Wednesday, September 30, 2009

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

இங்கே இருக்கையில்
தமிழுக்கு அமுதென்று பேர்!
அங்கே இலங்கையில்
அளவுக்கு மிஞ்சிய அமுதென்று பேர்!

தமிழன் என்று சொல்லி
தலை நிமிரும் போதெல்லாம்
தலை வெட்டப்படுகிறது.

கோவலன் இருந்திருந்தால்
சிலம்பு விற்கப் போகமலேயே
சிரம் இழந்திருப்பான்.

கண்ணகியின் சிலம்புகள்
அவள் கற்புடன்
பறிமுதல் செய்யப்பட்டிருக்கும்.

எழுதிய நாள் - 5.4.85

இன்று பழைய டைரியை புரட்டியபோது, தற்செயலாக கண்ணில் பட்டு நெஞ்சில் தங்கிய வரிகள். கிட்டத்தட்ட 24 நான்கு வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதை. கவிதை என்று கூட சொல்ல மாட்டேன். பொங்கிக் கொப்பளித்த உணர்வு. அந்த உணர்வு அன்று தமிழகத்தில் எல்லா இளைஞர்களுக்கும் இருந்தது. இன்றும் அதே உணர்வு தமிழகத்தில் இருக்கிறதா என்றால், இல்லை. ஆனால் அன்றும் இன்றும் இலங்கையில் நிலை மாறவில்லை.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

3 comments:

பாலா said...

கவிதை இருபத்துநான்கு வருடங்களுக்கு முன்பா ?
வாய்ப்பே இல்லை !!!
அழுத்தமான எழுத்துசார்
அசந்தேன்

ISR Selvakumar said...

எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நான் இப்பொழுது எழுதுவதை விட 20 வருடங்களுக்கு முன் நன்றாக எழுதியிருக்கின்றேன்.

எழுத்து என்பது ஒரு வரமல்லவா? ஏதோ தைரியத்தில் நான் இயக்குகின்ற ”அவர்” திரைப் படத்திலும் பாடல்கள் எழுதியிருக்கின்றேன்.

அது பற்றி பின்னர் ஒரு பதிவு எழுதலாமென்றிருக்கின்றேன்.

மங்களூர் சிவா said...

20 வருடமாக இப்படி ஒரு நிலை மிக மிக வருந்தத்தக்கது.