Wednesday, October 7, 2009

கவிதை என்பது . . .



கவிதை!
நினைத்தால் வருவதல்ல.
உள்ளுக்குள் ஊறியிருக்கும்
நினைப்பால் வருவது!

தோற்றவனின் முகச்சுளிப்பு அல்ல.
அகத்தின் ஆழத்தில் பெருகி வரும்
வேதனைகளின் வார்த்தை தெளிப்பு!

நீண்டு விரிந்திருக்கும் பாதை அல்ல
அதில் பதிந்து அழிந்திருக்கும்
பாதச் சுவடுகள்!

புல்லாங்குழலின் துளைகளில் தெறிக்கும்  இசை அல்ல.
இசைப்பவனின் ஆன்மாவில்
அமிழ்ந்து கிடக்கும் ஆரவாரங்களின் முணுமுணுப்பு!

இளநியில் பூசியிருக்கும் பச்சை மினுமினுப்பு அல்ல
நார்களின் உள்ளே பொதிந்திருக்கும்
நீரின் குளுகுளுப்பு!

----------------------------- இந்த வரிகள் 30.4.85ல் எழுதியது

கவிதை என்பது . . .
எழுதியது அல்ல
எழுத நினைப்பது!

----------------------------- இந்த வரிகள் இன்று எழுதியது

9 comments:

கலையரசன் said...

கமெண்ட் என்பது...
நாம் போட நினைப்பது!
---------------------
இது இப்ப எழுதியது!

கிருஷ்ண மூர்த்தி S said...

அப்பா கமெண்டும் இருபத்தஞ்சு வருஷம் கழித்து வந்து போட்டாத் தான் சரியா இருக்குமா?

ISR Selvakumar said...

கிருஷ்ணமூர்த்தி,
25 வருஷம் கழிச்சு கமெண்ட் போடற அளவுக்கு என்னோட எழுத்து இருந்தா எனக்கு சந்தோஷம்தான்.

ஆனா ஒண்ணு, உங்க நகைச்சுவை எனக்கு பிடிச்சிருக்கு

ISR Selvakumar said...

வாங்க கலையரசன்

அ. நம்பி said...

//நினைத்தால் வருவதல்ல.உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது!//

நல்ல சிந்தனை; வாழ்த்துகள்.

ISR Selvakumar said...

நன்றி நம்பி!

Raja - London said...

அகத்தின் ஆழத்தில் பெருகி வரும்
வேதனைகளின் வார்த்தை தெளிப்பு!

--நல்ல நல்ல சிந்தனைkaL; வாழ்த்துகள்!!
Raja - London

ISR Selvakumar said...

Thanks Raja

ஸ்ரீராம். said...

கவிதை
என்பது
எனக்கு
வரவே
வராதது...!