
ஏதோ ஒரு பாலிவுட் படத்தின் ஆடியோ வெளியீடு. நாங்கள் உத்திரப் பிரதேசத்துக்காரர்கள், அதனால் நாங்கள் கண்டிப்பாக இந்தியிலே பேச வேண்டும்" என்று ஜெயாபச்சன் பேசிவிட்டார். தொடர்ந்து பிரியங்கா சோப்ராவும் இந்தியில்தான் பேசினார்.
உடனே மஹாராஷ்டிராவின் 'தாதா வகையறா' காவலர்களான பால் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் வெகுண்டு எழுந்துவிட்டார்கள். "பச்சன் குடும்பத்துக்கு உப்பு போட்டது, சோறு போட்டது, குழம்பு ஊத்துனது எல்லாமே மஹாராஷ்டிராதான், அப்படி இருக்கும்போது நீங்க மராத்தியில பேசாம ஏன் இந்தியில பேசி மராத்தியர்களை அவமதிச்சீங்க" என்று பச்சன்களை எதிர்த்து வெறியாட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
மஹாசாஷ்டிரா நவ்நிர்மான் சேனாவும், சிவசேனாவும் ஒரே நேரத்தில் அமிதாப் குடும்பத்தை வார்த்தைகளால் குதறி எடுத்தன. அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் படங்களை வெளியிட முடியாதபடி தியேட்டர்களை சூறையாடின.
நொந்துபோன அமிதாப் டிவி வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் மராத்தியர்களிடம் மன்னிப்பு கோரினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்தான் மேலே காணப்படுபவை.
நம்ம ஊரிலும் அப்படி ஒரு சாஃப்ட் டார்கெட் இருக்கிறார்.
அவர் பெயர் ரஜினிகாந்த்.
6 comments:
இதை இன்னைக்கு பதிவா போட்டதுல ஏதாவது உள்குத்து இருக்குங்களா?
இது 'என்ன குத்து' என்பதை கடைசி வரி சொல்கிறது.
mannipuketathu enpathu oru phothu varthai. aanal iruvsangalum veveru thanmai kondathu enpathuthaan unmai
பாலா,
'மன்னிப்பு கேட்டது' மட்டுமல்ல,
'மிரட்டப்பட்டதும்' இதில் பொதுவானதுதான்.
ஆகா..தேவையில்லாமல் வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வோர் எல்லாம் இந்தப் பட்டியலில் வருவார்கள் என்றால் நம்ம சுப்ரமணியம் சுவாமியும் இருப்பாரே..
லோஷன்,
மற்றவர்கள் வெளியிலிருந்து வந்து கலகத்தில் மாட்டிக்கொள்பவர்கள்.
ஆனால்,
சு.சுவாமி வெளியிலிருந்து வந்து கலகத்தில் மாட்டிவிடுபவர்.
Post a Comment