ஒரே ஒரு பிளாக் எழுதுவதன் மூலம் ஒரு பதிவர் சந்திப்பை அறிவித்துவிட முடியும். ஆனால் வெற்றிகரமான சந்திப்பிற்கும், மீண்டும் மீண்டும் சந்திப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும். இதோ என்னுடைய 10 யோசனைகள். வெளிநாடுகளில் இது போன்ற பதிவர் சந்திப்புகள் "வெற்றிகரமான பிசினஸ் நெட்வொர்க் சந்திப்புகளாகவும்" நிகழ்த்தப்படுகின்றன. கலந்துகொண்ட அனுபவம் எனக்கு உண்டு. இதன் மூலம் வெறும் வெட்டிச் சந்திப்பாக இல்லாமல், ஏதோ ஓரளவிற்கு உபயோகமான சந்திப்பாக மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ryze.com
- மீண்டும் . . . மீண்டும் . . .சந்திப்பை முன் நின்று நடத்துபவர் யார் என்பது அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
- அவருடன் உரையாட வசதியாக ஒரு தொலைபேசி எண் அவசியம் தேவை
- நடத்துபவரும், அவருடைய குழுவும் அறிவிக்கப்படவேண்டும்
- சந்திப்பின் காரணம் பொத்தாம் பொதுவாக இருக்கக் கூடாது.
உதாரணமாக ஒரு டாப்பிக் - "பதிவுகளின் பலன்களும், பாதகங்களும்" - இது குறித்து யார், யார் பேசலாம் என்பதை முன் கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
- சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் கட்டாயம் தேவை. உதாரணமாக . .
வரவேற்புரை
விருந்தினர் அறிமுகம்
இன்றைய தலைப்பு ஒரு அறிமுகம்
முதல் 5 பேச்சாளர்கள்
டீ பிரேக்
அடுத்த 5 பேச்சாளர்கள்
நன்றியுரை மற்றும் முடிவுரை - யார் வரவேற்புரை, யார் தலைப்பை அறிமுகம் செய்வது, யார் பேச்சாளர்களை அறிமுகப்படுத்துவது, யார் நன்றியுரை மற்றும் முடிவுரை வழங்குவது போன்ற அனைத்தும் முதலிலேயே தீர்மானிக்கப்படவேண்டும்.
- சந்திப்பிற்கான செலவுகளை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற தெளிவான சிந்தனை தேவை.
- அடுத்த பதிவர்கள் சந்திப்பு எப்போது இருக்கலாம் என்பதற்க்கான உத்தேச தேதிகள் இருக்க வேண்டும்.
- பதிவர் சந்திப்பிற்கென 'தனி வலைப்பூ' இருக்க வேண்டும்.
14 comments:
me the first
இப்படில்லாம் பயமுறுத்தினா, அப்புறம் யாரும் வராமப் போய்டப் போறாங்க:):):)
அட்டெண்டன்ஸ்!
ராப்,
இதற்குப் பெயர் பயமுறுத்துதல் அல்ல, தயாராகுதல்(Better organized).
தயாராகுதல் 'பதிவர் சந்திப்பை' நடத்தப்போகிறவர்களை கொஞ்சம் மிரளச் செய்யும். ஆனால் seriousஆக நடத்த நினைப்பவர்களுக்கு நிச்சயம் உதவும்.
சிவா சொன்னது போல அட்டெனன்ஸ் அடுத்தடுத்து பதிவுகளில் வெளியிடலாம்.
சென்னையை மழை எட்டிப் பார்க்கிற நேரம். இதை மனதில் கொண்டு, சென்னை பதிவர் சந்திப்புக்கு முன்னேற்பாடுகள் செய்து கொள்ளவது நல்லது.
சார், நீங்கள் சொல்வது அலுவலக சந்திப்பு
இப்பொழுது நடந்து கொண்டிருப்பது நட்பு ரீதியான சந்திப்பு
---
காலாண்டு விடுமுறை விட்டவுடன், பேட்டையும், ஸ்டம்புகளையும் எடுத்துக்கொண்டு மைதானத்திற்கு செல்லும் போது
ஆட்டத்தை முன்னின்று நடத்துபவர், தலைப்பு என்றெல்லாம் முடிவு செய்தா போவார்கள்
-
சென்ற பின் தான் ஒரு அணிக்கு எத்தனை பேர், one bounce catch, two side fielding, off side கிடையாது என்று முடிவாகும்.
இது அது போல் தான்
-
Business சந்திப்பு நடத்த விரும்புகிறவர்கள் தனியாக நடத்த வேண்டியது தான்
-
ஏதோ 2 மாசத்திற்கு ஒரு தடவை பீச்சில் உட்கார்ந்து நமீதாவையும், சிவராஜ் பாட்டிலையும் பற்றி பேசுவதை மாற்ற வேண்டாம் என்று நினைக்கிறேன்
செல்வா தங்கள் ஆலோசனைக்கும் அக்கறைக்கும் நன்றிகள்.
