நேற்று ஐதராபாத்தில் பயிற்சி முடித்துவிட்டு கோவை மாவட்டம் மதுக்கரை ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். அதைப் பார்த்த சில அதிரடி ஈழ ஆதரவாளர்கள், இந்திய இராணுவம் இரகசியமாக இலங்கைக்கு ஆயுதம் எடுத்துச் செல்வதாக நினைத்து வீரர்கள் வந்த லாரிகளை வழிமறித்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். முதலில் பயந்து ஓடிய இராணுவ வீரர்கள் துணைக்கு அவர்களது தோழர்கள் வந்தவுடன் உருட்டுக் கட்டைகளால் திருப்பித் தாக்கியிருக்கின்றனர். வேடிக்கைப் பார்த்த பொது மக்கள் உட்பட, தடுக்க வந்த போலீஸ்காரர்களுக்கும், செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கும் இந்தத் தாக்குதலில் அடி விழுந்திருக்கிறது.
இது விரும்பத்தகாத சம்பவம். உலகப் பொருளாதாரச் சரிவால் ஏற்கனவே திடீரென வேலை வாய்ப்புகளை இழந்துள்ள இந்திய இளைஞர்கள், இது போன்ற சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விரக்தியான நிலையை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள், ஈழப் பிரச்சனை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா இரயில் எரிப்பு போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களில் உங்களை பலியாடாக்க முயல்வார்கள். உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். ஏற்கனவே தீக்குளிப்புகள் பரவிக் கொண்டிருக்கின்றன. சில குடும்பங்கள் அமைதியை இழந்து விட்டன. இப்போது நமது இந்திய இராணுவத்தினரையே அதுவும் இந்திய எல்லைக்குள்ளேயே, தாக்குவதென்பது பக்குவமற்ற முட்டாள்தனமான ரௌடித்தனமான செயல்.
இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் ஆளாளுக்கு ஒரு கருத்து இருக்கும். ஏன் நமது வீட்டுக்குள்ளேயே, ஒரு குறிப்பிட்ட அரசியல் விவகாரத்தில் அப்பாவுக்கு ஒரு கருத்தும், அம்மாவுக்கு ஒரு கருத்தும், மகனுக்கு ஒரு கருத்தும் இருக்கும். அப்படி இருக்கிறது என்பதற்க்காக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது போன்ற ஒரு கேவலமான அவலமான நிலைதான், நாமே நமது இராணுவத்தை தாக்குவதாலும் ஏற்படும்.
அதனால் மீண்டும் அறிவுறுத்துகிறேன். நீங்கள் எந்தக் கழகத்தை ஆதரித்தாலும் பரவாயில்லை. எந்தக் கழகத்தை எதிர்த்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்தியாவையே எதிர்க்கிறேன். இந்திய இராணுவத்தையே எதிர்க்கிறேன் என்று நமது நாட்டுக்குள்ளேயே கலகம் பண்ணாதீர்கள். நஷ்டம் உங்களுக்குத்தான். உங்களைத் தூண்டிவிடுபவர்களுக்கல்ல.
உங்களைத் தூண்டிவிடுபவர்கள் அனைத்தையும் பணத்தால் அளப்பவர்கள். நீங்கள் தீக்குளித்தால் உங்கள் குடும்பத்துக்கு பத்து இலட்சம் கொடுத்துவிட்டு, அதனால் பத்து ஓட்டு கிடைக்குமா என்று கணக்குப் போடுபவர்கள்.
உங்களை இந்திய இராணுவத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டு, மோதவிட்டு அதை உணர்ச்சிகரமான செய்தியாக்கி, அந்தச் செய்தியை ஓட்டுகளாக்கி நாளைக்கு பதவிக்கு வந்ததும், நீங்கள் எதிர்க்கின்ற இதே இந்திய இராணுவத்தை காவலுக்கு வைத்துக் கொண்டு நாடாளத் துடிப்பவர்கள்.
நீங்கள் இப்படிச் செய்வதால் இலங்கைப் பிரச்சனை மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுடன் நிதானமாக சிந்தியுங்கள்!
10 comments:
நியாயமான பார்வை.,
இளையவர்கள் உண்மையை உணர வேண்டும்
//உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுடன் நிதானமாக சிந்தியுங்கள்!//
வழிமொழிகிறேன்
Actually they saved some Tamils in EELAM . Otherwise these Indian forces will keep kill us .
