
மழைக்காலங்களின் முதல் சில நாட்கள் விசித்திரமானவை. வானம் கறுத்திருந்தாலும், குடையை எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று சோம்பல் தடுக்கும். பெரும்பாலும் மாலையில் துவங்கும் முதல் மழையை பார்த்ததும், பலர் எங்கோ ஒரு கட்டிடத்திற்குள் சட்டென மறைவார்கள். சிலர் மரத்தடியில் ஒதுங்குவார்கள். சிலர் தேநீர் கடைகளுக்குள் புகுவார்கள்.
எனக்கு எப்போதுமே மழையில் நனையப் பிடிக்கும். அதுவும் முதல் மழையை தவற விட மாட்டேன். நேற்றைய முன் தினம், திடீரென சென்னையை நனைத்த மழை என்னையும் நனைத்த பின், என் மனதில் தோன்றிதை, எழுத்தில் கொண்டு வந்துவிட்டேன்.
ஃபேஸ்புக்கில் இதற்கு தலைப்பு தேவைப்படவில்லை. வலைப் பதிவு தலைப்பு கேட்கிறது. என்ன தலைப்பு வைப்பது....ம்ம்ம்ம்ம்ம்...
குழந்தையின் முதல் முத்தம் போல (தலைப்பையே முதல் வரி ஆக்கிவிட்டேன்)
திடீரென முதல் மழை!
துளிகள், உதிர்ந்த பூக்களின் தூளிகளாகும்
விந்தையை இரசித்தபடி,
மழையை குடையாக்கி,
நனைந்தும் நனையாமல் நான்.
1 comment:
//குழந்தையின் முதல் முத்தம் போல - முதல் மழை//
மிகவும் பிடித்தவரி.. என்ன ஒரு கவலை கவிதையை சின்னதாவே முடிச்சுட்டியல்..
Ashwin Win
மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?
Post a Comment