ஞாநி வாசகர் கடிதம் போட்டால் கூட குமுதம் பிரசுரிக்காத ஒரு நிலை இருந்தது. ஆனால் ஞாநி ஆனந்தவிகடனுடன் முட்டிக் கொண்டு வந்தவுடன், ஆனந்த விகடனை கடுப்பேற்ற அடுத்த வாரமே குமுதம் ஞாநிக்கு 'ஓ' போட்டது.
அதுவரைக்கும் குமுதத்தில் 'ஓ'ஹோவென படித்ததும்-கிழித்ததுமாக இருந்த பாமரன், ஞாநி வந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டார். 4-5 பக்கங்கள் எழுதிக் கொண்டிருந்த பாமரன், ஞாநியின் வருகைக்குப் பின், 2-3 பக்கங்களுக்கு குறைக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் படிச்சதும்-கிழிச்சதும் போதும், என்று துரத்தப்பட்டார். பாவம் பாமரன், ஏதோ குமுதம் புண்ணியத்தில் வாரா வாரம் டீ, காபி குடித்துக் கொண்டிருந்தார். இப்போது ஞாநி கல்லா கட்டுகிறார், பாமரன் கஞ்சிக்கு வழியில்லாமல் காணாமல் போய்விட்டார்.
குமுதம் வாரா வாரம் ஞாநியின் 'ஓ'விற்கு போஸ்டர் அடிக்கிறது, அட்டைப் படத்தில் முன்னிறுத்துகிறது. ஆனால் 'படித்ததும்-கிழித்ததும்' பாமரனை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? ஞாநியும் பாமரனின் இந்த நிலை பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை, அட்லீஸ்ட் நண்பர்கள் வட்டாரத்தில் கூட இது பற்றி வருத்தம் தெரிவிக்கவில்லை.
விளம்பரங்களில் எல்லாம் தொடரந்து ஞாநியின் பெயரையே குமுதம் புரமோட் செய்ததில் கடுப்பாகி பாமரனே மனம் நொந்து விலகி ஓடி விட்டதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.
பின்குறிப்பு -
"படத்தின் இசை வெளியீட்டின் போது பசுபதி முன்னிறுத்தப்படவில்லை"
இவை இந்த வார குமுதத்தில் ஞாநி எழுதியிருக்கும் வரிகள். ஞாநிக்கு வேறு வேலையே இல்லையா?
'குசேலன்' பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏன் பசுபதி பங்கேற்கவில்லை? "எனக்கு வேறொரு ஷீட்டிங் இருந்ததால் பங்கேற்கவில்லை", என பசுபதியே விளக்கம் கொடுத்துவிட்டார். ஆனாலும், ரஜினிதான் அவரை வரவிடாமல் செய்துவிட்டார், பசுபதியை வேண்டும் என்றே முன்னிலைப் படுத்தாமல் விட்டுவிட்டார் என்பது போல ஓ பக்கத்தில் எழுதியிருக்கிறார்.
ரஜினியை பற்றி எப்படி வேண்டுமானாலும் கற்பனை கலந்தாவது காழ்ப்புணர்ச்சியுடன் எழுதலாம் என ஞாநி முனைந்திருக்கிறார்.
எனவே வேண்டும் என்றே, அவரைப்போலவே நானும் கற்பனை கலந்து 'பாமரன் கதையை' எழுதியிருக்கிறேன்.
மன்னியுங்கள்! மிஸ்டர் பாமரன்.
11 comments:
அண்னாச்சி கலக்கல்!!
பின்னறீங்க!
Super.. thalai.. enna podu podureenga..
Room Pottu Yosipeengalaa?
Kalakkureenga sir.
ஹா ஹா ஹா செம காமெடி :-))))))))))
இந்த ஞானிக்கு என்ன ஆச்சு ..என்னமோ ரஜினி இவரோட சொத்தை எல்லாம் கொள்ளை அடித்து விட்ட மாதிரி எல்லா வாராமும் இப்படி சிறு பிள்ளை தனமா..அம்மா! என்னை அவன் அடிச்சுட்டான்னு நொச்சு நொச்சுன்னு சொல்லிட்டு இருக்காரு..இவர் என்னமோ குசேலன் வரவு செலவு கணக்கு பார்த்த மாதிரி சும்மா அள்ளி விட்டுட்டு இருக்காரு
இவர் முதல் முறை ரஜினி பற்றி எழுதிய போது பலர் அவர் உண்மையை தானே சொல்கிறார் என்றார்கள் ..தற்போது சின்ன பய்யன் மாதிரி ஒவ்வொரு வாரமும் இதை போல கூறி வருவது, அனைவரும் ஏற்று கொள்ள கூடிய ஒன்றா? இவ்வாறு இவர் பேசுவதால் சாதாரண ஒரு நிருபருக்கும் இவருக்கும் என்ன பெரிய வித்யாசம்.. நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்கு குசேலன் தான் ரொம்ப முக்கியமா?