Please stop India to kill Tamils.
what they have done is right.Govt thinks tamils are fools how dare they have send the indian army thru the state where people are protesting against them.Tell india is not supporting the genocide.It has to be done long time back to show the govt that what they are doing is wrong this is the end of patience.And India has created more Eelam supporters than before .Its a human instinct .I dont know how you are talking like a politician. To keep the cool.The time has gone to end the cool
தெளிவான பார்வை. அந்த முட்டாள்களுக்கு புரிந்தால் சரி தான். தீ குளிப்பவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவார்களாம் பிறகு இத்தாலிகாரி முந்தானையை விட மாட்டார்களாம். போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட அரசியலும்.
முழு உண்மை அறியாமல் எழுதக் கூடாது. அப்படி எழுத ஆசை இருந்தால் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். என்ன சொல்கிறேன் என்று புரிந்திருக்கும். ஐதராபாத்தில் பயிற்சி முடித்துவிட்டு கோவை மாவட்டம் மதுக்கரை ராணுவ முகாமுக்கு வந்த வீரர்கள் என்று சொல்கிறீர் அது உண்மை என்பதற்கான ஆதாரத்தை நீங்கள் சொல்ல வேண்டும். அரசு சொல்லிய தகவலை நீங்களும் வழிமொழிந்துள்ளீர் அல்லது வாங்கி தின்று வாந்தி எடுத்துள்ளீர்.
தமிழின உணர்வாளர்கள் முட்டாள்கள் என்று நீங்கள் சொல்கிறீர். ஆனால், தொலைக்காட்சிக்கு எடுக்கப்பட்ட விடியோவில் ஊர் இராணுவ வீரர் கூறும்போது, இது கொச்சிக்குதான் போகுது என்று சொன்னது பதிவாகியிருக்கு. அதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
"இருநூறு இராணுவ வீரர்களை கொண்டு செல்வதற்கு எண்பது வண்டிகள் தேவையில்லை. ஐதராபாத்தில் இருந்து வந்த வண்டிகளில் ஜெய்ப்பூர் என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது." இத்தகவல்களை தெரிந்துகொள்ளாமல் எடுத்த எடுப்பில் உணர்வோடு போராடியவர்களை "முட்டாள்கள்' என்ற சொல்லை பயன்படுத்தி இருக்க தேவையில்லை.
அவ்வாறு நாகரீகம் தெரியாத நீங்கள் முட்டாளா? உண்மைகளை வெளிப்படுத்த துடித்த இயக்கவாதிகள் முட்டாள்களா? கொஞ்சம் யோசியுங்கள்.
அரச பயங்கரவாதத்தால் உடல் சிதறி படுகொலை செய்யப்படும் ஈழ்த் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அதை செய்துவரும் இந்திய இராணுவத்தை கண்டிக்க திராணி உங்களுக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டில் வாழும் சில பிராணிகளை போல வாழ்ந்து விட்டு போங்கள்.
அதே நேரத்தில் இலங்கையில் கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மக்களை கண்டு சோறு தின்ன முடியாமல் மனம் நொந்து இருக்கும் தமிழ்ர்களை - மனிதர்களை குறை சொல்லாமல் ஜடமாக கிடங்கள்.
//தீக்குளிப்புகள் பரவிக் கொண்டிருக்கின்றன//
முட்டாள்கள் சாகட்டும், பூமிக்கு பாரமாக இருக்க வேண்டம்...
நீங்கள் முழு தமிழ் இனத்தையும் முட்டாள்கள் என்று சொல்லி இருக்கலாம்.
என்னை உட்பட.
ஒரு இனம் அழிந்து கொண்டு இருக்கிறது.You can TELL,..CRY....and DIE...யாரும் கேட்பாரில்லை .
அவர்கள் ராவவ்டிகள் என்று இனம் கண்ட நீங்கள் ..அவர்கள் தமிழர்கள் என இனம் காண மறந்தது ஏனோ..
I am Indian to my core..but if my nation is hijacked and ruled by a Dictator of a foreign national I have to fight to hear my peoples voice..You have every rights to arrest and put in Jail you cant do all 6 crores..
Violence is not done against the army men only to the vehicles to show the protest.
Even Gandhi would have done this ..No one is hurt all human life was safe.
Not like to capture one person..You kill all people.
Watch the hell happening to a human..I am sorry if I wrote anything wrong
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ???
இவர்கள் செய்யும் தவறுகள் ராணுவத்தில் பணிபுரியும் தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் தமிழ் நாட்டின் அமைதியை கெடுக்கும் இதை போன்ற வன்முறை நிகழ்ச்சிகள்.தமிழகத்தில் உள்ள இந்தியாவை சேராதவர்களே இதைபோன்றதொரு நிகழ்வு நிகழ காரணமாக இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றேன் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அமைதியை விருப்புகிறார்கள்.காலம் நிச்சயம் அந்த அமைதியை பறிக்காது
Post a Comment