இரு மாதங்களுக்கு முன் விவேகானந்தர் பாறை போயிருந்தேன். நான் விரும்புகிறபடி, ”எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்களை எனக்குத் தாருங்கள், இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்”, என்று நம்பிக்கை கொடுத்தவருக்கு ஞானம் பிறந்த இடம். தியான மண்டபத்தில் உஸ் . . உஸ் .. என்று யாரோ ஒருவர் வாய் மேல் விரல் வைத்து அதட்டிக் கொண்டிருக்க, உள்ளே வருபவர்கள் ஒரு கணத்தில் அடங்கி இருளில் துழாவி தியானம் செய்ய அமர்கிறார்கள்.
அணைக்கப்படாத செல்போன் கூப்பாடுகளால் கவனம் குவிக்க முடியாமல், இந்த தியானம் எதை நோக்கி? என்ற கேள்வியுடன் நானும் அமர்ந்திருந்தேன். நான் பனகல் பார்க் ராமகிருஷ்ணா மிஷனில் பிளஸ் டு படித்தபோது அடிக்கடி இப்படி உட்கார வைப்பார்கள். அப்போதும் இதே கேள்விதான். இது போல பல தியானங்கள், ஆராதனைகள், அன்னதானங்கள் பங்கு பெற்றிருக்கின்றேன். எல்லாமே தனியார் அல்லது சாமியார் சம்பந்தப்பட்டவை. என்னை அழைத்துப் போன நண்பர்கள் எல்லோருமே ”இந்த சாமியார்தான் பெஸ்ட்” என்றார்கள். அதற்கு விளக்கங்களும் வைத்திருந்தார்கள்.
இந்த விளக்கங்களையும், சாமியார்களையும் எப்போதும் கேலி செய்கிற நண்பர் ஒருவருடன் இந்த ஞாயிற்றுக்கிழமை மெரினா பீச்சுக்கு சென்று கொண்டிருந்தேன். காரை செலுத்தியபடியே அவர் சுவாமி நித்யானந்தா பற்றி சிலாகிக்க ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியம். ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நித்யானந்தா நிச்சயமாக ஏதோ சக்தி உடையவர். தூர இருந்து பார்க்கும்போது ஒல்லியான சரீரத்துடன் இருக்கும் அவர், அருகில் செல்லும்போது மிகப்பெரிய உருவாமாக காட்சியளித்தார் என்றார் பிரமிப்புடன்.
அவருடைய பிரமிப்பு இன்றைய சன் செய்திகளை பார்த்தவுடன் என்னாவகியிருக்கும் என்று யோசிக்கிறேன். எனது நண்பரைப் போலவே இலட்சக் கணக்கில் அவரை ஆராதிக்கும், நம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே அதிர்ந்து போயிருப்பார்கள். குமுதம் அவரை தொடர்ந்து புரமோட் செய்து வருகிறது. இந்த செய்திக்குப் பின் குமுதம் என்ன செய்யும் என்பதும் என்னால் யூகிக்க முடியாததாக இருக்கிறது. Zero degree சாரு திடீரென நித்யானந்தா பக்தராக மாறி வலையுலகில் கிட்டத்தட்ட நித்யானந்தா கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறி நடந்துவருகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் யோசிக்கிறேன்.
ஒரு வருடத்திற்கு முன் என் தம்பி, நித்யானந்தாவின் நேரடி பார்வையில் நடைபெற்ற ஒரு வகுப்பிற்கு போய் வந்தார். முன் பின் அறிமுகம் இல்லாத ஆண், பெண்களை கட்டிப்பிடித்தபடி சில பயிற்சிகள் செய்யச் சொல்கிறாரகள். அவர் ஒரு ஃபிராட் என்றார். அவரைப் போலவே நித்யானந்தாவை சந்தேகித்து பரிகசித்தவர்கள் சிலர். அவர்கள் எல்லோரும் ”நான் அப்பவே சொன்னேன் பார்த்தியா?” என்று ஆனந்தப்படக் கூடும்.
