
"அமெரிக்க ஜனாதிபதிக்கு சவால்விடுகிறேன்", என்று சந்து முனைக் கூட்டத்தில் யாரோ ஒரு பேச்சாளர் ஏதோ ஒரு கட்சியின் சார்பில் குவார்டர் அடித்துவிட்டு முழங்கிக் கொண்டிருந்தார் (அட கை தட்டுங்கப்பா என்று அவரே அன்பு வேண்டுகோளும் விடுத்தார்)
சந்து முனைக்காரர் அமெரிக்க ஜனாதிபதிக்கு சவால் விடுகிற காமெடியெல்லாம் சகஜம். ஆனால் பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி, சந்து முனைக் காரருக்கு சவால் விட்டால் . . .
ஆச்சரியம், கோபம், கையாலாகாத்தனம்,கேவலம் அவ்வளவுதானா என சகல நெகடிவ் உணர்வுகளையும் கலந்து, ஜீரணிக்க முடியாமல்,ஒரு அமெரிக்கன் நொந்து போவானா மாட்டானா?
அப்படி ஒரு நொந்து போன ஒரு மனநிலைதான் விஜயகாந்த் இரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு திடீரென வந்துவிட்டது. கலைஞருடன் மோதல், ஜெயலலிதாவுடன் விளாசல் என ஒண்டிக்கு ஒண்டி பிளந்து கட்டியபோது "அசத்துறான்யா" என விஜயகாந்துக்கு கைதட்டியவர்கள் எல்லாம், வடிவேலு எபிசோடில் பொசுக்கென "நல்லாத்தான போய்க்கிட்டிருந்திச்சி" என கன்னத்தில் கை வைத்து நொந்திருக்கிறார்கள்.
விஜயகாந்த் இரசிகர்களைப் பொருத்தவரை கலைஞரும், ஜெயலலிதாவும் வில்லன்கள். இந்த பிரமாண்ட வில்லன்களின் இடத்தில் இனி ஒரு 'கைப் புள்ளையா'? இனிமேல் இந்த காமெடியன் கூடவா நம்ம தலைவர் மோதணும். ஐயய்ய நல்லால்ல, எப்படியாவது கதையை மாத்துங்க, என்று ஏமாற்றமும் கையாலாகாத்தனமும் மிக்ஸ் ஆகி இரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார்கள்.
விஜயகாந்த்தை கலைஞர் முரசொலியில் புரட்டியெடுத்த போதும், ஜெயலலிதா 'குடிகாரன்' என வறுத்தெடுத்த போதும் அவற்றை அனல் பறக்க இரசித்தார்கள். ஏனென்றால் அவர்களுடைய விளாசல்களால் விஜயகாந்தின் மவுசு கூடிக்கொண்டே வந்தது. ஆனால் ஒரு கைப்புள்ளையின் சவால் அவர்களை நிலை குலைய வைக்கிறது. இவன் கூட மோதுனா தலைவருக்கு அசிங்கம், மோதாம விட்டா பங்கம். இப்ப என்னடா செய்யறது?
இதே மனநிலைதான் விஜயகாந்துக்கும். அதனால்தான் கைப்புள்ளையை இயக்குவதும் கருணாநிதிதான் என்று மீண்டும் தி.மு.க மேல் பாய்கிறார். விஜயகாந்தின் சினிமா இரசிகனாக இருந்து அரசியல் ஆதரவாளராக மாறிய அனைவருக்கும் இப்போது குழப்பம். தலைவர் படம் தீடீர்னு ஏன் இப்படி ஆயிடுச்சு? வடிவேலு வில்லனா வெறும் காமெடியனா?
வடிவேலுவை அப்படியே விட்டா பயமிருக்காது. தொட்டா பாப்புலாரிட்டி ஏறிடும். தொடலாமா? வேண்டாமா? கலைஞர் திட்டத்திட்ட நம்ம தலைவருக்கு மவுசு ஏறின மாதிரி, நம்ம தலைவர் திட்டத் திட்ட ஒரு கைப்புள்ள பாப்புலர் ஆகுதே. தலைவரையே ஜெயிப்பேன்னு சவால் விடுதே. இப்ப என்ன பண்றது? தொடலாமா? கூடாதா?