ஆனால், ஒவ்வொரு பதிவரின் விருப்பம், ஆசை, ஈடுபாடு. வேவேறாக இருக்கலாம்.
அவர்கள் இருக்கும் ஊர், நாடு, வயது, பாலினம், தொழில் பொருத்தும் விருப்பம் மாறுபடலாம்.
ஒரு பதிவர்க்கு சினிமா புடிக்கலாம், இன்னொருவருக்கு கிரிக்கெட் புடிக்கலாம், ஒருவருக்கு அரசியலே பிடிக்காமல் இருக்கலாம், ஒருவருக்கு தமிழ் இலக்கியம் , இலக்கணம் அறுவை போல தோன்றலாம்.
ஒருமித்த ஆர்வம் கொண்ட பதிவர்கள் சந்திப்பு நடந்தால் தாங்கள் சொன்ன வழிமுறைகளை சிறிதேனும் பின்பன்ற்றலாம்.
இந்த பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு தான் பதிவர் / அரட்டையர் (bloggers/ chatters )சந்திப்புகளில் எல்லாருக்கும் எப்போதும் பிடிக்கும் அடுத்தவரை கேலி, கிண்டல் செய்யும் விடயத்தை அளவில்லாமல் உரையாடுவது. இது என் அனுமானம்.
பெருமபன்மை பதிவர் வெளிநாடுகளில் வசித்து விருமுறை நாட்களில் மழ்கிழ்சியாக இருக்க தமிழ்கம் வருகிறார்கள், அவர்களிடம் நாம் திரும்பவும் பொருளாதாரம், அறிவியல் , மென்பொருள் இயல் கண்டுபிடிப்புகள், சாதி ஒழிப்பு வழிமுறைகள், அடையாறு சாலைகளை எப்படி அமெரிக்கா சாலைகள் போல மாற்றுவது, சென்னையை டப்ளின் போல மாற்றுவது என்று பேசினால் மனிதர் அடுத்த flight புடிச்சு ஊர் ஓடி விட மாட்டாரா.
புருனோ,
நீங்கள் சொன்ன அந்த ஹாலிடே மூட் தான் நம் அனைவரின் தேவையும்.
ஆனாலும் இது தொடர்ந்து ஒழுங்காக நடக்கவேண்டும் என்றால் நாம் Better Organizedஆக இருக்கவேண்டும் என்ற கருத்தை நான் மாற்றிக் கொள்வதாக இல்லை.
குப்பன்,
மொக்கை திரைப்படங்கள் கூட 6 மணிக்கு ஆரம்பித்து 9 மணிக்கு முடிந்துவிடும் என்று ஒரு வரைமுறைக்குள் இருப்பதால்தான், நாம் போவதும், போகாமலிருப்பதும் சாத்தியமாகிறது.
அதே போல சில குறைந்தபட்ச வரைமுறைகள் அவசியம் என்பதில் நான் இன்னமும் பிடிவாதமாகத்தான் இருக்கிறேன்.
மற்றபடி,
நானும் பீச்சில் கிரிக்கெட் விளையாடவும்,
நமீதா - நயன்தாராக்களை குருப் ஜொள்விடவும் ரெடி!
எப்படியாவது வரப்பார்க்கிறேன்.
//
r.selvakkumar said...
மற்றபடி,
நானும் பீச்சில் கிரிக்கெட் விளையாடவும்,
நமீதா - நயன்தாராக்களை குருப் ஜொள்விடவும் ரெடி!
//
அண்ணி உடனடியாக கவனித்து தகுந்த நடவடிக்கை (மண்டகப்படி நடத்தவும்!!) எடுக்கவும்.
:))))))))))
சிவா,
வீட்டுக்காரம்மாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே நைஸாக ஜொள்ளுவிடுவது, கல்யாணமான எல்லா கணவன்களுக்கும் வந்துவிடும். லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும் உங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
போகிறபோக்கை பார்த்தால் நானும் சென்னை பதிவர் சந்திப்புக்கு ஆஜராகிவிடுவேன் போலிருக்கிறது.
நயன்தாரா - நமீதா பற்றி நன்கு தெரிந்த அனைவரும் வந்து ஜொள்ளுவிட்டுக்காட்டும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்.
//
r.selvakkumar said...
சிவா,
வீட்டுக்காரம்மாவை பக்கத்தில் வைத்துக்கொண்டே நைஸாக ஜொள்ளுவிடுவது, கல்யாணமான எல்லா கணவன்களுக்கும் வந்துவிடும். லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும் உங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
//
அப்பாடா இதை கேக்குறப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு!!
:):):):):):):):)
சிவா,
இதை படிக்கும்போது நிம்மதியாத்தான் இருக்கும்,
ஆனா படிச்சு முடிச்சதுக்கப்புறம் . . . அடப் போங்க சார்... எவ்வளவு நேரம்தான் நிம்மதியா இருக்கற மாதிரியே நடிக்கறது.
Post a Comment