Monday, September 28, 2009

ஸ்ருதிஹாசன் - தைரியமான துவக்கம்



நேற்றைய ஆயத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் கமல் ஆக்ரமித்துக் கொண்டார். உன்னைப் போல் ஒருவன் உண்டா என்று ஒவ்வொரு சேனலும் கொண்டாடி மகிழ்ந்தன. எனக்குப்பிடித்தது ”மக்கள் மன்றத்தில் கமல்” என்ற விஜய் டிவியின் நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி கமலைப் பார்த்தவுடன் அழுதுவிட்டார். உணர்ச்சிகரமான அந்த துவக்கத்தால் கமலே அடிக்கடி நிகழ்ச்சியில் கண் கலங்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபியும் கலங்கித்தான் போனார். ரீமேக் பற்றி கேள்வி வந்தபோது, அது தவறில்லை, நானே என் அப்பாவின் ரீமேக் தானே என்று எந்த பாசாங்கும் இல்லாமல் சொன்னார்.

அந்த வகையில் ஸ்ருதிஹாசனும் கமலின் அப்பட்டமான ரீ மேக் தான். முதல் படமே (தமிழ் சினிமாவைப் பொருத்தவரை) சோதனை முயற்சி. பாடல்களே இல்லாத படத்தில் தைரியமான அறிமுகம். அதைக் குறிப்பிட்டு, கலைஞர் டிவியில், ஒரு வகையில் ஸ்ருதி ஹாசனுக்கு நல்லதும், கெடுதியும் ஒரே நேரத்தில் செய்திருக்கிறீர்கள் என்று இயக்குனர் லிங்குசாமி கூறினார். கமல் உடனடியாக அதற்கு பதில் சொன்னார். ஸ்ருதி வழக்கமான கோடம்பாக்க இசை (ரெண்டு டுயட் - ஒரு குத்து - ஒரு ஹீரோ இன்ட்ரொடக்ஷன்) பயின்றவர் அல்ல. திரை இசை என்றால் கதைக்கேற்ப பிண்ணனி இசை கோர்ப்பதுதான் என்பதை கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அதனால் ஸ்ருதிக்கு இதில் ஏமாற்றமும் இல்லை, சோதனை முயற்சி என்ற கர்வமோ, பெருமையோ, தயக்கமோ இல்லை. அவர் கற்றுக் கொண்டதை செய்து பார்த்திருக்கிறார் அவ்வளவுதான் என்றார் கமல்.

ஸ்ருதியின் இந்த துவக்கம் எதிர்கால திரை இசை அமைப்பாளர்களுக்கு நம்பிக்கை தரும் நவீன துவக்கம் என்பது என் கருத்து.

வெற்றி பெற்ற ஸ்ருதிக்கும், வெற்றி பெற உழைத்துக் கொண்டிருக்கும் ஏராளமான உன்னைப் போல் ஒருவன்களுக்கும் வாழ்த்துகள்!

5 comments:

பாலா said...

வாழ்த்துக்கள் .அதே சமயம்
பார்க்கலாம் எவ்வளவு தூரம் ஓடுகிறாரென்று

அமுதா கிருஷ்ணா said...

விஜய் டிவி நான் மிஸ் செய்துட்டேனே....கவர்ச்சியான இசையமைப்பாளர்..

ISR Selvakumar said...

பல பேர் விஜய் டிவி நிகழ்ச்சியை மிஸ் பண்ணிட்டாங்க. ஏன்னா அதே நேரத்துல கலைஞர் டிவியில கமல், சேரன், லிங்குசாமி, அமீர் மற்றும் மிஷ்கின்னு பெரிய நட்சத்திர கூட்டம்.

ஆனா கவலைப் படாதீங்க விஜய் டிவி ஒரு ரிப்பீட் டிவி. மீண்டும் பார்க்கலாம். அதையும் மிஸ் பண்ணினா யுடியுப் இருக்கவே இருக்கு.

கவர்ச்சியும், திறமையும், இளமையும் கொண்ட இசையமைப்பாளர்.

மங்களூர் சிவா said...

விஜய் டிவி பார்க்கலை. ஸ்ருதிக்கு வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

/
ஆனா கவலைப் படாதீங்க விஜய் டிவி ஒரு ரிப்பீட் டிவி.
/

இந்த நம்பிக்கை இருக்கு
:))))