Thursday, March 11, 2010

மருதாணிச் செடியுடன் கொஞ்ச நேரம்


இரவு! பின்னிரவு!
மருதாணிச் செடியிடம் கொஞ்ச நேரம்,
பேசிக் கொண்டிருந்தேன்.
ஆமாம்! அப்படித்தான் நினைக்கிறேன்.
பேசிக் கொண்டிருந்தேன், மௌன மொழியில்!

மருதாணி இலைகளில் பொதிந்திருக்கும் சிவப்பை
நான் உணர்நதது போல,
எனக்குள் பொதிந்திருக்கும் அன்பை
மருதாணிச் செடி உணர்ந்திருந்தது.

நாளை யார் கையிலாவது மருதாணி சிவக்கும்.
அந்தச் சிவப்பில் நான் இருப்பேன்.

இனிய பொழுதுகள் தொடரட்டும்!

7 comments:

Chitra said...

பவித்ராயாய நாமம் அபிஷ்டு பந்த்யாய ......
சர்வம் பவித்ரம் பவ!

gulf-tamilan said...

கவிதை நல்லாயிருக்கு!!!இன்னும் எதிர்பார்க்கிறோம்

R.Gopi said...

மருதாண் செடியுடன் பேசி விட்டு, அப்படியே மருதாணி இலையுடனும் பேசி விடுங்கள்...

நல்லா சிவக்கும்...

அடுத்து என்ன செம்பருத்தியுடனா??

Eljay said...

Good To read this poem. Expecting your 140 character poems! Why dont you Consider it as a blog post or a short book?

Thenammai Lakshmanan said...

அருமை செல்வா

அழ அடித்த கவிதை

ஸ்ரீராம். said...

நல்ல கவிதை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மருதாணி செடியருகில் கவிதையாய் சில வரிகள்..
மனதை கவரும் வண்ணம் உள்ளது..
சூப்பர்..