Wednesday, May 6, 2009

கருணாநிதி இருந்தும் இல்லாத தேர்தல் களம்

தி.மு.க தன்னை புதிய தலைமைக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. தி.மு.வின் சரித்திரத்தில் முதன் முறையாக கருணாநிதி இல்லாமல் அடுத்த கட்டத் தலைவர்கள் மட்டும் களத்தில் உள்ளார்கள். வடசென்னையில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்திற்குப்பின் திருச்சியில் ஒரு கூட்டத்தில் கருணாநிதி பேசினார். அத்துடன் சரி. முதுமையும், தற்போதைய உடல் நிலையும் அவரை மீண்டும் மருத்துவமனைக்குள் முடங்கச் செய்துவிட்டது. இன்றைக்கு (மே 6) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் இணைந்து செய்யவிருந்த பிரச்சாரம் ரத்தாகிவிட்டது. இன்னும் இரு நாட்களுக்கு அவர் மருத்துவமனையில்தான் இருப்பார் என்று செய்திகள் கூறுகின்றன.

நிச்சயமாக தி.மு.க தொண்டர்களுக்கு இது ஒரு சோர்வை உண்டாக்கும். குறைந்தபட்சம் இன்னும் ஒரே ஒரு பிரச்சார மேடையிலாவது கருணாநிதி தோன்ற வேண்டும் என்று தீவிர உடன்பிறப்புகள் காத்திருக்கின்றார்கள். கருணாநிதி அப்படி ஒரு சாகசத்தை செய்யக் கூடியவர்தான். தற்போது வீல் சேரில் அசராமல் வலம் வருவதைப்போல, ஸ்டெரச்சரில் படுத்துக் கொண்டாவது ஒரு மேடையில் எதிர்க்கட்சிகளுக்கு பதில் சொன்னாலும் சொல்வார். அப்படி ஒன்று நடந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கருணாநிதியின் விளம்பர மோகமும், எத்தனையோ கருத்துக்களும், அரசியல் நடவடிக்கைகளும் எனக்குப் பிடிக்காது. ஆனால் அவருடைய உழைப்புக்கும், எதற்கும் துவளாத குணத்துக்கும் நான் மிகப் பெரிய இரசிகன். இந்தக் குணத்தைப் பொறுத்தவரை, இன்றைய தேதியில் உலக அளவில் அவருக்கு ஈடு கொடுக்க எவரும் இல்லை. குறிப்பாக தி.மு.வில் எவரும் இல்லை.

இருந்திருந்தால் இன்றைக்கு சோனியாவுடன் அவர்கள் கருணாநிதியின் இடத்தை பிரச்சார மேடையில் நிரப்பியிருப்பார்கள். இன்றையக் கூட்டம் நடந்திருக்கும். இன்றைய பிரச்சாரக் கூட்டத்தின் ரத்து, தி.மு.வின் நிலையைத்தான் காட்டுகிறது.

கருணாநிதி இந்தத் தேர்தலை விட, தேர்தலுக்குப் பின் கட்சியின் தலைமையைப் பற்றித்தான் அதிகம் கவலைப் படுகிறார் என்று நான் நினைக்கிறேன். நான் நினைப்பது சரியோ தவறோ, ஆனால் அவர் தேர்தலுக்கு முன் இன்னும் ஒரே ஒரு முறையாவது மேடையில் தோன்றி கர்ஜிப்பார் என்று காத்திருக்கிறேன்.

ஜெயலலிதா மட்டும் தனியாக வாள் சுழற்றுவது, ஜெயலலிதாவுக்கே அலுப்பாக இருக்கும். நீங்கள் இல்லாத தேர்தல் களம் பரபரப்பின்றி இருக்கிறது! வாருங்கள் கலைஞரே!

3 comments:

Anonymous said...

கருணாநிதியின் விளம்பர மோகமும், எத்தனையோ கருத்துக்களும், அரசியல் நடவடிக்கைகளும் எனக்குப் பிடிக்காது. ஆனால் அவருடைய உழைப்புக்கும், எதற்கும் துவளாத குணத்துக்கும் நான் மிகப் பெரிய இரசிகன்!
Do you like Pirabaharan's behaviour?
like & dislike behaviour of Pirabaharan's behaviour???

Anonymous said...

KARUNANITHI'S,இந்தக் குணத்தைப் பொறுத்தவரை, இன்றைய தேதியில் உலக அளவில் அவருக்கு ஈடு கொடுக்க எவரும் இல்லை. thats correct!!
1.he is a good actor
2.he is a good comedian
3.he is a cheater!
4.he is a big robber!
5.he is a good stunt man
Ha ha ha!!

Anonymous said...

unmail nejam.kalainger kandippa
medaiil thondruvar.
Abishek.Akilan.