Wednesday, February 15, 2012

வணக்கம் தமிழ் மிஸ்!


நேற்று பொன்னேரியில் இரண்டு மணி நேரம் டிராபிக் ஜாம். நண்பர் அலுத்துப் போய் காரை, ஏதோ வயல் வழி ரூட்டில் திருப்பிக் கொண்டு, நீங்க பஸ் பிடிச்சுக்கோங்க என்று டாட்டா காண்பித்துவிட்டார்.

காலியாகத் தெரிந்த ஒரு கோயம்பேடு பஸ்ஸாகப் பார்த்து, ஏற முயன்றபோது படியில் இரண்டு பெண்கள்! மிதமான இளம் என்பதை அடைப்புக் குறிக்குள் எழுதிக் கொள்ளவும். நான் ஜெர்க் ஆகி, வழி விடுங்க நான் மேல போகணும் என்றேன்.
அதுக்குள்ள ஏன் மேல போறீங்க? இன்னும் வயசு இருக்குல்ல.
ஹலோ...
சரி.. சார் அவரசப்படறாரு.. வழி விட்டுடுடி..



அந்த பஸ்ஸில் அவர்கள் ரெகுலர் போலிருக்கிறது. பஸ் முழுவதும் அதே மிதமான இளம் பெண்கள் கலகலவென்று கொண்டிருந்தார்கள். மேலும் 30 நிமிட டிராபிக் காத்திருப்பில், முதலில் ஒரு வயலெட் கலர் புடவைப் பெண், கண்டக்டருக்கு சில்லறை அனுப்பும்போது சிநேகமானார். அதற்குப் பின் கோயம்பேடு வரை தொடர் கடலை..

இறங்குவதற்குள் அவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியைகள் என்பதை (கெமிஸ்ட்ரி மிஸ்.. கம்ப்யூட்டர் மிஸ்) தெரிந்து கொண்டேன்.

கிட்டத்தட்ட 3 மணி, 30 கி.மீ பயணம். இரவு மணி 8. மறுநாள் காலை மீண்டும் 8 மணிக்கே வர வேண்டுமாம்.

அவர்களின் குரலில் அலுப்பு தெரிந்தாலும், குடும்பத்தின் நிதி நிலையை சமாளிக்க தூரங்கள் கடந்து தினம் தினம் களைப்பு ஒதுக்கி, நம்பிக்கையுடன் உழைக்கும் அவர்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் தமிழ் மிஸ்!

No comments: