கடவுளை நேசிப்பவன்
கடவுளாக முடிவதில்லை!
பெண்ணை நேசிப்பவன்
பெண்ணாகச் சம்மதிப்பதில்லை!
ஆனால்
குழந்தையை நேசிப்பவன்
குழந்தையாகிப் போகிறான்!
எழுதிய நாள் - 28.10.90
நான் எழுதிக் கிழித்துப் போட்ட எத்தனையோ டைரிகளில், கிழியாமல் தப்பிய ஒரே ஒரு டைரி தற்போது என்னை பழைய நினைவுகளில் தாலாட்டிக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்த இன்னுமொரு கவிதைதான் மேலே இருப்பது.
அதென்னமோ தெரியவில்லை, எனக்கு குழந்தைகளையும் பெண்களையும் அதிகம் பிடிக்கும். எனக்குப் பிடித்த பெண்களின் அருகாமை என்னை மேலும் கண்ணியமாக வைக்கின்றது. எனது கற்பனைகளில் உணர்வுகளின் வீச்சை அதிகமாக்குகின்றது. கல்லூரி நாட்களிலும் பின்னர் எனது சிநேகிதிகள் ஒவ்வொருவருக்கும் திருமணம் ஆகும் வரையிலும் நான் எனக்கு மிகவும் பிடித்த நானாக இருந்தேன்.
பெண்களை விட எனக்கு அதிகம் பிடித்தவர்கள் குழந்தைகள். அவர்களின் மழலையும், ஏன் என்கிற கேள்விகளும், சின்ன மழைத்துளிக்கு கூட கண்களின் பரவசம் காட்டும் ஆச்சரியங்களும், எனக்கு உன்னை விட்டால் யாருமில்லை என்பது போல நம் விரல்களை பிடித்துக் கொள்ளும் பத்திர உணர்வும், பரபரவென விளையாடிவிட்டு, சட்டென்று ஒரு நொடியில் நம் தோளிலும் மார்பிலும் உறங்கும் பாசமும் . . .
தேவதைகளும், கடவுள்களும் குழந்தைகளின் உருவத்தில்தான் நேரில் வருகின்றார்கள். பெண்கள் அவர்களை பூமிக்கு அழைத்து வருகின்றார்கள்.
நான் சொல்வது சரிதானே? சரிதான்.
5 comments:
குழந்தையை நேசிப்பவன்
குழந்தையாகிப் போகிறான்!
- இந்த வரிகள் மறுக்கப்பட முடியாத உண்மை.
உங்க கருத்துக்களினை வரவேற்கிறேன்.
தொடருங்கள்.
நன்றி.
ராஜா
எனக்குப் பிடித்த பெண்களின்
அருகாமை என்னை மேலும் கண்ணியமாக வைக்கின்றது.
இது எனக்கும் சில நேரங்களில் நிகழ்ந்திருக்கிறது செல்வா
நீங்க கடைசில சொன்ன வரி சரி தேன்
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
/
தேவதைகளும், கடவுள்களும் குழந்தைகளின் உருவத்தில்தான் நேரில் வருகின்றார்கள். பெண்கள் அவர்களை பூமிக்கு அழைத்து வருகின்றார்கள்.
நான் சொல்வது சரிதானே? சரிதான்.
/
well said
Excellent
குழந்தையை நேசிப்பவன்
குழந்தையாகிப் போகிறான்!
arumai,arumai
Post a Comment