Saturday, November 26, 2011

பாவம் சில்க் ஸ்மிதாக்கள்!

டர்ட்டி பிக்சர் என்ற ஹிந்திப் படத்தில் சில்க் ஸ்மிதாவாகத் தோன்றுகிறார், வித்யா பாலன்.

 மீடியாக்கள் சிலிர்த்து எழுந்துவிட்டன. சில்க் உயிருடன் இருந்தபோது, தாங்கள் எழுதிய வக்ரமான கிசுகிசுக்கள், கற்பனையாக புனைந்த செய்திகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, சில்க் ஸ்மிதா ஒரு பெண் என்றும் அவர் அப்பாவி என்றும் திடீரென கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தக் கரிசனம் கூட சில்க்காக தோன்றுவது வித்யாபாலன் என்பதால்தான். சில்க்கின் வேடத்தில் அனுராதா ஒப்பந்தமாகி இருந்தால், மீடியாக்களின் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் ஊடகங்களின் உண்மையான கோர முகம்.

சில்க் ஸ்மிதாவின் உயர்வுக்கும், புகழுக்கும், கடைசி காலத்தில் அவர் அனுபவித்த மன அழுத்தங்களுக்கும், மீடியாக்களின் பொறுப்பற்றதனத்துக்கும் பங்கு உண்டு.

இன்று காலை கூட அங்காடித் தெரு புகழ் அஞ்சலி ஒரு பத்திரிகையில் புலம்பியிருந்தார். சில வருடப் போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அதற்குள் நடிகர் ஜெய்யுடன் என்னை இணைத்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது எனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

உற்று கவனியுங்கள், அஞ்சலியை புலம்ப வைத்திருப்பது நீங்களோ நானோ அல்ல. அகோரப் பசியுடன் திரியும் பொறுப்பற்ற பத்திரிகைகள்.

பாவம் சில்க் ஸ்மிதாக்கள்!

4 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பத்திரிகையாளர்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டால் நல்லது. எறியற கல்லை எறிஞ்சு வைப்போம்னு செய்றது சரியில்லை

ISR Selvakumar said...

ரூஃபினா,
நீங்கள் சொன்னபின் தான், ஃபேஸ்புக்கில் எழுதுவதையும் பிளாகில் தொகுக்கலாமே எனத் தோன்றியது.

இன்று முதல் துவங்கியிருக்கிறேன். எல்லாப் புகழும் உங்களுக்கே.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஹைய்யோ !! எல்லாப் புகழும் இறைவனுக்கே செல்வா!

செந்தில்பாரதி.. said...

நீங்கள் சொலது கண்டிப்பாக உண்மைதான்...
9 தார அடுத்தவள் புருசனோட சுத்தினா அது காதலாம்...
சினேகன் அடுத்தவன் பொண்டாட்டியோட சுத்தினா அது கள்ளகாதலாம்...
மானங்கெட்ட பாத்திரிகையாலனே இதோடு நிறுத்திக்கொள்...
உப்புக்கு உதவாத(கோல வெறி பாடல் ) செய்தியை உலகம் அறிய செய்து விட்டு,
உலகம் அறிய வேண்டியதை(ஈழம் மக்கள் நிலை) எழுத மறுக்கிறாயே..
இதுதான் உனக்கு அழகா...