Monday, March 5, 2012

Two Flower - வி.எல்.சியின் அடுத்த அதிரடி வெர்ஷன்

ஆரம்பத்தில் ஆபரேடிங் சிஸ்டங்களுக்கு இடையில்தான் போட்டி. ஆடியோ வீடியோ ப்ளேயர்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தன. டிஜிட்டல் தொழில் நுட்பம் துவங்கியவுடன், சிம்பு-தனுஷ் போட்டி போல லைட்டாக சூடாகின. தற்போது HD எனப்படும் High Definition வீடியோக்களின் காலம். யார் சூப்பர் ஸ்டார் என்கிற ரேஞ்சுக்கு மீடியா ப்ளேயர்கள் ஷாருக் - அமிதாப் போல குஸ்தியில் இறங்கிவிட்டன.

தற்போது தயாராகும் குறும்படம் முதல் நெடும்படம் வரை, எல்லாமே HD தான். இந்த வீடியோக்களை இயக்காத மீடியா ப்ளேயர்கள் பாகவதர் காலத்து ப்ளேயர்களாக ஓரம்கட்டப்பட்டுவிட்டன.

ஆனால் இரசிகர் மன்றமே உண்டு என்று சொல்லும் அளவுக்கு VLC இந்தியாவில்  மிகப் பிரபலம். வெர்ஷன் VLC 1.1.x கிட்டத்தட்ட ஒரு ரஜினி. இதுவரை 485 மில்லியன் முறை டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த டவுன்லோடர்களின் பட்டியலில் இந்தியர்களே அதிகம்.

தற்போது Two Flower என்ற பெயரில் VLC Ver 2.0 அறிமுகமாகியிருக்கிறது. ஏற்கனவே சக்ஸஸ் என்பதால், ரஜினி பட பஞ்ச் டயலாக்குகள் போல எக்கச்சக்க ஃபில்டர்கள் மற்றும் புது கோடக்குகளுடன் (Codec) ஆரவாரமான வரவேற்பு. ஆபரேடிங் சிஸ்டம் எதுவாக இருந்தாலும், எந்த வீடியோ ஃபார்மட்டாக இருந்தாலும் VLC 2.0 அட்டகாசமாக படம் காட்டும்.


  • பரிசோதனை முயற்சியாக Blue-Ray வீடியோக்களை பார்க்க வசதி உள்ளது.
  • விண்டோஸ்  7, Android, iOS and OS/2 - பல வீடியோ ப்ளேயர்கள் இந்த புதிய இயங்குதளங்களில் நொண்டி அடிக்கும். ஆனால் VLC ஐஸ்வர்யா ராய் கன்னங்களைப் போல வழு வழு என்று வீடியோக்களை இயக்கும்.
  • iOS, Android and OS/2 இவற்றில் சில ஆடியோ ப்ளேயர்கள் தொண்டை கட்டிய பாடகர்கள் போல தடுமாறுகின்றன. ஆனால் VLC ஸ்ரேயா கோஷல் போல அம்சமாகக் குழையும்.
  • அனைத்து பிரவுசர்களுடனும் சிநேகமாக இயங்க சில திருத்தங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இணைய வீடியோக்களையும் அமர்க்களமாகப் கொலை வெறி பாட்டு போல ஜாலியாகப் பார்க்கலாம்.
  • Mac பயன்படுத்துபவர்களுக்கு தோற்றம், அதிக பயன் என கிட்டத்தட்ட எல்லாமே புதிதாக இருக்கும்.



Vlc 2.0 - Two Flower டவுன் லோடு செய்ய இங்கே க்ளிக்குங்கள். 

1 comment:

ஹாலிவுட்ரசிகன் said...

நமக்கு VLCஐ விட KMPlayer இல்லாட்டி Media Player Classic தான் பெஸ்ட். Forward, Rewind, Volume ஃபங்க்ஷன்ஸ் KMPlayerஇல் ரொம்ப ஈஸி.

புதிதாக அவர்களின் Potplayer என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் நன்றாகவே இருக்கிறது.