ஸ்ஸ்ஸ்.... அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே . . .
இன்றைக்கு விஜயகாந்த் இரசிகர்களின் மனநிலை இதுதான்
22 comments:
nalla eluthureenga boss... punch dialog maathiri sollittu poyudareenga. konjam virivaavum eluthuna nalla irukkum :)
///தலைவருக்கு அசிங்கம், மோதாம விட்டா பங்கம்.///
ஜூப்பரப்பு !!!
:-))
நன்றாக எழுதியுள்ளீர்கள்.நன்றி.
அனானி நண்பரே,
இதையே நான் விரிவா எழுதிட்டதா நினைச்சு எடிட் பண்ணி வெளியிட்டிருக்கேன்.
ஆமா . . . உங்க பேர் என்ன?
செந்தழல் ரவி,
நீங்க வடிவேலு இரசிகர் . . . ஸாரி ஆதரவாளர் போலருக்கு?
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்
ஆனால் ரஜினிக்கு இல்லாத தைரியம் (!) வடிவேலுக்கு இருக்குதுன்னு நினைக்கிறேன்
நேற்று இரவு வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது .. இதற்கு அண்ணன் கைப்புள்ள தலைமை தங்கினார்.
கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
"சிவனேன்னு தன்வழியே போயிட்டு இருந்த சிங்கத்தை சீண்டி உசிப்பி உட்டதால ...அரசியல் எதிரிகளை அரசியல் அரங்கிலே அடித்து விரட்ட ... அண்ணன் கைப்புள்ள தலைமையில் செயல்பட்டு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்று முதல் வருத்தப்படாத வாலிபர் கழகமாக செயல் படும்".
பொதுச்செயலராக நாய் சேகர் நியமிக்க பட்டுள்ளார்..
பொதுக்குழு கூட்டத்தில் எடுக்க பட்ட சில முக்கிய தீர்மானங்கள் :
* மூத்திர சந்தில் கூபிட்டு அடித்து வீரத்தை காட்டாமல் ..வீட்டில் கோளைதனமாக கல்லேரிந்ததை கண்டித்தும்.
* சின்னபுள்ளை தனமா அண்ணன் விட்ட சவடாலுக்கு எதிர் சவடால் விட்டு அண்ணனை அசிங்கப்படுதியதர்க்கும் .
கண்டனம் தெரிவிக்கப்பட்டது .
//அண்ணன் கைப்புள்ள தலைமையில் செயல்பட்டு வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்று முதல் வருத்தப்படாத வாலிபர் கழகமாக செயல் படும்".//
சங்கம் கழகமாகிவிட்டதால் இனிமேல் எல்லாம் கலகம்தான்.
ரகுநாதன்
//
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்
ஆனால் ரஜினிக்கு இல்லாத தைரியம் (!) வடிவேலுக்கு இருக்குதுன்னு நினைக்கிறேன்
//
வடிவேலு வீட்டில் கல்லை அடிக்கும்போது கூடவே 'தல' அஜித் வாழ்க என்று ஒரு பிட்டைப் போட்டார்களாம்.
அதே போல நீங்களும் குழப்பாச்சை குப்பாச்சாக்க ரஜினியை இழுக்கறீங்களாக்கும்.
எல்லாம் ஒரு குரூப்பாத்தான் இருக்கீங்க.
அனானித் தலைவா
இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி! ஏதோ கைப்புள்ளைக்கு நம்மளால ஆன ஒரு கையெறி குண்டு.
கேப்டன் படத்துல கைப்புள்ளயும் இருந்தா அசத்தும்ல.
வாங்க சரவணக்குமரன்.
வருத்தப்படாத வாலிபர் கழகத்துல சேர்ந்துட்டீங்களா?
