Thursday, August 28, 2008

மர்மயோகி ரிலீசான பின் ஓ பக்கங்களில் ஞாநி என்ன எழுதுவார்?

சுப்பிரமணியபுரம் படத்தில் ஷேவிங் செலவு கூட இல்லாமல் எல்லோரையும் தாடி வளர்க்க வைத்து, முடிவெட்டாமல் ஹிப்பித் தலையைக் காட்டி தயாரிப்பாளர் சம்பாதித்துவிட்டார். இதை விடக் கூடாது.

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் சுவிட்சர்லாந்தில் போய் ஜில்லென்று டூயட் ஆடிவிட்டு வந்து, வியர்க்காமல் ரப்பர் மேக்கப் போடாமல் ஜெயம் ரவியையும், ஜெனிலாவையும் காட்டி படத்தை ஓட்டி லாபம் பார்த்துவிட்டார் தயாரிப்பாளர். இதையும் விடக் கூடாது.

அனைவரும் கமல் போல 10 வேஷம் போட்டு, ரப்பர் மேக்கப் மாற்றி படமெடுத்தால் மட்டும்தான் ஒப்புக்கொள்வேன். இல்லையென்றால் தியேட்டர் வசூலை திருப்பிக் கொடுங்கள்.

இப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. ஓ.ஞாநி அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்.

கருணாநிதியைத் திட்டி எழுதி போரடித்துவிட்டது போலிருக்கிறது. இப்போது ரஜினியை திட்டி எழுத ஆரம்பித்துவிட்டார் (பேத்த ஆரம்பித்துவிட்டார் என்றும் சொல்லலாம்).


"கமல்ஹாசன் தசாவதாரத்திற்கு சுமார் 20 மாதங்கள் வேலை செய்து 10 முறை ஒவ்வொரு சீனுக்கும் ரப்பர் மேக்கப் மாற்றி மாற்றி உழைத்து சம்பாதித்ததை ரஜினி குசேலனில் 20 நாட்கள் வேலை பார்த்து பத்து விக் மட்டும் மாற்றியே அனாயாசமாக சம்பாதித்துவிட்டார்",
என்று ஓ.ஞாநி புலம்புகிறார், ஸாரி குற்றம் சாட்டுகிறார்.

"யோவ் போன படத்துல நீ பத்து வேஷம் போட்டதால நான் 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பார்த்தேன். இந்தப் படத்துல நீ ஒரு வேஷம் தான போட்டிருக்க, அதனால நான் பத்து ரூபாய்தான் தருவேன். யாரை ஏமாத்தற?", மர்ம யோகி ரிலீசாகும் போது குமுதத்தில் ஓ பக்கங்கள் இப்படித்தான் கமலை கடித்துக் குதறுவதாக இருக்கும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கிறேன்.


அதே போல சுப்பிரமணியபுரம், சந்தோஷ் சுப்பிரமணியபுரம் என்று குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து அதிக லாபம் பார்த்த தயாரிப்பாளர்கள், அதில் பங்கு கொண்ட நடிகர் நடிகைகள் ஆகியோர்அனைவரும் பதுங்கத் தயாராக இருங்கள். அடுத்து ஓ.ஞாநி உங்கள் மேல் தான் பாயப் போகிறார்.

5 comments:

குட்டிபிசாசு said...

இந்த வாரம் ஞாநி வாரமா?

சரவணகுமரன் said...

//நான் 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பார்த்தேன். இந்தப் படத்துல நீ ஒரு வேஷம் தான போட்டிருக்க, அதனால நான் பத்து ரூபாய்தான் தருவேன். யாரை ஏமாத்தற?", //

ஹா ஹா ஹா

மங்களூர் சிவா said...

/
"யோவ் போன படத்துல நீ பத்து வேஷம் போட்டதால நான் 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி பார்த்தேன். இந்தப் படத்துல நீ ஒரு வேஷம் தான போட்டிருக்க, அதனால நான் பத்து ரூபாய்தான் தருவேன். யாரை ஏமாத்தற?"
/

ஆஹா இப்பிடில்லாம் பண்ணலாம்ல
:)))))))))))

மங்களூர் சிவா said...

/
அதே போல சுப்பிரமணியபுரம், சந்தோஷ் சுப்பிரமணியபுரம் என்று குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து அதிக லாபம் பார்த்த தயாரிப்பாளர்கள், அதில் பங்கு கொண்ட நடிகர் நடிகைகள் ஆகியோர்அனைவரும் பதுங்கத் தயாராக இருங்கள். அடுத்து ஓ.ஞாநி உங்கள் மேல் தான் பாயப் போகிறார்.
/

ROTFL
:))))))))))))))))

குரங்கு said...

ஹஹ....

நல்ல இருக்குங்க... :)