சிவாஜி குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் நகைச்சுவையாக அழுவார்.
எம்.ஆர்.ராதா குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் நகைச்சுவையாக நக்கல் அடிப்பார்.
ரஜனி குரலில் பேசமாட்டார். ஆனால் அவருடைய பாணியில் காமெடி பஞ்ச் அடிப்பார்.
இதுதான் விவேக்.
விஜய் டிவி லொள்ளு சபா, சன் டிவி டாப் 10 பாடல்கள் இரண்டுமே ஒரே ஸ்டைல். ஏற்கனவே ஹிட்டான படம் அல்லது காட்சியை உல்டா செய்து பேத்தலான சேட்டைகள் செய்வதுதான், இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே.
பல நேரங்களில் விவேக்கின் காமெடியும் இதே போலத்தான் இருக்கிறது.
அதிசயமாக விவேக் தமிழ் சினிமாவின் லீடிங் காமெடியன்களில் ஒருவர். அவரே (ரஜினி சொன்னதாக) குமுதத்தில் எழுதியது போல, கருத்து சொல்கிற மேட்டர் மட்டும் இல்லையென்றால், எப்போதோ காணாமல் போயிருப்பார்.
ஆரம்பத்தில் ஒல்லி உடம்புடன் கொஞ்சமாக பாடி லேங்வேஜையும், அதிகமாக மிகிக்கிரியையும் வைத்து சிரிப்புக் காட்டினார். போகப் போக. . . குறிப்பாக கூலிங் கிளாஸ் மாட்டி நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பாடி லேங்வேஜ் மறைந்துவிட்டது. வெறும் (சிவாஜி + எம்.ஆர்.ராதா + ரஜினி + சில நேரம் வைரமுத்து) மிக்ஸிங் டயலாக்கை வைத்து வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
மாத்ருபூதம் வழங்கிய சின்னக் கலைவாணர் பட்டம், அவருடைய காமெடி சென்ஸை அமுக்கிவிட்டு, கருத்து இம்சையை முடுக்கிவிட்டுவிட்டது என்பது என்னுடைய எண்ணம்.
பெரும்பாலும், அவருடைய காமெடி அனைத்தும், படத்துடன் ஒட்டாமல் தனி டிராக்காகத்தான் இருக்கிறது. அதனால்தான் 'விஜய் டிவி லொள்ளுசபா' காமெடி போல அடிக்கடி பழைய படங்களை உல்டா செய்யும் டிராக் பிடிக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடிக்காக எடுக்கப்பட்ட படங்களில் கூட அவர் எக்ஸ்டிரார்டினரி பெர்மாமன்ஸ் கொடுத்ததில்லை. காரணம் 'கருத்து சொல்கிற பாணி'.
இன்னொன்று எப்போதுமே 90 சதவிகித படங்களில் கல்லூரி மாணவன் போல ஜீன்ஸ், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் தோற்றம். வெரைட்டியான மேக்கப் கூட இல்லாமல் பல படங்களை ஒப்பேற்றிவிட்டார். அவர் கிராமங்களில் அவ்வளவாக எடுபடாததற்கு காரணம், எப்போதுமே 'சிட்டி லுக்' கொடுத்த அவருடைய உடைகளும், பேச்சுக்களும்தான்.
அசட்டுத்தனங்களும், சேட்டைகளும் நிரம்பிய காமெடியன், படாரென ஒரு கட்டத்தில் எமோஷனலாக கண் கலங்க வைக்க வேண்டும். அந்த திறமை விவேக்கிடம் கம்மி.
கூலிங் கிளாசையும், கருத்தையும் கழட்டி வைத்துவிட்டால் நம்மால் இன்னும் நல்ல விவேக்கை பார்க்க முடியும்.
9 comments:
when will you go online?
Sorry if I commented your blog, but you have a nice idea.
//மாத்ருபூதம் வழங்கிய சின்னக் கலைவாணர் பட்டம், அவருடைய காமெடி சென்ஸை அமுக்கிவிட்டு, கருத்து இம்சையை முடுக்கிவிட்டுவிட்டது என்பது என்னுடைய எண்ணம்.//
சரியா சொன்னீங்க
ஆரம்பத்தில் ஒல்லி உடம்புடன் கொஞ்சமாக பாடி லேங்வேஜையும், அதிகமாக மிகிக்கிரியையும் வைத்து சிரிப்புக் காட்டினார். போகப் போக. . . குறிப்பாக கூலிங் கிளாஸ் மாட்டி நடிக்க ஆரம்பித்ததிலிருந்து பாடி லேங்வேஜ் மறைந்துவிட்டது. வெறும் (சிவாஜி + எம்.ஆர்.ராதா + ரஜினி + சில நேரம் வைரமுத்து) மிக்ஸிங் டயலாக்கை வைத்து வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறார்}}}}
சரியான தீர்ப்பு...
நல்ல அலசல்.
//அசட்டுத்தனங்களும், சேட்டைகளும் நிரம்பிய காமெடியன், படாரென ஒரு கட்டத்தில் எமோஷனலாக கண் கலங்க வைக்க வேண்டும்.//
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
Please Reject SPAM comments :
For Example ..
good penny stock said...
when will you go online?
August 27, 2008 9:51:00 AM IST
lottery tickets said...
Sorry if I commented your blog, but you have a nice idea.
August 27, 2008 9:53:00 AM IST
I am getting this kind of SPAM comments many time.
Please reject those silly comments given by SPAM.
But I am genuine ..( Smiley )
Hi. Selva. How is it going?
Just I am telling my idea. if you have different opinion you can ignore it..
//கூலிங் கிளாசையும், கருத்தையும் கழட்டி வைத்துவிட்டால் நம்மால் இன்னும் நல்ல விவேக்கை பார்க்க முடியும்.
கூடவே இரட்டை அர்த்த வசனங்களையும் கழட்டி விட வேண்டும்.
மோ. மோகன் குமார்
Finally you moderated my comment.
But You didn't remove the SPAM comment.
Good.
But still I am posting here..
enjoy
நல்லா சொல்லிருக்கீங்க!
/
முழுக்க முழுக்க காமெடிக்காக எடுக்கப்பட்ட படங்களில் கூட அவர் எக்ஸ்டிரார்டினரி பெர்மாமன்ஸ் கொடுத்ததில்லை. காரணம் 'கருத்து சொல்கிற பாணி'.
/
எவனுக்கய்யா வேணும் கருத்து அதுதான் ஓசில அவனவன் சொல்லறாங்களே :((
காமெடி பண்ணுங்கய்யா ட்ராஜடி பண்ணாம !!
Post a Comment