இந்த வாரம் மொத்தம் 5 பக்கங்களில் ஓ பக்கங்கள் - துவக்க பக்கத்தில் மட்டும் ஞாநியின் பெயர் இருந்தது, ஆனால் அடுத்த நான்கு பக்கங்களிலும் ஞாநியின் பெயர் இல்லை. அப்படி இருக்கும் போது அவற்றை எழுதியது ஞாநிதான் என்பதை எப்படி ஒப்புக்கொள்வது?
இப்படி ஒருவன் விவாதம் செய்தால், அதன் பெயர் அபத்தம். ஞாநி இப்படித்தான் ரஜினி விஷயத்தில் அபத்தக் களஞ்சியமாகிக் கொண்டிருக்கிறார். குசேலன் படத்தின் ஆரம்பத்தில் பூஜையின் போது "இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான்" என்று ரஜினி சொன்னாராம். (ஆமாம். சொன்னார்) ஆனால் பாடல் வெளியீட்டின் போது சொல்லவில்லையாம் (ஏன்யா சொல்லவேண்டும்? அவர் என்ன நடுவில் மாற்றிச் சொன்னாரா? விட்டால் தூங்கி எழுந்தவுடன் தினமும் பத்திரிகையில் இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று ஒரு அறிக்கை ஏன் விடவில்லை என்று கேட்பார் போலிருக்கிறது?)
பேராசைக்காரர்களும், பேராத்திரக்காரர்களும் ஒன்று சேர்ந்து தோற்றுவிட்டு இப்போது நஷ்டக் கணக்கு கும்மியடிக்கிறார்கள். ஞாநி இதற்க்காக வாராவாரம் பக்கவாத்தியம் அடிக்கிறார். குமுதம் ஒத்து வாசிக்கிறது.
3 comments:
"ஓ பக்கங்களை எழுதுவது ஞாநியா?"
வேறு யாரும் அதையெல்லாம் கூட எழுதுறாங்களா என்ன?
//விட்டால் தூங்கி எழுந்தவுடன் தினமும் பத்திரிகையில் இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று ஒரு அறிக்கை ஏன் விடவில்லை என்று கேட்பார் போலிருக்கிறது?)//
:-))))))))))))))))
//விட்டால் தூங்கி எழுந்தவுடன் தினமும் பத்திரிகையில் இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று ஒரு அறிக்கை ஏன் விடவில்லை என்று கேட்பார் போலிருக்கிறது?)//
:-))))))))))))))))
Post a Comment