Monday, December 12, 2011

ரஜினி - (அனைவருக்கும் பிடித்த) முரண்பாடுகளின் மூட்டை!

எனக்கு குளிர் பிடிக்கும், இசை பிடிக்கும், நீலம் பிடிக்கும், பறவைகள் பிடிக்கும், குழந்தைகள் பிடிக்கும் என்பது போல, இரஜினியையும் பிடிக்கும்.

30 வருடங்களாக, இந்த மனிதன் நடித்த படங்களும், செய்திகளும் எனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சில நேரம் சே.. இதென்ன தனி மனித நேசிப்பு என்று அறிவு ஒதுக்கித் தள்ள முயற்சித்தாலும், மீண்டும் ரஜினி என்ற பெயர் காந்தமாக ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

 டிவி, ரேடியோ, பத்திரிகைகள் என ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மிகை பிம்பம் என்று விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு பிம்பம் அப்படியே நிலைத்து நிற்பதும், மேலும் விசுவரூபம் எடுப்பதும், ஒதுக்கித் தள்ள நினைப்பவர்களையும், அது பற்றி தொடர்ந்து பேச வைக்கிறது.

ரஜினி நல்ல நடிகரா? ரஜினி மோசமான நடிகரா? ரஜினி நல்ல மனிதனா? ரஜினி கெட்ட மனிதனா? ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லையா? ரஜனி பழைய தலைமுறையா? ரஜினி புதிய தலைமுறையா? ரஜினி லேட்டா? ரஜினி லேட்டஸ்டா?

நீங்கள் இதில் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் என் பதில் ஆம் என்பதுதான். ரஜினி என்கிற பலமான பிரமாண்ட பிம்பத்தை இரசிக்கிறவர்கள், அவருடைய முரண்பாடுகள் மிக்க நிஜ வாழ்வையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் விசித்திரம்.

பாபாவின் தோல்வியும், எந்திரனின் வெற்றியும் ஒரே அளவு பரபரப்பாகிறது. புகை, குடி என்ற அவரின் குறையும், ஆன்மீகம், யோகா என்ற ஒழுக்கமும், ஒரே விகிதத்தில் ஏற்கப்படுகிறது.

பலமும் பலவீனமும் கலந்த அவர், முரண்பாடுகளின் மூட்டை. ஆனாலும் அவரைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சுட்டி டிவி குழந்தைகள் முதல் என்டிடிவி பெரிசுகள் வரை, எல்லோரையும் ஈர்க்கிறார்.

ஏன் என்று காரணம் தேடுவதை விட, இரசிப்பது எளிதாக இருக்கிறது. அதனால் தான் நான் ரஜினி இரசிகனாக இருக்கிறேன்.

ஹேப்பி பர்த்டே தலைவா... உங்க அடுத்த படம் எப்போ?
(இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இதே கேள்விதான்)

11 comments:

muthuraajan said...

நல்ல பதிவு.மூன்று தலைமுறைகளின் ஆதர்சமாக,தயாரிப்பாளர் முதல் தியேட்டர் முதலாளி வரை அனைவரையும் கல்லா கட்ட வைத்து,இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட இந்த தேசத்தின் மாபெரும் செலிப்ரிட்டியை,ரஜினிகாந்த் என்ற தனி மனிதனின் பெர்சனல் வாழ்க்கையையும்,அதன் நிறை குறைகளையும் ஆராய்வதையும்,விமர்சனம் செய்வதையும் விட்டு விட்டு,கொண்டாட கற்றுக்கொள்வோம்.நீண்ட ஆயுளுடன்,நல்ல உடல் நலத்துடன் நமது குழந்தைகளையும் அவர் மகிழ்விக்கட்டும்.

muthuraajan said...

நல்ல பதிவு சார்

mohanasomasundaram said...

காலை வணக்கம் செல்வா. நான் கல்லூரிக்குள் ஆசிரியையாக அடி எடுத்த சில ஆண்டுக்குள் நடிப்புலகுக்கு வந்தவர். அவர் மேல் பெரிதாக எந்த ஈடுபாடும் கிடையாது. அவரின் நடிப்பின் மேல் உண்டு. துவக்கத்தில் நடித்த புவனா ஒரு கேள்விக்குறி, அவரின் நடிப்புக்கு வைரக்கிரீடம் சூட்டிய படம்..நான் விரும்பிய படங்கள் அபூர்வ ராகங்கள்.நெற்றிக் கண், தில்லு முல்லு,முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை,தள்பதி என அவர் நடித்த ஏராளமான நல்ல படங்கள் உண்டு.இன்று முகநூலைத்திறந்ததும் தங்களின் கருத்துரையைப் பார்த்தேன்.நேர்மையான பக்கம் சாரா தகவல்கள். நன்றி நண்பா.வாழ்த்துக்கள் ரஜனிக்கு. நூறாண்டு காலம் அவர் வாழட்டும்..மோகனா

Meena said...

ரஜினி - விமர்சனம்...

மீண்டும் அதே topic.. radio, TV .. கொஞ்சம் விட்டால் எல்லோர் முதுகிலும் கூட wishes சொல்லுவார்கள் போல.

selva u too..I thought like that and started reading. But u hv proved again.. your angle .way of approach is all different. "When its giving good feeling just enjoy and move on"... really a good one.

Thanks selva. BTW I too like Rajini....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மறுபடியும் ஒரு விஷயத்தில் இருவருக்கும் ஒற்றுமை.
//ஏன் என்று காரணம் தேடுவதை விட, இரசிப்பது எளிதாக இருக்கிறது. அதனால் தான் நான் ரஜினி இரசிகனாக இருக்கிறேன்.//
இது எல்லோருக்கும் கிடைத்து விடும் நிலை அல்ல. அவர் விரும்பி வந்த இடமும் அல்ல. உயர்ந்த இடத்தில் இருப்பதாலேயே பல வித உருட்டல்களுக்கும் ஆளானவர். ஒரு சிரம கட்டத்தை தாண்டி வந்திருக்கிறார். பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும். வாழ்த்துக்கள் !!

Anonymous said...

Tamilnadu poli bimbangalukku mariyathai kodukkira varaiyil oru nalla vishayamum nadakka povathu illai. Tamilannukku intha ulagil oru angehaaramum kidakaathathatku nijamana ulaipaalikalai kouravikkaamal polikalai thooki kondaaduvathinaal thaan

MANO நாஞ்சில் மனோ said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மக்கா...!!!

N.H. Narasimma Prasad said...

'ரஜினி' என்பது ஒரு வகையான மந்திரச் சொல். அந்த மந்திரம் நம்மைப் போன்ற பல பேருக்கு இன்று மட்டுமல்ல, என்றும் அந்த 'மந்திரம்' நம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். பகிர்வுக்கு நன்றி பாஸ்.

Unknown said...

சூப்பர் பதிவு.

Unknown said...

புகழ் என்னும் நோய்க்கு இவன் அடிமை இல்லை !
இகழ்வோரை என்றும் இவன் நொந்ததில்லை !
இவன் போல் புனிதன் இப்புவி கண்டதில்லை!

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

ரஜினி எல்லோரையும் பாதிப்பது எப்படி என தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .நீங்களும் நானு கூட அப்படித்தானே ?

*என்றென்றும் அன்புடன் ,*
*கிருஷ்ணமூர்த்தி*