"யார் மேலயாவது கோபம்னா செல்வி இப்படிதான் பண்ணிடுது"
இது கலைஞரின் வசனம். படத்தில் எழுதியது அல்ல, நிஜத்தில் கூறியது.
தினகரன் விவகாரம்
முதன் முதலில் அழகிரிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கருணாநிதியின் மகள் செல்வியும், அவர் கணவரும் செல்வமும்தான். ஒரு கட்டத்தில் உடல்நலம் பாதிக்கிற அளவுக்கு வாக்குவாதம் சூடாகி, செல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
தினமலர் விவகாரம்
சன் டிவி நியூஸ் எடிட்டர் ராஜாவுக்குப் பதிலாக, செல்வம் தன்னையே முன் நிறுத்திக் கொண்டார் அல்லது மாறன் சகோதரர்களால் நிறுத்தப்பட்டார். இப்போது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் நேரடி பாதிப்பு செல்வத்துக்குத்தான்.
தினகரன் விவகாரத்தில் தனது கணவர் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த விஷயத்தில் மிகவும் அப்செட் ஆனார் செல்வி. தற்போது தினமலர் விவகாரத்தில் கணவருக்கே நேரடி பாதிப்பு என்றதும் கலைஞரிடம் மிகவும் கோபித்துக் கொண்டதாகத் தகவல்.
இன்று பெங்களுருவிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.
"யார் மேலயாவது கோபம்னா செல்வி இப்படிதான் பண்ணிடுது", சென்ற முறை செல்வி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது கலைஞர் இப்படித்தான் சொன்னாராம்.
இந்த முறையும் அதே டயலாக்கை சொல்வாரா? அல்லது யார் மேலயாவது கோபம்னா நான் இப்படித்தான் செய்வேன் என்று தடாலடியாக எதையாவது செய்வாரா?
கணவருக்கே பாதிப்பா என்று கொதித்துப் போய் பார்த்துக்கொண்டிருக்கிறார் மருமகள் செல்வி . . .
தனக்கே பாதிப்பா என்று குழப்பத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார் மருமகன் செல்வம் . . .
நமக்கு நேரடி பாதிப்பில்லை என்று நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பேரன்கள் மாறன் பிரதர்ஸ் . . .
சின்னப்பசங்களுக்கு இடங்குடுக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன் என்று, பொறுமிக்கொண்டிருக்கிறார் மகன் அழகிரி.
பாசப் பறவைகள் சீசன் 2 ஆரம்பித்துவிட்டது என நான் நினைக்கிறேன்.
4 comments:
சில நேரங்கள்ல சந்தர்ப்பம் சானக்கியர்களையும் சொழட்டி அடிக்குதுன்னு இதுலருந்து புரியுது !செல்வா சார்!
அரசியலில் கடுமை போற்றப்படும்.
குடும்பத்தில் கடுமை தூற்றப்படும்.
கலைஞர் கடுமையான அரசியல் தலைவர், அதே சமயத்தில் குடும்பத் தலைவர். அவருடைய கடுமை சில நேரங்களில் அங்கே மதிப்பிழக்கிறதாக நான் நினைக்கிறேன்.
கருணாநிதியை இப்போது கட்சியிலும், பொது வாழ்க்கையிலும் காப்பது அவர் வளர்த்து வந்த பிம்பம். அவரின் குடும்ப உள் வட்டத்தில் அது அதல பாதாளத்தில் இருக்கிறது. முதுமை காரணமாக அன்றாட செயல்களுக்கு உற்றாரை சார்ந்திருப்பது அதிகரிக்க, அதிகரிக்க அவரின் குடும்பத்தினர் மீதான ஆளுமை குறைந்து வருகிறது. இது அவருக்கும், கட்சிக்கும் நன்றாகப் புரிந்தாலும் no one admits the fact in open. No one dare to step into his shoes to give him some respite. அப்படி வருபவர் மீதான நம்பிக்கையின்மையுமே கருணாநிதியை தள்ளிச் செலுத்துகிறது. .யாரும் வெளிப்படையாகச் ஒப்புக்கொள்ளப் போவதில்லையெனினும், ஸ்டாலின் பட்டமேற்கும்போது அவரை பகடைக்காயாக பயன்படுத்த கட்சி முழுவதுமே காத்துக் கொண்டிருக்கிறது. இப்போதே அவர் முதல்வராகி கருணாநிதியின் மேற்பார்வையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டால், நம்ம பப்பு வேகாது என்ற சுயநலக் கணக்கே கருணாநிதியை ஆயுசுக்கும் தலைவர் என பிரகடனம் செய்ய வைக்கிறது.
He could learn to gracefully retire from dear comrades Jyothi Basu or HarKishen Singh Surjith.
Can't become a cannon fodder like gnani to the murattu bakthars.
Me the escape.
அனானி சார்,
//முதுமை காரணமாக அன்றாட செயல்களுக்கு உற்றாரை சார்ந்திருப்பது அதிகரிக்க, அதிகரிக்க அவரின் குடும்பத்தினர் மீதான ஆளுமை குறைந்து வருகிறது.//
மிகச் சரி. நம்ம எல்லாருடைய வீட்டிலும் நடக்கிற விஷயம்தான்.
//No one dare to step into his shoes to give him some respite. அப்படி வருபவர் மீதான நம்பிக்கையின்மையுமே கருணாநிதியை தள்ளிச் செலுத்துகிறது.//
இதில் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. "No one" லிஸ்டில் ஒரே ஒருவர்தான் இருக்கிறார். அவர் பெயர் ஸ்டாலின்.
//He could learn to gracefully retire from dear comrades Jyothi Basu or HarKishen Singh Surjith.//
கருணாநிதியின் ரிடையர்மெண்ட் என்பது அகில இந்திய அளவில் அரசியல் கணக்குகளை மாற்றக்கூடியது. எனவே அது நடக்கப்போவதில்லை. ஜோதி பாசுவிற்கும், ஹர்கிஷன் சிங்கிற்கும் அந்தச் சுமை இருக்கவில்லை.
//Can't become a cannon fodder like gnani to the murattu bakthars.//
ஞாநி கருணாநிதிக்கு எதிராக மக்களை மூளைச் சலவை செய்பவர். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த் போல, பாயின்ட் பிளாங்க்காக கருணாநிதியை எதிர்க்காமல், நடுநிலை ஜிகினாக்களை பயன்படுத்தப் பார்க்கிறார். அதனால்தான் அவர் மேல் முரட்டு மற்றும் வறட்டு பக்தர்களுக்கு கோபம்.
அதனால் நீங்கள் பயந்து போய் எஸ்கேப் எல்லாம் ஆக வேண்டாம்.
Post a Comment