கோலமும், குளிரும், இசையும் இல்லாமல் மார்கழி மாதமா? ஆழ்வார் திருநகரிலுள்ள எனது வீட்டில் மார்கழி வந்தால் சாணம் தெளித்து, வண்ணப் பொடிக் கோலம் போட்டு பூசணிப்பூ வைக்கிற பழக்கம் இன்றும் சில கால மாற்றங்களுடன் இருக்கிறது. வண்ணப் பொடிகள் ஜிகினா பொடிகளுடன் அதிகரித்து, பூசணிப்பூ எப்போதாவது தலைகாட்டுகிறது. ஆனால் சாணத்தைக் காணவில்லை. பனிகூட குறைந்துவிட்டது. கால மாற்றத்தில் மார்கழிக் காலையில் திருப்பள்ளி எழுச்சிக்குப் பதிலாக அல்லது கூடவே சினிமாக்குத்துகள் கேட்கும் அபஸ்வரங்களும் நடந்து கொண்டிருக்கிறது.
நண்பர் விவேக் நாராயண் இன்று வந்திருந்தார். அவருடைய குருஜி திரு.எட்டியப்பன் ராஜாவின் உத்தரவின் பேரில் திருப்பள்ளி எழுச்சியை பாடி ரெகார்ட் செய்திருப்பதாக ஒரு பென் டிரைவை கொடுத்தார். ஒரே நாளில் வீட்டிலேயே நாம் சாட்டிங் செய்யும் சாதாரண மைக்கில் பாடப்பட்டு ரெக்கார்ட் செய்யப்பட்டது.
உங்களுக்காக இதோ மார்கழி ஸ்பெஷல் திருப்பள்ளி எழுச்சி - 01
போற்றிய என் வாழ் முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின்திருமுகத்து எமக்கு அருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே,
ஏற்றுயர்கொடி உடையாய், எனை உடையாய்,
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய்
அகன்றது உதயம், நின் மலர்த் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன, இவை ஓர்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே,
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே,
அலைகடலே, பள்ளி எழுந்தருளாயே.
இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்
அடுத்தத்தடுத்த பாடல்களை, நாளையும், அதைத் தொடர்ந்தும் இணைக்கிறேன்.
இது ஒரு scratch. பிழைகள் இருக்கலாம். நீங்கள் சுட்டிக்காட்டலாம்.
7 comments:
அருமை. கோவிலில் ஓதுவார் பாடுவது போல் உள்ளது. உங்கள் நண்பர் விவேக் நாராயணனுக்கு நன்றி.
கணீரென்ற வெண்கலக்குரலில் பக்தி ரசம் தவழ்கிறது
many thanks for sharing an useful post
எனக்கு திருப்பாவை நல்லா தெரியும் செல்வா
கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
மற்றும் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
thx for sharing
:-))))
தேனம்மை,
நேரமும் விருப்பமும் இருந்தால் எனக்கு திருவெம்பாவை பாணியில், 8 திருப்பள்ளி எழுச்சி பாடல்களை அதே அளவில் எழுதித்தாருங்கள்.
நீங்கள் எழுதும் பாடல்கள் பின்வருமாறு 8 பாடல்களிலும் முடியவேண்டும்.
திருத்தல மலை உடையானே!
முக்கண் மூன்றுடையானே! முக்கூராரே!
திருப்பள்ளி எழுந்தருள்வாயே!
மிக முக்கியம் : வரும் வெள்ளிக்குள் தர வேண்டும்.
பாடலை டியுன் செய்து இணையத்தில் உடனே தவழ விடலாம்.
Hello Selva,
Your attempt to revive something as beautiful as Thiruvempavai - Thirupalli ezhucchi is indeed commendable. Congrats and best wishes for your novel idea and sincere efforts to popularise a devotional music form that is dying.
Will watch your blog regularly for more of these.
Thanks,
Uma Chandran,
Bangalore
Super sir...romba arumayai irundhadhu ungal vivek narayanan kural mattum all ungal ezhuthukkalum than.
Post a Comment