
பாடலை பாடியிருப்பது இசையமைப்பாளர் விவேக் நாராயண். குழந்தைக் குரல் அவருடைய 13 வயது மகள், தன்யஸ்ரீ

ISR Selvakumar said...

பாலாசி,
இசையமைப்பாளருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுகின்றேன்.

ISR Selvakumar said...

ஜமால் மற்றும் சுந்தரவதனம் குரல்கள் போல இன்னும் பல குரல்களை எதிர்பார்த்தேன். ஏனோ தெரியவில்லை இணைய நண்பர்கள் தயங்கிவிட்டீர்கள்.

Sundaravadanam said...

dear selva, enna oru sindhanai ungalukku, vaazhthukkal, it is amazing.............

vaarthaigal kidaikkavillai ungalin indha verrikku vaazhtha....melum naan cinema kaaranum illai....vasanamaga korvaiyaga ungalin indha ...yaarum kanavilum ninathu paarkka mudiyadha muyarchikku.......paaratu solla!!!

miga miga arumai....paadalai paadiyavarukkum, imagine paana mudiyatha alavukku isai amaithullavarukkum enn manamaarndha aasigal..vaazhthukkal..

[thanks for using my voice--no it is not my voice after hearing through this...yes i feel like this]

naan ungal ethiril irundhaal ungalai katti thazhuvi vaazthiruppen :)

your ever loving friend :)

sundaravadanam

நட்புடன் ஜமால் said...

முதல் ஒலியேற்றம் மிக்க நன்றி அண்ணே மிக நெகிழ்வாய் இருந்தது

அதுவும் நாம் நேசிக்கும் ஒருவரின் வரிகள்.

மயூ மனோ (Mayoo Mano) said...

Really great...thanks for sharing..

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

பகிர்வுக்கு நன்றி.

உங்கள் இந்த பதிவை
இங்கேஇணைத்துள்ளேன்.

நன்றியுடன் ஒரு சுஜாதாரசிகன்

Ragztar said...

நல்ல பாடல் என்பதுடன், நல்ல பணி என்பதையும் சொல்லியாக வேண்டும்.

பினாத்தல் சுரேஷ் said...

மைக் சொதப்பியதாலும் வேறு வேலைகள் வந்துவிட்டதாலும் என் இனிய குரலைக் கேட்கும் பாக்கியத்தையும், மறுநாள் காது மருத்துவரிடம் போகும் செலவும் தப்பித்தது :-)

மன்னிக்கவும் செல்வா.

பாடல் மிக அருமையாக இருக்கிறது. விவேக்நாராயணனுக்கும் நன்றி.

Chitra said...

ஜமால் மற்றும் சுந்தரவதனம் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். அருமை. இசையமைப்பாளர் விவேக் நாராயண் அவர்களுக்கும் அவரின் மகள், தன்யஸ்ரீக்கும் வாழ்த்துக்கள். புதுமையான பாடல் முறையை அறிமுகப் படுத்தி, பதிவுலகத்தை கலகலக்க செய்திருக்கும் செல்வா அண்ணனுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் பல உண்டு. மற்றவர்களின் திறமைகளை தேடி அடையாளம் கண்டு வாழ்த்தும் உங்கள் அன்பு உள்ளத்துக்கு, பாராட்டுக்கள் அண்ணா!

ஸ்ரீராம். said...

நல்ல முயற்சி.சுஜாதாவுக்கு இசை அஞ்சலி.

Thenammai Lakshmanan said...

புதுமையான முயற்சி
வாழ்த்துக்கள் செல்வா

வாழ்த்துக்கள் சகோதரர் ஜமாலுக்கும்., சுந்தரவதனன் அவர்களுக்கும்

செந்தில் நாதன் Senthil Nathan said...

பாடல் அருமை!!

பங்கு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!

ISR Selvakumar said...

சுரேஷ், நீங்கள் சுஜாதாவை விசாலமாக இரசிக்கிறவர் என்று நமது ஷார்ஜா சந்திப்பில் அறிந்து கொண்டேன். அதனால் உங்கள் குரல் கட்டாயம் இடம் பெறவேண்டும் என்று நினைத்தேன்.

ISR Selvakumar said...

ஓவியன்,
உங்கள் பாராட்டுகளை எங்கள் குழுவினருக்கு சொல்லி விடுகின்றேன்.

Jaleela Kamal said...

இனிய பாடலுடன் இடையில் சகோ.ஜமால் மற்றும் சுந்தரவனம் குரல் வளம் அருமை. வாழ்த்துக்கள்

Annam said...

jamalna kural soopera irukku

Annam said...

dedication to sujatha sir also so wonderful

ISR Selvakumar said...

ஜலீலா - அன்னம்,
ஜமாலுக்கு ஒரு பெரிய இரசிகர் கூட்டம் இருக்கு போலருக்கே.

ப்ரியமுடன் வசந்த் said...

ஜமால் அண்ணா போன்ல கேட்டதவிட இங்க உங்க குரல் நெம்ப நல்லாயிருக்கேண்ணா...