முதுமை எப்போது வரும்?
வயதானால் வரும்
தோல்விகள் வரும்போதும் வரும்
சன் டிவி இரண்டாவது வகை.
தற்போது சேனல் போட்டிகளில் தோற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னும் வீழ்ந்துவிடவில்லை. ஆனாலும் மண்ணை கவ்விக் கொண்டிருக்கிறது.
முதல் காரணம் - தி.மு.க லேபிளை இழந்தது.
அதில் கணிசமானோர் இன்னமும் பழக்க தோஷத்தில் சன் டிவிதான் பார்க்கிறார்கள். ஆனால் இரசிக்கவில்லை.
2வது காரணம் - மதியம் முதல் இரவு வரை அழுகாச்சி சீரியல்கள்
டி.ஆர்.பியில் இடம் பிடிக்க தாய்மார்கள் உதவினாலும், வீட்டில் உள்ள ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் வெறுக்க ஆரம்பித்து விஜய்டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த இடைவெளியில்தான் ஜோடி நம்பர் -1 ஜெயிக்க ஆரம்பித்தது
3வது காரணம் - மாற்றிக் கொள்ள முடியாத பழைய ஸ்டைல்
புரோகிராமிங் ஃபார்மட் முதல் டிரையலர் வரை இன்னும் அதே பழைய ஸ்டைல். நேற்று வந்த சேனல்கள் கூட அசத்தல் கட்டிங்குகளால் கலக்கும்போது, இங்கே இன்னமும் தூரன் கந்தசாமியின் குரலில் ஜவ்வுமிட்டாயாக இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் செட், கலர், டிரையலர் என மாற முயற்சித்து அரைவேக்காடாக கைவிட்டுவிட்டார்கள்
4வது காரணம் - செய்திகள்
முன்பு தி்.மு.க நிழலில் இருந்தபோது, ஜெயலலிதா முதல்வர் ஆனதையே லாங் ஷாட்டில் காட்டி மக்களிடம் இருந்து மறைக்கப் பார்த்தார்கள். தற்போது ஜெயலலிதா கொடநாட்டில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தபோதும், அவருக்காக சவுண்டு கொடுத்தவர்கள் சன் டி.விதான். இந்த திடீர் பல்டி அவர்கள் மேலிருந்த நம்பகத்தன்மையை 70 சதவிகிதம் குறைத்துவிட்டது. 30 சதவிகிதம் தேறியதற்கு காரணம் மந்திரியாக இருந்தபோது தயாநிதி மாறனின் அசத்தல் பெர்பாமன்ஸ்.
5வது காரணம் - எக்ஸ்பர்ட்ஸ் இல்லை
ஜெயா டிவியில் சுஹாசினி வந்து விட்டார். விஜய் டிவியில் மதன் பார்வை. இவர்கள் சினிமா என்றால் என்ன என்று தெரிந்தவர்கள். சினிமா எடுக்கும் படைப்பாளிகள் மத்தியில் மரியாதைக்குரியவர்கள். ஆனால் சன் டிவியில் இன்னமும் யாரோ எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் தொகுப்பாளர்கள்தான் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். செய்தி மற்றும் அலசல் நிகழ்ச்சிகளிலும் இதே நிலை தான்.
6வது காரணம் - பெரிய படங்களை வாங்க முடியாத நிலைமை
தற்போதைய பெரிய படங்கள் அனைத்தையும் தங்கள் அரசியல் பலத்தால் கலைஞர் டி.வி வாங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பலனை கலைஞர் டிவி இன்னமும் அனுபவிக்கவில்லை. ஆனால் பாதகத்தை சன் டிவி அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது சன் டிவியை யாராலும் ஜெயிக்கவே முடியாது என்ற நிலைமை மாறி அது தோற்றுக் கொண்டு வருவதை நேயர்களும், சன் டிவியும் உணருகிற ஒரு சூழ்நிலை இதனால் உருவாகிவிட்டது.
கடைசியாக ஒரு வரி - முதுமை வந்து விட்டால், எப்போதோ நடந்த நல்லதுகளை அசைபோடுவோம். சன் டிவி இப்போது அப்படி ஒரு அசைபோடும் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்திய உதாரணம் - மெட்டிஒலி ரிப்பீட்.
12 comments:
உங்கள் பதிவுகள் மேலும் பலரை சென்றடைய Tamilish.com ல் பகிரவும்
metti oli rebit audiance niraya irukkangalam....sethu aviya ponavangalaam..avangalukkuthan intha rebitaam...
metti oli rebit audiance niraya irukkangalam....sethu aviya ponavangalaam..avangalukkuthan intha rebitaam...
நிஜமான உண்மைகள்
முதல்ல அழுக்காச்சி நாடங்களை நிறுத்தணும்
//இப்போது அப்படி ஒரு அசைபோடும் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்திய உதாரணம் - மெட்டிஒலி ரிப்பீட்//
ஓ! மெட்டிஒலி ரிப்பீட்டா????? அடச்சே... நாந்தான் மிஸ் பண்றேன்.......:-)))
சன் டிவியின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணம் பணியாளர்களை நடத்தும் விதமே.