இந்த லட்சணத்துல அப்துல் கலாமை கேள்வி கேட்க வந்துட்டாரு? சூப்பர்ர்ர்ர்
ஞாநிக்கு யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது. இதில் இவ்வார குட்டு, பூச்செண்டு என்று வேறு.
மோ. மோகன் குமார்
ஆமா இப்ப பாமரன் இல்லைதான் குமுதத்தில...
ஆனா உங்க மாட்டர் சூப்பரு...!
ஞானியும் குமுதமும் ரஜினியை வச்சி ஓட்டிகிட்டிருக்காங்க. நீங்க வேறெ....
ஐயோ ஐயோ ...
கலக்கல்...
பின்னி பெடல் எடுத்துடீங்க ..
//எனக்கு வேறொரு ஷீட்டிங் இருந்ததால் பங்கேற்கவில்லை", என பசுபதியே விளக்கம் கொடுத்துவிட்டார்.//
ஓ! அப்படியா! அடப் பாவமே... தான் ஈரோவா நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட விழாவுல கூட பங்கேற்க முடியாம 24 மணி நேரமும் உழைக்கிறாராமா அவரு? கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குங்க. அந்தக் கஷ்டத்தைக் கேட்டும் உங்கத் தலைவர் கண்டுக்காம விட்டுட்டாரே. சரி விடுங்க. அவருக்கும் என்ன கஷ்டமோ என்னவோ.
இதைப் பத்தியெல்லாம் ஒரு பத்தி எழுதறவர் எப்படிங்க கேள்வி கேக்கலாம்? ஒரு எல்லை வரைமுறை எல்லாம் வேணாம் அந்த ஆளுக்கு? என்ன கிறுக்குத்தனம் பாருங்க. அட அவர் நாகரீகக் குறைவாகவோ, உண்மையை திரித்தோ எழுதினாக் கூட பரவாயில்லை. நம்மளை மாதிரிதானே எழுதித் தொலைக்கிறார்ன்னு விட்டுத் தள்ளிடலாம். ஆனா ஒரு புனிதப் பிம்பத்தை பாத்து கேள்வியில்ல கேக்குறாரு? அதுவும் எப்படிப்பட்ட புனித பிம்பம்... ஒரே மாதத்தில் 20 கோடி ரூபாய்களை சும்மாவே சம்பாதிக்கக் கூடிய புனித பிம்பம். அவர் என்ன வேணா பண்ணலாம்ங்க. யாரும்.. நாக்கு மேல பல்லைப் போட்டு கேள்விக் கேட்டா அவங்களை பதிலுக்கு நாக்கை புடுங்கற மாதிரி நாமளும் கேள்வி கேப்போமில்ல. எங்களுக்கு என்ன சுரணை இல்லைன்னா நினச்ச. சரியான ஆப்பு வச்சீங்கண்ணா. தொடர்ந்து உங்ககிட்ட நிறைய எதிர்பாக்குறோம்ணா.
kalakkal thalai ,ghaani payalai vitraathinga...karunaneethi pathi eluthi nalla pukal kidachuthu. ippo athe pukal rajini pathi eluthumpothu kidaikkuthu.ana ithu nilaikkaathu enna rajini nallavar.
anaani ....rajini oru vaartthai sonnaaa ulaagame kothikkuthe..appo evlo ulaippula intha idatthukku vanthirupparu...nallavanga punitha pinbamthaan.
oruvelai intha aaalu antha aaalaa irukkumoooo
பிரபலங்களைப் பற்றி எழுதினால் தான் பிரபலமாக முடியும் ஞானியானாலும், குமுதமானாலும். :)
தசாவதாரத்தில் காவிப் பிரச்சாரமா என்பார்கள், குசேலனால் குபேரன் என்பார்கள்.... இப்படி எல்லாம் எழுதாமல் உருப்படியாய் ஏதேனும் எழுதினால்.... (வாங்கிப் படிக்க ஆள் வேண்டாமா ! ) ஞானி போணியாக மாட்டாரே.
Post a Comment