வடிவேலுவுடன் ஏற்பட்ட மோதலால் விஜயகாந்த் தன்னைத்தானே தரம் தாழ்த்திவிட்டார். முதலிலேயே இந்த பிரச்னையை அவர் சரி செய்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் விஜயகாந்த் தான் பெருந்தன்மை இல்லாதவர் என்பதை காட்டிவிட்டார். என்ன செய்வது அவரும் கூத்தாடிகளில் ஒருவர் தானே. கூத்தாடிகளை அரசியலில் ஆதரிக்கும் நிலை இருக்கும்வரை இதுபோன்ற காமெடிகள் தொடரத்தான் செய்யும்.
//வடிவேலுவுடன் ஏற்பட்ட மோதலால் விஜயகாந்த் தன்னைத்தானே தரம் தாழ்த்திவிட்டார்.//
கலைஞர் மற்றும் ஜெயலலிதாவுடன் மோதினால் தரம் உயரும். வடிவேலுவுடன் மோதினால் தரம் தாழ்ந்துவிடும். இதுதான் விஜயகாந்த் இரசிகர்களின் மனநிலை.
//
முதலிலேயே இந்த பிரச்னையை அவர் சரி செய்திருக்க வேண்டும். //
அட நம்ப கைப்புள்ளதான, ஒரு தட்டு தட்டிட்டா பயந்திடுவார் என்று கேப்டன் அசட்டையா இருந்துட்டாரோ?
//கூத்தாடிகளை அரசியலில் ஆதரிக்கும் நிலை இருக்கும்வரை இதுபோன்ற காமெடிகள் தொடரத்தான் செய்யும்.//
இதற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பக்தர்கள் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
//இதற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பக்தர்கள் பதிலளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.//
சனியன்! எப்படிக் கோத்துவிடுது பாரு!
மிஸ்டர் - - சேகர்,
இதற்கு பெயர் கோர்த்துவிடுவதல்ல, கொத்திவிடுவது.
அப்புறம் . . .
உங்கள் பெயருக்கு முன்னால் இருந்த இரண்டு எழுத்துக்களை எடுத்துவிட்டால் நன்றாக இருக்கிறது.
அப்புறம் . . .
'சனியன்'னு செல்லமாதான சொன்னீங்க.
தெலுங்கு நாயக்கருக்கே இந்த வீரம் என்றால் அசல் தமிழனுக்கு எந்த அளவு இருக்கும்
அனானி நண்பரே,
//தெலுங்கு நாயக்கருக்கே இந்த வீரம் என்றால் அசல் தமிழனுக்கு எந்த அளவு இருக்கும்//
என்னடா 'தெலுங்குப் பிரச்சனையை' யாருமே உருவலயேன்னு நினைச்சேன். உருவேத்திட்டிங்க.
அப்பாடி கைப்புள்ளைக்கு தமிழன் என்று பிராண்ட் குத்தியாச்சு.
புள்ளை இனிமே அரசியலுக்கு ரெடி.
அனானி நண்பரே,
//தெலுங்கு நாயக்கருக்கே இந்த வீரம் என்றால் அசல் தமிழனுக்கு எந்த அளவு இருக்கும்//
என்னடா 'தெலுங்குப் பிரச்சனையை' யாருமே உருவலயேன்னு நினைச்சேன். உருவேத்திட்டிங்க.
அப்பாடி கைப்புள்ளைக்கு தமிழன் என்று பிராண்ட் குத்தியாச்சு.
புள்ளை இனிமே அரசியலுக்கு ரெடி.
இது கை புள்ளையா இல்ல தம்பி வேலு பிள்ளையானு போக போக தெரியும்
அனானி நண்பரே,
வடிவேலுவை வெடிவேலுவாக்காம விடமாட்டீங்க போலருக்கு!
நண்பர் செல்வகுமார் அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி.நேரமிருந்தால் விஜயகாந்த் பற்றிய எனது இன்றைய பதிப்பை பாருங்கள் .
http://arivili.blogspot.com/2008/09/blog-post_24.html
//
ஸ்ஸ்ஸ்.... அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே . . .
இன்றைக்கு விஜயகாந்த் இரசிகர்களின் மனநிலை இதுதான்
//
:))))
கலக்கல்
Post a Comment