பண்ணை அடிமைகளைப்போல நடத்தும் போக்கும், ஊடக உலகில் சன் டிவி அதிகம் சம்பாதித்தாலும் பணியாளர்களுக்கு கொடுக்கும் மிகக்குறைந்த ஊதியம் மிகக்கொடுமையானது.
அதேபோல மிகச்சிறந்த நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை உடனடியாக வேறு பிரிவுக்கு தூக்கியடிக்கும் கொடுமையும் சன் டிவியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
மிகச் சரி!
விஜய் டிவி, மக்கள் டிவி, கலைஞர் டிவி பிறகுதான் சன் டிவி நிகழ்ச்சிகள்!
மயிலாடுதுறை சிவா...
மக்கள் தொலைக்காட்சி வாழ்க. வளர்க. மக்கள் தொலைக்காட்சியின் எழுச்சி தமிழின் எழுச்சியாய் அமையும் என்பது திண்ணம். நான் தமிழகம் வந்திருந்தவேளை மக்கள் தொலைக்காட்சியில் மயங்கியவன். முனைவர். திரு நன்னன் ஐயாவின் தமிழில் நனைந்தவன்.
சன் தொலைக்காட்சி எப்பொழுதும் முதலில் தான் இருக்கறது.நீங்கள் இப்படி சொல்வது மிகவும் தவறு.
கலைஜர் தொலைக்காட்சி செய்வது மிகவும் சரியல்ல.
நல்ல அலசல் செல்வக்குமார்.
//அதன் பலனை கலைஞர் டிவி இன்னமும் அனுபவிக்கவில்லை. ஆனால் பாதகத்தை சன் டிவி அனுபவிக்க ஆரம்பித்துவிட்டது.//
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பதிவின் ஹைலைட் தலைப்புக்குப் பொருத்தமான இந்த கடைசிப் பத்தி:
//கடைசியாக ஒரு வரி - முதுமை வந்து விட்டால், எப்போதோ நடந்த நல்லதுகளை அசைபோடுவோம். சன் டிவி இப்போது அப்படி ஒரு அசைபோடும் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்திய உதாரணம் -மெட்டிஒலி ரிப்பீட்.//
இந்த மெட்டி ஒலியால் கூடச் சேர்ந்து
எப்போ பார்த்தால் மற்ற நிகழ்ச்சிகளும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் எழுதிய மெகா முதலைகளை
//http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_384.html//
இங்க போய் நேரம் கிடைக்கையில் பார்த்து வையுங்கள்:)!
பி.கு: எனது அடுத்த பதிவு எப்போது என்ற தங்களது அக்கறையான விசாரிப்புக்காகவே இன்று போட்டு விட்டேன் அடுத்த பதிவு. நன்றி!
//வீட்டில் உள்ள ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் வெறுக்க ஆரம்பித்து விஜய்டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்//
உண்மை...
ஜெயலலிதா முதல்வர் ஆனதையே லாங் ஷாட்டில் காட்டி மக்களிடம் இருந்து மறைக்கப் பார்த்தார்கள். தற்போது ஜெயலலிதா கொடநாட்டில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தபோதும், அவருக்காக சவுண்டு கொடுத்தவர்கள் சன் டி.விதான். இந்த திடீர் பல்டி அவர்கள் மேலிருந்த நம்பகத்தன்மையை 70 சதவிகிதம் குறைத்துவிட்டது.}}}
உங்களின் இந்த கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம்... மதிப்பிற்குரிய முதல்வரின் பேரனாகவும் ஸ்டாலின் அழகிரிக்கு மருமகன் என்கிற ரீதியில் இருந்த வரையில் சன் டிவி தி.மு.க.வின் பிரச்சார பிரங்கியாகவே செயல்பட்டு வந்தது. தினகரன் சன் நெட்வோர்க் நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட பின்னர், கலாநிதிமாறன் கூறிய வார்த்தை என்ன தெரியுமா... இந்த பத்திரிகை நடுநிலை தன்மையுடன் விளங்க வேண்டும் என்பது தான். அதே போக்கை இப்போது சன் டிவியில் கடைபிடிக்கிறார்கள். நான் ஒன்று சன் டிவிக்கு கூஜா தூக்கிக்கொண்டு அவர்களுக்காக இதை பரிந்து பேசவில்லை. உண்மையில் நடப்பு நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் பணியை சன் செய்கிறது. இதே பணியை அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது சன் டிவி தொடருமானால் அதன் நம்பக தன்மை மேலும் அதிகரிக்க கூடும். இப்போது அவர்கள் எதையும் இழக்க வில்லை.
தமிழில் சன்டிவி கலைஞர் டிவி என்று எல்லோரையும் வீழ்த்திய நிஜ ஜாம்புவானாக இருந்த விஜய் டிவியின் வளர்ச்சியை ஆளுங்கட்சியின் துணையுடன் தடுத்த நிறுத்திய வினை இப்போது அதையே பதம் பார்க்கிறது என்பது உண்மை.
Post a Comment