அ.தி.மு.க நடத்துகிற ஆர்ப்பாட்டங்களுக்கே ஜெயலலிதா ஆஜராகமாட்டார். அவருடைய எடுபிடிகள்தான் வருவார்கள். இந்த இலட்சணத்தில் இந்திய கம்யூனிஸ்டுகள் நடத்துகிற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க சப்போர்ட் என்பது பெரிய அரசியல் திருப்புமுனையாக அ.தி.மு.க ஆதரவு மற்றும் தி.மு.க எதிர்ப்பு மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டன.
ஜெயலலிதா வழக்கம்போல தன்னுடைய டிபிக்கல் ஸ்டைலில் அனைவருக்கும் நோஸ்கட் கொடுத்துவிட்டார். போராட்ட பந்தலுக்கு தன்னுடைய எடுபிடி அ.தி.மு.க., அமைப்புச் செயலர் முத்துச்சாமியைக் கூட அனுப்பவில்லை. அதுமட்டுமல்ல அதற்க்கான காரணத்தைக் கூட இந்த வினாடி வரை யாரையும் மதித்துச் சொல்லவில்லை. இத்தனைக்கும் வலியவந்து, அ.தி.மு.க பங்கேற்கும் என்று எழுத்து மூலம் அறிவித்தவர் அவர்தான்.
சுயமரியாதைச் சிங்கங்களான வை.கோ. மற்றும் காம்ரேட்கள் ஜெயலலிதாவின் இந்த அவமரியாதை அட்டாக்கை எப்படி மீசையில் மண் ஒட்டாமல் சமாளிக்கிறார்கள் என்பதைக் காண ஆவலோடு இருக்கிறேன்.
ஜெயலலிதா மாறிவிட்டார். கட்சித்தொண்டருடன் அமர்ந்து உணவு சாப்பிடுகிறார், அனைவரையும் மதிக்கிறார் என்று அவருடைய கைத்தடி நாளிதழ் தினமலர், பத்து நாளைக்கு முன்பே பொய் பிரச்சாரத்தை துவக்கியது. இதை நானும் குறிப்பிட்டிருந்தேன்.
இதில் ஐயோ பாவம் யார் தெரியுமா? ஜெயா ஆதரவு மீடியாக்களின் பிரச்சாரத்தை நம்பி ஏமாந்த இலங்கை தமிழ் எம்.பிக்கள்தான். ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தர தயாராகிவிட்டார் என்று அவர் பங்கேற்கும் முன்பே, ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாக அவசரப்பட்டு ஜெயாவை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.
நான் இப்பவும் சொல்கிறேன், விஜயகாந்த் - கம்யூனிஸ்ட் கூட்டணி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்க்காக ஜெயலலிதா மேற்கொண்ட கீழ்த்தரமான நாடகம்தான் இந்த போராட்டத்திற்கான சம்மதமும், வாபசும்.
கருணாநிதியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்கும் அனைவருக்கும் இது ஒரு சரியான அவமரியாதை 'பஞ்ச்'.
சுய புத்தியும், சுய மரியாதையும் உள்ளவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை!
24 comments:
//ஜெயலலிதா வழக்கம்போல தன்னுடைய டிபிக்கல் ஸ்டைலில் அனைவருக்கும் நோஸ்கட் கொடுத்துவிட்டார்// :):):)
//தன்னுடைய எடுபிடி அ.தி.மு.க., அமைப்புச் செயலர் முத்துச்சாமியைக் கூட அனுப்பவில்லை//
அப்போ, பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இவங்கெல்லாம் எந்த கேட்டகிரி ?:):):)
:)))))))
//சுய புத்தியும், சுய மரியாதையும் உள்ளவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை//
காம்ரேடுகள் அதை இழந்து தான் பல காலம் ஆகின்றதே. பிறகேன் அவர்கள் அதை பற்றி கவலை பட வேண்டும்
அமெரிக்கா இந்தியாவை அடிமைபடுத்தப்போகிறது என்ற இத்துப் போன கொள்கையால் காங்கிரசை எதிர்க்கும் கம்யுனிஸ்டுகள், தமிழகத்தில் திமுக கூட்டணியைவிட்டு ஜெயலலிதாவின் காலில் விழவேண்டிய கேவலமான நிலையில் இருக்கின்றனர்
ரஷியா, சீனா போன்ற நாடுகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்ட நிலையில் இவர்கள் மட்டும் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்கின்றனர்.
போயஸ் தோட்டத்தில் சசிகலாவைத் தவிர அனைவருமே எடுபிடி ரேஞ்ச்தான்.
ஆனால் சசி-ஜெயா இருவரில் யார், யாருக்கு எடுபிடி என்பதில் மட்டும் இரகசியம்.
