விஜயகாந்த் வாய்விட்டு சொன்னது
தமிழக போலீஸ் அராஜகங்களைப் பார்க்கும்போது,
திரைப்படத்தில் கூட யூனிஃபார்ம் அணியும்போது அருவருப்பாக இருக்கிறது.
விஜயகாந்த் மனசுக்குள் ஜபிப்பது
முதல்வர் நாற்காலியிலிருப்பவர் செய்யும் அட்டகாசங்களைப் பார்க்கும்போது,
2011ல் நான் எப்படியாவது முதல்வராகிவிடவேண்டும் போலிருக்கிறது.
அதாவது . . .
போலீசெல்லாம் கெட்ட போலீசாம்.
அதனால் போலீஸ் வேஷம் போடக்கூட அருவருப்பாக இருக்கிறதாம்.
அதே போல தற்போதைய முதல்வர் நாற்காலியும் கெட்ட நாற்காலியாம்.
ஆனால் அந்த நாற்காலி 2011ல் வேண்டுமாம்.
போலீஸ் உடை என்றால் அருவருப்பு, முதல்வர் பதவி என்றால் தகதகப்பா? அட்டுழியம் செய்வதாகச் சொல்லி போலீஸ் என்றாலே அருவருக்கும் விஜயகாந்த், அதே போல அட்டூழியம் செய்வதாகச் சொல்லும் முதல்வர் பதவியைக் கண்டும் அருவருப்பாக இருக்கிறது ஏன் சொல்லவில்லை?
வெரி சிம்பிள் லேடீஸ் அண்டு ஜென்டில்மென்.
பதவி என்பது ஒரு வெறி. விஜயகாந்துக்கு அந்த வெறி தலைக்கேறிக்கொண்டிருக்கிறது.
4 comments:
:-))
அதிகம் இல்ல ஜென்டில்மன் ஒருதடவா அந்த நாற்காலியை அவர்க்கு கொடுங்க, இவங்க நாற்பது வருடம் கொள்ளை அடிச்சதா இவரு அஞ்சு வருடத்தில் முடித்து விடுவார்.
:))
வெல்கம் பேக் சிவா,
நிறைவான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!
Post a Comment