Sunday, March 7, 2010

மகளிர் தினம் - ஸ்பெஷல் இசை (”அவர்” திரைப்படக் குழு சார்பாக)

நான் நானாக இருப்பதற்கு என் வாழ்வில் நான் சந்திக்கும் பெண்களே காரணம். தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, ஆசிரியையாக, மாணவியாக, பக்கத்து வீட்டுப் பெண்ணாக, தோழியாக என் வாழ்வில் வந்த அத்தனை பெண்களும், தான் அன்பால் உருவான ஒரு சக்தி என்று எனக்கு நிரூபித்திருக்கின்றார்கள்.

அவர்கள் அனைவருக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு இசையை சமர்ப்பிக்கின்றேன்.

நான் கேட்டுக் கொண்டதற்க்காகவே, வலையுலகில் இன்று அக்கா என்று பலராலும் அன்போடு அழைக்கப்படும் தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதிய பாடல் இது.

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!
- இந்த இரு வரிகளை மட்டும் (ரெக்கார்டிங்கின் போது உண்டான உடனடி தேவையால்) நான் எழுதியிருக்கின்றேன்.

இசையமைத்தது வழக்கம்போல என் நண்பன் விவேக் நாராயண். நான் எவ்வளவு நெருக்கடியில் கேட்டாலும், சட்டென ஸ்வரங்களைக் கோர்க்கும் அவரின் திறமைக்கு இந்தப் பாடல் இன்னொரு சான்று. இந்தப் பாடலைப் பாடியவரும் அவர்தான்.

நேற்று மாலை எழுதப்பட்டு, இன்று மாலை இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை ”அவர்” திரைப்படக் குழுவினரின் சார்பாக வலையுலகத்தில் எழுதிவரும் அத்தனை பெண்களுக்கும் மகளிர் தினப் பரிசாக அறிவிக்கின்றேன்.



பாடலை இங்கே கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

அன்பென்னும் ஊஞ்சலில்  அழகாக அசைந்திடும்
ஆனந்தப் பெண்மை அழகே!
அதிகாரம் ஆணவம் அனைத்தும் கடந்து
அரவணைக்கும் அன்னை நீயே!

நீராக நிலமாக விண்ணாக காற்றாக யாதுமாக
உயிராக உறவாக ஒளிர்கின்ற சக்தி நீயே!

அன்னப்  பறவையாய்  நல்லதை கைக்கொண்டு
அழுக்கெல்லாம் அழிய வைப்பாய்!

மன்னவன் மாலையே மாதர்கள் அரசியே
மகிழ்வோடு என்றுமிருப்பாய்!

ஆழி நீ சூழி நீ ஆர்ப்பரிக்கும் ஆர்வம் நீ
அகலாத அன்பின் தேவி!

சொல்லும் நீ செயலும் நீ எண்ணம் நீ வண்ணம் நீ
நல்லதனைத்தும் நீயே!

காந்தம் நீ கருணை நீ எரிமலைநெருப்பும் நீ
பனிஉருச் சிற்பம் நீயே!

புதுயுகப் புயலும் நீ பொதிகையின் கயலும் நீ
புவியாள வந்த அழகே!

குழந்தைக்கு குழந்தை நீ தேவாதி தேவி நீ
உலகெல்லாம் ஆளும் சக்தி!

உண்மையே மென்மையே  ஒளிர்கின்ற பாசமே
உலகத்தின் உயிர்ச்சக்தியே!

14 comments:

அ.வெற்றிவேல் said...

யார் பாடியது என்ற விபரம் கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும்.

ISR Selvakumar said...

வெற்றிவேல்,
பாடலை இசையமைத்துப் பாடியது நண்பர் விவேக்நாராயண். நீங்கள் சொன்னபடி பதிவில் இந்த தகவலை சேர்த்துவிட்டேன்.

gulf-tamilan said...

நல்லா இருக்கு!!!

Anonymous said...

So Nice. Congratulations to All.

Unknown said...

So Nice. Congratulations to all.

பா.ராஜாராம் said...

வாழ்த்துக்கள்,தேனு மக்கா,செல்வா,விவேக்!

இசையுடன் இழைகிறது வரிகளும்.

நட்புடன் ஜமால் said...

அண்ணா நிறைய அன்பு.

இதற்காகத்தான் நான் அன்று தொலைபேசியில் அழைத்தேன்.

செய்தே விட்டீர்கள்.

Mythili (மைதிலி ) said...

அக்கா தேனம்மையின் பாடல் வரிகள் அருமை. உங்கள் நண்பர் விவேக் நாராயணனின் இசை மிகவும் இனிமையாக இருந்தது.. பாடியவர் குரல் சூப்பர்.. மொத்தத்தில் எங்களுக்கு பெண்கள் தினத்தன்று விலை மதிக்க முடியாத பரிசு... தந்தமைக்கு மிகவும் நன்றி அண்ணா !!

தமிழ் உதயம் said...

பாடல் நன்றாக இருந்தது. தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாடல் மலர காரணமாக இருந்த செல்வா சாருக்கு நன்றி.

R.Gopi said...

தேனம்மை அவர்களின் எழுத்து திறமைக்கு இந்த பாடல் வரிகள் மற்றுமொரு சான்று.

நம் இசை தோழர் விவேக் நாராயணனின் இசை மிக மிக இனிமை.. கூடவே அவர் குரலும்..

இந்த பாடல் பெண்கள் தினத்தை மேலும் சிறப்பாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை...

தேனம்மை, செல்வா, விவேக் நாராயன் வெற்றி கூட்டணிக்கு வாழ்த்துக்கள்...

Chitra said...

அருமையான விதத்தில், புதுமையாக வாழ்த்துக்களை தெரியப் படுத்தி இருக்கிறீர்கள், செல்வா அண்ணா. மிக்க நன்றி. தேன் அக்காவுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan said...

நன்றி
-------
வெற்றிவேல் சார்.,
கல்ஃப் தமிழன்.,
சிவா.,
அனானிமஸ்
மக்கா.,
ஜமால்.,
மைதிலி.,
தமிழ் உதயம்.,
கோபி.,
சித்ரா.

Anonymous said...

இன்றுதான் ஒரு லின்க் மூலமாக பார்த்தேன். பாடலும் இசையும் கலக்கலாக இருக்கிறது

Anonymous said...

ஒரு லின்க் மூலமாக இன்றுதான். பார்த்தேன். பாடலும் இசையும் கலக்கலாக இருக்கிறது. கே எம் அமீர்