- தனியாக நின்று வீணாகப் போவார் என்று 142 பேரும்
- கூட்டணி சேர்ந்து கல்லா கட்டுவார் என்று 325 பேரும்
கிட்டத்தட்ட நூறு நாட்கள் நடந்த இந்த கருத்துக் கணிப்பில் பதிவான வாக்குகள் மொத்தம் 467.
ஜனவரி முதல் வாரத்திலேயே நமது கருத்துக் கணிப்பு முடிந்துவிட்டது. ஆனாலும் நமது கேப்டன் உளறுவதற்க்காக காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே நேற்று கள்ளக் குறிச்சியில் நடந்த நிதியளிப்பு மாநாட்டில் தனது கள்ளத் தனத்தை ஆரம்பித்துவிட்டார்.
அதாவது 100 நாட்கள் முன்பு வரை யாருடனுமே கூட்டணி கிடையாது என்று அலட்டியவர், நேற்று தேசியக் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி உண்டு என்று பல்டி அடித்துவிட்டார்.
எனவே விஜயகாந்துக்கு இன்று முதல் பல்டிகாந்த் என்ற பட்டத்தை அளிக்கின்றோம்.
எத்தனையோ அரசியல்வாதிகளை பார்த்துவிட்டோம். இப்போது விஜயகாந்த்தையும் பார்த்துத் தொலைக்கிறோம்.
நேத்து என்னடான்னா கட்சியில ஆளுக்கு 100 ரூபாய் வாங்கி, ஒரு மாசத்துல 100 கோடி ரூபாய் நிதி வசூலிப்பேன்னு சொல்றார். ஆனா நிதியை வைச்சு என்ன செய்வீங்கன்னு கேட்டா வெளியில சொல்ல மாட்டேன் காப்பி அடிச்சிடுவாங்கன்னு ஸ்கூல் பையன் லெவலுக்கு உளறிக் கொண்டிருக்கிறார்.
ஆனா 'ஆனந்த விகடன்' மாதிரி பத்திரிகையே, ஒரு முட்டாள் இரசிகனைப் போல, என்னமோ இவர்தான் தமிழ்நாட்டின் விடிவெள்ளின்னு பத்து வாரம் ஊர் ஊரா போய் ஷோ காட்டுகிறது.
எல்லாம் நம்ம தலையெழுத்து.
வாங்க மிஸ்டர் பல்டி காந்த். வந்து உங்க அடுத்த பல்டியை ஆரம்பியுங்க.
3 comments:
nanbaa.... naan ninaithaen.. nee sollivittaai.
நூறு ரூபாய்க்கு நம்ம தமிழன் தனது ஓட்டுரிமையை என்னைக்கு விற்க ஆரம்பிச்சானோ அப்போவே அரசியல் ஒரு வியாபாரம் ஆகி விட்டது. விசயகந்தும் வியாபாரத்தை பெருக்க வேணாமா சார்.
:)))
Post a Comment