Tuesday, March 9, 2010

ரஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரிஸ்க் சாப்பிடற மாதிரி

இரு வார்த்தைகளின் முதல் எழுத்து இடம் மாறி, வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் அமைந்தால் ஸ்பூனரிசம் (Spoonerism) என்று பெயர்.

Come and wook out of the lindow என்பது ஒரு உதாரணம்.
இந்த வாக்கியத்தில், look - window ஆகிய இரு வார்த்தைகளிலும் முதல் எழுத்து இடம் மாறியிருப்பதை கவனியுங்கள்.

Reverend William Archibald Spooner அப்படின்னு ஒருத்தர் அந்தக் காலத்துல இந்த மாதிரி சொதப்புறதுல மன்னராம். அதனால இந்த வகை சொதப்பல்களுக்கு spoonerism என்று பெயர் வந்துவிட்டது.

இப்போ இன்னும் சில உதாரணங்கள்.
  • fighting a liar - lighting a fire
  • you hissed my mystery lecture - you missed my history lecture
  • cattle ships and bruisers - battle ships and cruisers
  • nosey little cook - cosy little nook
  • a blushing crow - a crushing blow
தமிழில் இந்த மாதிரி முயற்சிக்கலாமா என்று மூளையைக் கசக்கியதில் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது.

ரஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரிஸ்க் சாப்பிடற மாதிரி.

இத மாதிரி நீங்க தமிழ் ஸ்பூனரிசம் சொல்ல முடியுமா?

19 comments:

Anonymous said...

தமிழ்ல ஒண்ணும் டக்குனு நினைவுக்கு வரலை.
ஒரு வாட்டி க்ளாஸ்ல மாஸ்டர்

Put a tick mark அப்படீன்னு சொல்லறதுக்கு பதில்
Tick a put mark
அப்படின்னு சொல்லி க்ளாஸ்ல பசங்க கிட்ட மாட்டிக்கிட்டாரு.:)

Chitra said...

உன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏத்தணும் - உன் தண்டவாளத்தை வண்டவாளத்தில் ஏத்தணும்.

Guru said...

முத்தமில்லாம ஒரு சத்தம் கொடுத்தாள்.

நட்புடன் ஜமால் said...

நித்தம் முத்தம்

தமிழ் உதயம் said...

T.ராஜேந்தர் படத்துல இந்த மாதிரி ரெம்ப வருமே. NONSON ஒரு பொண்ணு கோபத்துல சொல்ல. ஸாரி எம் பேரு JOHNSON ன்னு புத்திசாலிதனம்மா பதில் வரும்

R.Gopi said...

அட... இப்படி ஒரு மேட்டர் இருக்கா...

செல்வா... நீங்க படா கில்லாடி தான்...

மாத்தி போட்டாலும் தலைப்பு ஒரு டெர்ரரா தான் இருக்கு...

சரி... இது என்னோட டர்ன்...

”பரட்டை வச்சுட்டியே பத்த”

இது ஓகேவான்னு சொல்வா செல்வார் (அதாங்க செல்வா சொல்வார்...)

R.Gopi said...

//இத மாதிரி நீங்க தமிழ் ஸ்பூனரிசம் சொல்ல முடியுமா? //

இது அதுவான்னு தெரியல...

யக்கக்க ஜக்க ஜகக்க
மக்கக்க டக்கா நண்டு...

நட்புடன் ஜமால் said...

சொல்ல-வா செல்ல-வா

நட்புடன் ஜமால் said...

கொன்று வென்று விடு

வென்று கொன்று விடு

நட்புடன் ஜமால் said...

வித்தையெல்லாம் சொத்தை

இந்த உலகத்தில்

சொத்தையையெல்லாம் வித்தைங்கிறாங்க

Jaleela Kamal said...

ஹா ஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்கையா கும்மிய.

எங்கே இடம் மாறி வந்துட்டோமா?
டி. ராஜேந்தர் வீடு போல இருக்கு

சரி சரி நமக்கு தெரிந்த பிட்ட போடுறேன்

உயிர் போனாலும் கவலையில்லை,
மயிர் போனாலும் கவலையில்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

SUFFIX said...

பின்னூட்டத்தால் ஓட்டமெடுத்தான், ஓட்ட்மெடுத்து பின்னூட்டமிட்டான்..:)

விக்னேஷ்வரி said...

முதல் முறை கேள்விப்படுறேன் Spoonerism. நன்றி.

Anonymous said...

மண்ணை அள்ளி கண்ணில் போடு என்று சொல்வதற்கு பதிலாக கண்ணை
அள்ளி மண்ணில் போடு என்று சொன்னால் நீங்கள் கூறியதைப்போல
இருக்கும் எப்ப்ப்ப்ப்ப்பூபூபூபூடி

க.பார்த்திபன்
சிங்கப்பூர்.

blogpaandi said...

1)மூக்க நாக்க மூக்க நாக்க
2)ஜிவாஜி வாயிலே சிலேபி

Anonymous said...

கல்லை உடைத்து பையில் கொடுப்பேன்
:-)

ISR Selvakumar said...

//கல்லை உடைத்து பையில் கொடுப்பேன்//
எழுத்துகள் இடம் மாறும்போது அர்ததம் நகைச்சுவை இரண்டும் இருந்தால் அது மிகச் சரியான ஸ்பூனரிசம்.

Thenammai Lakshmanan said...

அப்பிடியா செல்வா எனக்கு ஒண்ணு கூட தெரியல முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்

விஜய் said...

சுஜாதா இரண்டு எழுதியிருந்தார்

ஆனால் அவை அடல்ட்ஸ் ஒன்லி ஆக இருந்தது

விஜய்