இன்றைய சாமியார்கள் எனப்படுவர்கள் யார்?.தனது பலவீனத்தை முற்றிலும் மறைக்கத் தெரிந்தவர்களே சாமியார்களாக உலா வருகிறார்கள். அதனால்தான் உதறித்தள்ளாத வெறுமனே மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடைய பலவீனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியாவது வெளியாகிவிடுகின்றது. இன்றைய சன் செய்தி பரபரப்பும் அப்படிப்பட்ட ஒரு பலவீனத்தின் அம்பலம்தான்.
இந்த பலவீனத்தை மறைக்கத்தான் அந்த சாமியார்கள் தனி மனிதனாக நின்று போதிக்காமல், ஆசிரம், ஏ.சி, விமானம், பாதுகாவலர்கள், சிஷ்யர்கள் என்று ஒரு நிறுவனமாக மாறிப் போகின்றார்கள். எல்லாவற்றுக்கும் விலை வைக்கின்றார்கள். There is no free lunch என்பார்கள். இது ஏமாளி பக்தர்களுக்கு மட்டுமல்ல, ஏமாற்றும் சாமியார்களுக்கும் பொருந்தும். நித்யானந்தா கொடுத்த விலையை இன்று சன் டிவி காட்டிவிட்டது.
விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் இந்த சாமியார்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.
சன் டிவிக்கு ஒரு கண்டனம்
நித்யானந்தாவை அம்பலப்படுத்தியது நல்ல விஷயம்தான். ஆனால் உடனிருப்பது R என்ற பெயரில் ஆரம்பிக்கும் நடிகை என்று கூறி பல நடிகையர்களின் மேல் சந்தேகம் வர வைத்தது விஷமத்தனம்.
15 comments:
//ஆனால் உடனிருப்பது R என்ற பெயரில் ஆரம்பிக்கும் நடிகை என்று கூறி பல நடிகையர்களின் மேல் சந்தேகம் வர வைத்தது விஷமத்தனம்//
தினமலரை கேள்விகேட்ட திரைப்படத்துறை இப்போது சன் டீவியையும் கேள்வி கேட்குமா.?
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
நண்பர்கள் கூபிட்டதாக கூறி நீங்க நிறைய சாமிகள சந்திச்சிருகீங்க போலிருக்கே.. அது ஏன்?? உங்களுக்கு அந்த சாமிகள் போலி என்று தெரியாததுனாலையா?? இல்லை தகவல் சேகரிக்கவா.. நான் இதுவரை ஒரு சாமியாரையும் சந்தித்ததில்லை.. அரசியல், சினிமா மற்றும் பிசினஸ் உலகத்தில் உள்ளவர்களுக்கு தான் இவர்கள் மேல் ஆதீத நம்பிக்கை என்பது என் கருத்து. சராசரி மனிதனுக்கு இது போன்ற நம்பிக்கை இருப்பதில்லை. விவேகானந்தர் கருத்து ப்ரீயா கிடைக்குதுல்ல.. அது யாருக்கு வேணும். ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீ இருந்தா தான் வருவாங்க (கூடவே இலவச கட்டிப்புடி சிகிச்சையும் கிடைக்குதுல்ல).
தனது பலவீனத்தை முற்றிலும் மறைக்கத் தெரிந்தவர்களே சாமியார்களாக உலா வருகிறார்கள். அதனால்தான் உதறித்தள்ளாத வெறுமனே மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடைய பலவீனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியாவது வெளியாகிவிடுகின்றது.
............... இப்படி இன்னும் பத்து தத்துவங்கள் எடுத்து விடுங்க. நீங்களும்
ஸ்ரீ செல்வகுமாரனந்த ஸ்வாமிகள் ஆகிவிடலாம்.
சாமியார்கள் என்றாலே சாமி யார் என்பவர்கள், இதை அறியாதவன் ஒரு மூடன்.
ஒரு மூடனை நம்பி தங்கள் சென்றது தங்களின் அறியா வயது பிழை.
இதுபோல் நானும் தங்களை பின் தொடர்ந்தேன்...அறிந்தேன், ஆனால் அறியாமை பலர் பின் தொடர்கிறார்கள் அன்பது. தங்களின் ஆதங்கம் அறிந்தோம்...சிலருக்கு ஞானம் பிறந்தததை அறிவோம். இல்லை அன்றால் அறிவிப்போம். நன்றி சன் செய்திகள்.
