Monday, September 22, 2008

வடிவேலு மோதலால் வயசுக்கு வந்திருக்கும் புது மொட்டு விஜயகாந்த்

திடீரென நாணிக் கோணி பேச ஆரம்பித்தால்
அந்தப் பெண் வயசுக்கு வந்து விட்டாள் என்று அர்த்தம்
திடீரென மாற்றி மாற்றிப் பேசினால்
அந்த அரசியல்வாதி வயசுக்கு வந்துவிட்டார் என்று அர்த்தம்.

காதல் படத்தில் ஹீரோ பரத் மோதியவுடன், ஹீரோயின் சந்தியா சட்டென வயசுக்கு வந்து விடுவார். அதே போல சினிமா காமெடியன் வடிவேலு ஒரு ஹீரோவைப் போல மோதியதும், அரைகுறை விஜயகாந்த் ஒரு ஹீரோயின் போல விசுக்கென முழு அரசியல்வாதியாக பூப்பெய்திவிட்டார்.

வடிவேலு மோதலை (அகில உலகமும் எதிர்பார்த்தது போல) கருணாநிதியின் சதி என்று அவர் சன் நெட்வொர்க்கில் அளித்த பேட்டி சூப்பர் காமெடி.

புதுசாக வயசுக்கு வந்திருக்கும் அரசியல்வாதி விஜயகாந்தின் பல்டிக்கு சில சாம்பிள்கள்.

அன்று
யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். கூட்டணி வைத்தால் ஊழல்தான் பெருகும்.

இன்று
தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வேன் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் கூட்டணி வைப்பேன்.(கையெழுத்தெல்லாம் வாங்காம, கம்யூனிஸ்டுகளுடன் ஏற்கனவே பேச ஆரம்பிச்சிட்டாரு)

அன்று
குடும்ப அரசியல் செய்ய மாட்டேன்.
இன்று
மச்சினன் சுதிஷிம், மனைவி பிரேம லதாவும் கட்சிக்கு உழைப்பதில் என்ன தவறு?

அன்று
பவர்கட்டுக்கு காரணம் மின்வெட்டு ஆற்காடு வீராசாமியின் திறமைக் குறைவுதான்
இன்று
எனது பேச்சை மக்கள் பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பவர் கட் என எனக்கு செய்தி வந்துள்ளது.

அன்று
(சென்ற வருடம்) வடிவேலு குடித்துவிட்டு கலாட்டா செய்கிறார்
இன்று
வடிவேலு விவகாரம் கருணாநிதியின் திட்டமிட்ட சதி

அன்று
கருணாநிதியைப் போல எனக்கு பதவி ஆசை கிடையாது
அன்றே
2011ல் நான் முதலமைச்சர் ஆவேன்

13 comments:

rapp said...

:):):)

ers said...

சூப்பர் தலைப்பு

Anonymous said...

ஆகட்டுமே , அப்பனும் மகன்களும் சேர்ந்து நாட்டை வித்ததை அவர் வந்தாவது காக்கட்டும் , இப்ப உள்ளதை விடவா நிலைமை மோசமாயிடும்?

Anonymous said...

ஹ ஹா உண்மையான காமடியன் வி.கா தான்

Dr. சாரதி said...

ஒரு இடத்தில் ஜெயித்ததற்கே இந்த அளவுக்கு வன்முறை என்றால், பத்து இடத்தில் ஜெயித்து விட்டால் இந்த நாடு என்னாகுமோ என்று பயமாக இருக்கிறது.

Unknown said...

SUPER BACK SHOT,ANNAA

Unknown said...

சூப்பர் நெத்தியடி , தன் முதுகில் உள்ள அழுக்கு தனக்கு தெரியாது உண்மைஇன்கேறது நீருபித்துள்ளார்,

அத்திரி said...

கவுண்டமணி சொன்னது போல் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா'

அத்திரி said...

கவுண்டமணி சொன்னது போல் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா'

அத்திரி said...

கவுண்டமணி சொன்னது போல் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா'

Sathiya said...

இந்த காமெடியை பத்தி சொல்லவே இல்லையே:

//கடந்த வரும் எனது தங்கச்சி மாப்பிள்ளை இறந்தார். அப்போது நான் கோவையில் இருந்தேன். நான் வந்திருக்கலாம். ஆனால் அப்போது ஒரு கல்யாணத்தில் கலந்து கொண்டதால் வர முடியவில்லை. அப்போது இங்கே சில பிரச்சினைகள் நடந்து விட்டன (வடிவேலு வீட்டின் மீது விஜய்காந்த் ரசிகர்கள் தாக்கிய சம்பவம்). அதுதொடர்பாக கேஸ் நடந்து கொண்டிருக்கிறது.//
தங்கச்சி புருஷன் சாவுக்கு வர்றத விட, கல்யாணத்துல போயி அறிக்கை விடறதா முக்கியம்?

//சக நடிகரை தாக்கலாமா என்கிறார். அவர் சக நடிகர் என்றால், எனது தங்கை கணவர் இறந்தபோது நான் இல்லாத நிலையில், அவர் நல்லது செய்திருக்கலாம். அதை செய்யவில்லை. பிரச்சினைதான் செய்தார்.//
இவரு கல்யாணத்துல போயி கூத்தடிப்பாராம், மத்தவங்க வந்து இவரு குடும்பத்துக்கு உதவி பண்ணனுமாம். என்ன கொடுமை இது?

Anonymous said...

Pothu valkainu vanthuta ithellam sagajamappa.

மங்களூர் சிவா said...

:):):)