சதுக்க பூதம்,
கம்யூனிசத்தின் மேல் உள்ள மரியாதையால் எழுதப்பட்ட பிளாக் இது. கம்யூனிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களின் மேல் எனக்கு அந்த அளவுக்கு அபிப்ராயம் இல்லை.
ராபின்,
காங்கிரஸை கம்யூனிஸ்டுகள் எதிர்க்க காரணம், அணு ஆயுத ஒப்பந்தம்.
தி.மு.கவை எதிர்க்க காரணம்...? அதுவும் அணு ஆயுத ஒப்பந்தம் தான் என்றால், அவர்கள் கூட்டணி வைக்க விரும்பும், அம்மா, கேப்டன் என யாருமே அந்த ஒப்பந்தத்தை மறுக்காதவர்கள்தான். அவர்கள் சிறு மாற்றங்களுடன், தங்கள் ஆட்சிகாலத்தில் ஒப்பந்தம் போட விரும்புபவர்கள். அவ்வளவுதான்.
கம்யூனிஸ்டுகளை இனி Confusuedகள் என்று அழைக்கலாமா?
ராபின்,
காங்கிரஸ் தங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்ற ஈகோ பிரச்சனைதான் கம்யூனிஸ்டுகளின் பிரச்சனை. அணு ஆயுத ஒப்பந்தத்தை காரணம் காட்டுவதெல்லாம் சும்மா பாவ்லா.
முடிந்தால் சைனாவை ஏன் 10 ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திட்டீர்கள் என்று கேட்கட்டும்.
//கம்யூனிஸ்டுகளை இனி Confusuedகள் என்று அழைக்கலாமா?//
சரியாக சொன்னீர்கள். தற்போது திமுகவை கம்யுனிஸ்டுகள் எதிர்க்க காரணம் அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதே. ஒருவேளை பாஜக ஆடசிக்கு வந்தாலும் அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்த ஒப்பந்தத்தை தவிர வேறு காரணங்களும் இருக்கலாம். இதில் பிரகாஷ் காரத்தும் அவர் மனைவியும் காங்கிரசுக்கு எதிராக காட்டும் அளவுக்கு மீறிய துவேசத்தின் உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.
//கம்யூனிசத்தின் மேல் உள்ள மரியாதையால் எழுதப்பட்ட பிளாக் இது. கம்யூனிஸ்டுகள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களின் மேல் எனக்கு அந்த அளவுக்கு அபிப்ராயம் இல்லை.// கம்யுனிசம் வெற்றி பெறாமல் போனதற்கு முக்கியமான காரணம் கம்யுனிஸ்டுகளே. ஆனால் கம்யுனிஸ்டுகளிடம் எனக்கு பிடித்த குணம் அவர்களின் எளிமை. நூறு கார்களுடன் அரசியல்வாதிகள் பவனி போவது கேரளா போன்ற மாநிலங்களில் காணமுடியாத காட்சி.
ராபின்,
இந்தியாவில் கம்யூனிஸம் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தாமல் போனதற்கு 'so called' கம்யூனிஸ்டுகள்தான் காரணம்.
ஆனாலும் எளிமை விஷயத்தில் அன்றும் இன்றும் அவர்கள் முன்னோடிகள்தான். அவர்களின் இந்தக் குணத்தை மற்ற கட்சிகள் பின்பற்றினால், ஊழலால் வீணாகும் பணத்தை விட, அதிக பணத்தை இந்தியா சேமிக்கும்.
கம்யூனிஸ்ட்களுக்கு இது ஒரு பொழுது போக்கு. அதுவும் ஜெயலலிதாவிடம் நோஸ்-கட் வாங்குவது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல். முன்பொருமுறை திரு. சங்கரையவையும், திரு. நல்லகண்ணு அவர்களையும் ஜெ வீட்டு வாசலில் நிற்க வைத்து பார்க்காமல் அனுப்பிய வரலாறு உண்டு, மேலும் ஜெ சொன்ன, நடுநிலயாலர்களையும் நடுநடுங்க வைத்த வாசகம்,
"கம்யூனிஸ்ட்களுக்கு போலித் பீரோவில் பேசுவதை தவிர வேறொன்றும் தெரியாது" இது போல பல. மனிதர்களுக்கு இருக்கும் பல சவுரியங்களில் ஒன்று மறதி. இது இன்றைய கம்யூனிஸ்ட்களுக்கு நிறையவே இருக்கு( தங்கள் சவுகரியத்திற்காக).
