பெண் ஒரு வீட்டின் மகிழ்ச்சி!
இன்றோ ஒரு தேசத்தின் துயராக செந்தழலில்!
மலர்கள் உதிர்வது இயல்பு - ஆனால்
மலர்கள் எரிவது வேதனை!
ஒரு கயிறு சில உயிர்களை முறிக்கும் என்றால்,
ஓர் உயிர் அந்தக் கயிற்றை எரிக்காதா?
விதைகள் மலராகும் -ஆனால்
ஒரு மலரே விதையான தருணமிது!
மலரே,
உன் மரணத்தால்
மரண தண்டனை முற்றாக ஒழியும் நாளன்று
நீ மீண்டும் உயிர்த்தெழுவாய்!
அந்த நாள் வரும் வரையில்
உன் குடும்பத்தில் ஒருவராக,
நானும் இந்த தேசமும்
உன் தியாகத்தின் சுடர் அணையாமல் காத்திருப்போம்!
(சகோதர சகோதரிகளுக்கு வேண்டுகோள்!
மரணதண்டனை போலவே தீக்குளிப்பதும் கொடுமையானது.
அதை விட்டொழிப்போம்!)
3 comments:
கவிதை நல்லா இருக்குன்னு எப்படி சொல்றது.
என்னதான் நடந்தது 'Rajiv Gandhi' கொலை வழகில்? யார் நிரபராதி? யார் குற்றவாளி? ஒரு மைரும் புரியல என்னக்கு.
Enna solla ,
Post a Comment