Saturday, May 2, 2009

சங்கராச்சாரியார் அரெஸ்ட்டில் இழந்ததை ஈழ பிரச்சனையில் ஈடுகட்டப் பார்க்கிறார் ஜெ!

சில வருடங்களுக்கு முன், மக்களுக்கு விளங்காத ஒரு மர்மப்பிரச்சனையில் சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையிலடைத்தார் ஜெயலலிதா. பொம்பளை நரேந்திர மோடி என்று ஜெயலலிதாவை ஹிந்துத்துவா ஆதரவாளர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையும் கூட. பாபர் மசூதியில் இராமர் கோவிலைக் கட்டாவிட்டால் வேறு எங்கே கட்டுவதாம் என்கிற அவருடைய பிரபலமான பஞ்ச் டயலாக், அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் ஹிந்து தீவிரவாத முகத்தின் ஒரு பக்கம். சான்ஸ் கிடைத்தால் இவரும் நரேந்திர மோடி அளவிற்கு கோர தாண்டவம் ஆடக் கூடியவர் என்பது என் எண்ணம்.

ஆனால் அவருடைய சங்கராச்சாரியார் அரெஸ்ட், கொஞ்சம் மென்மையான ஹிந்து ஆதரவாளர்களை அசைத்துவிட்டது. உதாரணத்திற்கு எஸ்.வி.சேகரின் புலம்பல்கள். அந்தப் புலம்பல்கள் ஜெவிற்கு எதிரான வாக்குகளாக மாறுகின்ற அபாயம் வந்தபோது, அதை ஈடுகட்ட ஈழப்பிரச்சனை அவருக்கு வாய்த்துவிட்டது.

ஹிந்துத்துவா ஆதரவாளர்கள் எவரும் மனம் மாறி கருணாநிதிக்கு வாக்களிக்கப்போவதில்லை.
அதே போல தனி ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் மனம் மாறி ஜெவிற்கு வாக்களிக்கப்போவதில்லை (உதாரணத்திற்கு கருணாநிதியை சூழ்நிலைக் கைதி என்று வர்ணித்துவிட்டு காங்கிரஸை மட்டும் எதிர்க்கக் கிளம்பியிருக்கும் தமிழ்திரையுலகம்).

ஆனாலும் அங்கே சங்கராச்சாரியார் அரெஸ்டால் சிதறிய வாக்குகளை, இங்கே ஈழ ஆதரவாளர்களின் கருணாநிதி எதிர்ப்பு வாக்குகளை வைத்து சரி கட்டிக் கொள்ளலாம் என்று ஜெ கணக்கு போட்டிருக்கிறார்.

அவர் கணக்கு தவறாமலிருக்க வை.கோ, இராமதாசு மற்றும் கம்யுனிஸ்டு தோழர்கள் துணை போயிருக்கிறார்கள்.
அந்தக் கணக்கு பொய்க்க வேண்டுமென்று கருணாநிதி (உண்ணாவிரதம் உட்பட) என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தேர்தல் இந்த கணக்கை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் முடிந்தவுடன் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, அனைவரும், வாக்காளர்கள் உட்பட அனைவரும் ஆளுக்கொரு திசைக்கு பறந்துவிடுவார்கள்.

ஈழப்பிரச்சனையும், சங்கராச்சாரியார் மர்மமும் அப்படியேதான் இருக்கப் போகிறது.

2 comments:

கிரி said...

//தேர்தல் முடிந்தவுடன் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, அனைவரும், வாக்காளர்கள் உட்பட அனைவரும் ஆளுக்கொரு திசைக்கு பறந்துவிடுவார்கள்.

ஈழப்பிரச்சனையும், சங்கராச்சாரியார் மர்மமும் அப்படியேதான் இருக்கப் போகிறது//

இது தான் உண்மை

ராஜரத்தினம் said...

எனக்கு புரி(ந்த)யாத புதிர்! உங்களின் ஜெயலலிதா எதிர்ப்பின் வேகமும், கருணாநிதி எதிர்ப்பின் வேகாத மும்முரமும்? வீண் முயற்சி! உங்களை போன்றவர்களின் த்திம்முக்க பற்று என்னை மெய்சிலிர்க்கவைக்கிறது