அள்ளி எடுத்துப் போக முடியாத நிலவொளியாய்
என் மேல் எப்போதும் பொழிகிறாய் நீ!
ஒளிர்வதும் ஒளிவதும்
உன் இயல்பாக இருக்கிறது.
கதவுகள் இல்லாத வானத்தில்
நீ வந்து போகும் தடம் தெரியவில்லை.
ஆனால் நீ வரும்போதெல்லாம்,
எனக்கு நான் தெரிகிறேன்.
அது போதுமெனக்கு!
.................................................................................
12 comments:
ஒளிர்வதும் ஒளிவதும்
உன் இயல்பாக இருக்கிறது.
.......... அமாவசை அன்று, முழு மதிமுகம் மிஸ் செய்து எழுதப்பட்ட கவிதையும் படமும் நன்று. :-)
நீ வரும்போதெல்லாம்
எனக்கு நான் தெரிகிறேன்
சிம்ப்ளி சூப்பர்ப் அண்ணே
வளர்வும் தேய்வும் இல்லாமல் எப்போதும் உங்கள் மேல் பொழிகிறதா செல்வா
அருமை நண்பா!வாழ்த்துக்கள்
ஆனால் நீ வரும்போதெல்லாம்,
எனக்கு நான் தெரிகிறேன்//
அருமை
கலக்கல் நண்பரே !
அருமையான சிந்தனை !
"நினைவிடுக்கில் வழியும் நிலவொளி"
தலைப்பே ஒரு கவிதைதான்
நல்லா இருக்கு செல்வா
"அவர் " ரிலீஸ் எப்போ?
தென்னங்கீற்றிடுக்கில் ஒளிரும் நிலவு போல் உங்கள் நினைவிடுக்கில் வழிந்த கவிதை அழகு
வாழ்த்துக்கள்
விஜய்
நிலவொளியின் நிழலோடு எத்தனை நாள் நடைப்பயணம் துரத்தியபடி.
/நீ வரும்போதெல்லாம்
எனக்கு நான் தெரிகிறேன்//
ஒவ்வொரு வரியும் அருமை அருமை. வாழ்த்துக்கள்..
நல்ல கவிதை selva
Check by below (poem/photo)blog.
http://ivaikavidhaialla.blogspot.com
என்னை தொலைத்து உன்னை அடைந்த நிமிடங்கள் மீண்டும் இருதயத்தில் மணி அடித்த அந்த செழிப்பான காட்சிகள் என் கண் விழி நீங்க மறுக்கிறதே...இப்படிக்கு கிறுக்கன்...
www.gowthampoems.tk
Post a Comment