Sunday, August 24, 2008

நடிகர் நாசரின் பெருந்தன்மை


நாசரின் வீடு சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது. அங்கு அவரிடம் பாலா என்பவர் பல காலமாக சமையல் வேலை பார்த்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் நாசர் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த பாலா 'தண்ணி' அடித்து விட்டு கற்களை வீசி நாசர் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்கியிருக்கிறார்.

ஆனால் நாசர் போலீசிடம் புகார் கொடுக்கவில்லை. தற்செயலாக அந்தப் பக்கம் வந்த ரோந்து போலீசார் சந்தேகம் வந்து நாசரிடம் விசாரிக்க நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார். போலீசார் அவற்றை ஒரு புகாராக கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாசர் மறுத்துவிட்டிருக்கிறார்.

நாசர் ஏன் வேலையை விட்டு பாலாவை நீக்கினார் என்பது தெரியவில்லை.
ஆனால் சமையல்காரர் பாலா தண்ணி அடித்துவிட்டு கற்களை வீசி ரகளை செய்ததற்கு காரணம் 'வெறும் ஆத்திரம்தான்'
போலீஸ் தானாகவே வந்து விசாரிக்கும்போது நாசர் என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். ஆனால் புகார் தர மறுத்திருக்கிறார்.

அது நாசரின் பெருந்தன்மை என்றேன் நான், இல்லை, இதில் வேறு ஏதோ இருக்கக்கூடும் என்று என் நண்பர் மறுத்தார். இதில் நாசரின் பெருந்தன்மையைத் தவிர வேறு ஏதும் இருந்து விடக்கூடாது என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.

போட்டியும், பொறாமையும், வெற்றுச் சவடால்களும் பெருகிவிட்ட இந்தக் கால கட்டத்தில் விட்டுக்கொடுத்தலும், மன்னித்தலும் செய்திகளாக அடிக்கடி வரவேண்டும் என்று நினைக்கிறேன் நான்.

6 comments:

Anonymous said...

//போட்டியும், பொறாமையும், வெற்றுச் சவடால்களும் பெருகிவிட்ட இந்தக் கால கட்டத்தில் விட்டுக்கொடுத்தலும், மன்னித்தலும் செய்திகளாக அடிக்கடி வரவேண்டும் என்று நினைக்கிறேன் நான்.//

ஆமாங்க செல்வா. வஞ்சகம், பித்தலாட்டம், பொறாமை சூழ்ச்சி பற்றிய செய்திகள்தான் அதிகம் வருகிறது. நல்ல செய்திகள் வெளியே தெரிவதில்லை.

வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga) said...

செல்வா,

//அது நாசரின் பெருந்தன்மை என்றேன் நான், இல்லை, இதில் வேறு ஏதோ இருக்கக்கூடும் என்று என் நண்பர் மறுத்தார். இதில் நாசரின் பெருந்தன்மையைத் தவிர வேறு ஏதும் இருந்து விடக்கூடாது என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.//

பெருந்தன்மையான செய்தியா இருக்கணும் என்று நீங்க நினைக்கறதுக்கு ஒரு ரிப்பீட்டேய்ய்ய்ய்.

nagoreismail said...

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரை படித்திருக்கிறீர்களா?, அதில் ஒரு பேருந்தில் ஒருவர் மற்றொருவருக்கு எழுந்து இடம் கொடுக்கிறார் என்று வையுங்கள், நாம் குறைந்த பட்சம் அதை அங்கீகரிக்கும் பொருட்டு அப்படி எழுந்து இடம் கொடுத்தவரை பார்த்து புன்னகையாவது பூக்க வேண்டும் என்று பொருள்படுமாறு எழுதியிருப்பார். அதன் அடிப்படையில் எனது 'புன்னகையாக'இந்த பின்னூட்டம், 'உங்கள் எண்ணங்களுக்கு பாராட்டுகள்'

ராமலக்ஷ்மி said...

//இதில் நாசரின் பெருந்தன்மையைத் தவிர வேறு ஏதும் இருந்து விடக்கூடாது என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.//

சதங்காவின் வரிகளை வழி மொழிகிறேன்.

//விட்டுக்கொடுத்தலும், மன்னித்தலும் செய்திகளாக அடிக்கடி வரவேண்டும் என்று நினைக்கிறேன் நான்//

நல்ல மனம் வாழ்க!

குரங்கு said...

ம்ம்ம்ம்....

பெருந்தன்மை போற்றபட வேண்டியதுதான்...

பாலா கற்களை வீச காரணமாக இருந்தது என்னவோ???

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி said...
//விட்டுக்கொடுத்தலும், மன்னித்தலும் செய்திகளாக அடிக்கடி வரவேண்டும் என்று நினைக்கிறேன் நான்//

நல்ல மனம் வாழ்க!

//
வழிமொழிகிறேன்.. :)