யார்னு தெளிவாக் கூறி இருந்தால் மட்டும் என்ன நடக்கும் செல்வா எல்லோரும் பார்ப்பார்கள் இது சாமியார் விஷயமாக இருந்ததால் அந்தப் பெண்ணை கார்னர் செய்யவில்லை இல்லாவிட்டால் அழகி கைது என்ற அசிங்கத்தில் அவள் இருந்திருப்பாள்
நடிகை என்றாலே இழிவுபடுத்தும் சமூக அமைப்பில் நடிகை சார்ந்த விஷமத்தனத்துக்குக் குரல் கொடுத்ததற்கு நன்றி.என் பதிவுகளையும்- இது தொடர்பானவை-காண்க.
நல்ல நடையில் நேர்மையான பதிவு.
ரொம்ப ரசித்தேன் நண்பரே,
என்றாலும் இந்த எக்ஸ்போஸில் எனக்கு ஒரு சங்கடம் உண்டு. வருத்தம் ஒன்று உண்டு, அதை மிக சரியாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
இது போன்ற நிகழ்வுகளால் துறவு, ஆசிரமம், தியானம், யோகா எனும் எல்லாமே மொத்த குத்தகையில் எச்சரிக்கை விளக்கு எரியும்.
சராசரி மனிதன் வேண்டாம்டா வம்பு என அதன் பக்கமே போகாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு, அதற்கு தான் தங்கள் பதிவில் விவேகானந்தரை நினைவு கூர்ந்து உங்கள் தியான அனுபவம் சொல்லி பதிவை பயனுள்ளதாக்கினீர்கள்.
நன்றி
லாரன்ஸ் (படுக்காளி)
ஒண்ணும் சொல்வதற்கில்லை செல்வா அவர்களே...
நண்பர் பெங்களூர் அரவிந்தன் கேட்டது ஒரு அருமையான கேள்வி :
//தினமலரை கேள்விகேட்ட திரைப்படத்துறை இப்போது சன் டீவியையும் கேள்வி கேட்குமா.?//
மக்களின் நம்பிக்கையில் விஷம் விதைக்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஊடகங்கள் தரும் ஆதரவு இருக்கே... யப்பா... மலைக்க வைக்கிறது இவர்களின் ஊடக சேவை...
என்னத்த சொல்லி... என்னத்த ஆகப்போவுது....
//விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் இந்த சாமியார்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.// இது முற்றிலும் உண்மை. காவியைக் கட்டி கருங்காலி ஆனான் இவன். இதனால் காவிக்குக் கேடில்லை. அது தன் புனிதத்துடன் ஸனாதனமாகவே இருக்கிறது. மக்கள் சனாதனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது தான் நிஜம்.
anbudan
raam
www.hayyram.blogspot.com
///விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் இந்த சாமியார்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.//
புகழ் விரும்பாதவர்கள் பலர் உள்ளனர் ஆனால் உங்களுக்குத்தெரியவில்லை காரணம் அவர்கள் புகழை விரும்பவில்லை. அவர்களை தேடுவதை விட்டுவிட்டு உங்களைப் போன்றவர்கள் வீணானவர்களைப் பற்றி எழுதி நல்லவர்களை மறைப்பதாலோ என்னவோ
ஓடினவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு..........
ஆப்பிட்டுக்கிட்டவனுக்கு அஷ்டமத்தில சனி..........
இன்னும் எத்தனை இருக்குகோ...
//விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் இந்த சாமியார்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.//
சும்மா நறுக்குன்னு இருக்கு அண்ணே...
நேர்மையான பதிவு செல்வா சார்.! என்னைப் பொறுத்த வரை இந்த கார்பரேட் சாமியார்கள் உருவாக்கப் படுகிறார்கள்..!! அவர்களுக்கான வேலையைச் செய்யாமல் மீறினால் அழிக்கப் படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்..!!
உ-ம் பிரேமானந்தா, நித்யானந்தா, நுங்கம்பாக்கம் சாமியார், போன்றோர்கள்..!!
INDHA SAAMIYAARGALE IPPADI DHAN..KUTHUNGA EJAMA KUTHUNGA...
INDHA SAAMIYAARGALE IPPADI DHAN...
KUTHUNGA EJAMA KUTHUNGA...
Post a Comment