கம்யூனிஸ்ட்களுக்கு இது ஒரு பொழுது போக்கு. அதுவும் ஜெயலலிதாவிடம் நோஸ்-கட் வாங்குவது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல். முன்பொருமுறை திரு. சங்கரையவையும், திரு. நல்லகண்ணு அவர்களையும் ஜெ வீட்டு வாசலில் நிற்க வைத்து பார்க்காமல் அனுப்பிய வரலாறு உண்டு, மேலும் ஜெ சொன்ன, நடுநிலயாலர்களையும் நடுநடுங்க வைத்த வாசகம்,
"கம்யூனிஸ்ட்களுக்கு போலித் பீரோவில் பேசுவதை தவிர வேறொன்றும் தெரியாது" இது போல பல. மனிதர்களுக்கு இருக்கும் பல சவுரியங்களில் ஒன்று மறதி. இது இன்றைய கம்யூனிஸ்ட்களுக்கு நிறையவே இருக்கு( தங்கள் சவுகரியத்திற்காக).
அனானி அண்ணா,
காம்ரேட்களின் ஞாபக மறதியை, ஞாபகப் படுத்தியதற்கு நன்றி!
"சார் இதைப் படிச்சுட்டு கம்யூனிஸ்டுகள் யாராவது உங்களை கோவிச்சுக்கிட்டா என்ன செய்வீங்க?"
என்று என்னுடைய பிளாகை படித்துவிட்டு, என்னுடைய மாணவர்களில் ஒருவர் கேட்டார்.
"என்னை கோவிச்சுக்கற அளவுக்க சொரணை இருந்தா, இன்னொரு முறை காம்ரேட்கள் அம்மாவின் அப்பாயின்ட்மென்ட் கேட்டு போயிருக்கமாட்டார்கள்"
என்று பதில்சொன்னேன். உங்களுடைய பின்னூட்டம் என்னுடைய பதிலுக்கு சரியான சப்போர்ட்!
She is the very vaste politician in Tamilnadu & That party members must be remove this Badlady from their party.
அடுத்த தலைமுறைக்கு கம்யூனிஸ்ட் என்றால் என்னவென்று தெரியவேண்டுமானால், கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து தேர்தலில் நிற்பதற்காக அடுத்த கட்சிகளின் கை, காலை பிடிப்பதற்கு பதில் (அதிலும் ஜெ போன்றோரின்), அரசியல் கட்சி என்பதை கலைத்துவிட்டு, மக்கள் இயக்கமாக மக்களுக்காக தொண்டு, சேவை செய்து காமுநிசத்தை தயவு செய்து கைப்பற்றவும். ( செல்வம்-அண்ணனுக்கு கம்யூனிஸ்ட்களின் மறதியை ஞாயபகபடுதிய அனானி)
வாங்க செல்வம்,
என்னையும் நண்பர்கள் செல்வம் என்றுதான் கூப்பிடுவார்கள்.
மிக்க மிகழ்ச்சி!
இன்னைக்கு செய்தி பார்த்தீங்களா? விஜயகாந்த்தை ஆஸ்பத்திரிக்குள்ள விடலயாம்!
பழ்க்கடைப் பாண்டியனுக்குக்
கொடுத்த மரியாதை!
பாவம்!போயஸ் தோட்டத்திற்கு
மரியாதை கொடுக்க நினைத்த
பாண்டியனுக்குக் கிடைத்த மரியாதை.
தமிழனாக நடந்து கொள்ளுங்கள்.தரங்கெட்டு விடாதீர்கள் என்பது பாண்டியர்க்குப் புரிந்தால் சரி.
இவர் அங்க போகிறது, அவர் இங்க வருவது எல்லாம் ஆளும்கட்சி M,L.A., M.P., மந்திரி ஆவர்காக தான். அரசியல், அரசியல் ஒவ்வொரு செயலிலும் அரசியல்(குட்டி கலாட்டா) . இதில்( விஜயகாந்த் ஆஸ்பிடல் போய் திரும்பி வந்தது) யார் என்ன அரசியல்( குட்டி கலாட்டா) பண்ணினார்களோ
செல்வம்
பாண்டியர்கள் லகுட பாண்டியர்களாகத்தான் நடந்து கொள்வார்கள் போலிருக்கிறது.
நீங்கள் சொன்னது போல எல்லாமே ஒரு எம்.எல்.ஏ மற்றும் எம்.பி சீட்டுக்குத்தான்.
தற்போது இருப்பது வெறும் சீட்டு கணக்கு அரசியல். ஜெயிப்பதுதான் முக்கியம். அதனால் சீட்டாட்டம் போலவே நடக்கிறது.
இன்றைக்கு சீட்டாட்டத்தில் 'விஜயகாந்த் ஒரு துருப்புச் சீட்டு'
இதுதான் அரசியலோ !!!!
திராவிடன்,
இது மட்டுமல்ல அரசியல். சொல்லப்போனால், நியாயத் தராசை வைத்து யாருடைய அரசியலையும் அளக்க முடியாது.
அவரவர்க்கு அவரவர் பக்கம் நியாயம்.
Post a Comment