படம் ஓடாவிட்டால், கல்லா நிரம்பாவிட்டால், போட்ட பணத்தை திருப்பித் தரும்படி (வினியோகஸ்தரை விட்டுவிட்டு) ரஜினியை கேட்கும் உரிமை தியேட்டர்காரர்களுக்கு இருக்கிறது(என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்)
அதே போல பின்வரும் அட்டவணைப்படி தியேட்டர்காரர்களிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது (என்று நான் நினைக்க ஆரம்பித்திருக்கிறேன்)
5ரூபாய்
நாற்றம் பிடித்த டாய்லெட்டை பயன்படுத்த வைத்ததற்க்காக
10 ரூபாய்
முன்னிருக்கையில் இருப்பவரின் தலை மறைப்பது போலவே எப்போதும் என்னிருக்கை இருந்ததற்க்காக
10 ரூபாய்
பாதிப்படத்தில் நைசாக ஏ.சி.யை ஆஃப் செய்ததற்க்காக
10 ரூபாய்
பார்க்கிங்கில் 10 ரூபாயை பிடுங்கிக்கொண்டு வண்டியின் பாதுகாப்புக்கு பொறுப்பில்லை என்றதற்க்காக
10 ரூபாய்
இன்டர்வெல்லில் தண்ணீர் பாட்டில் விற்காமல், கூல் டிரிங்ஸ் விற்று பாக்கெட்டை காலியாக்கியதற்க்காக
40 ரூபாய்
இத்தனை இம்சைகளுக்கு மேலே பெரும் இம்சையாக மட்டமான படத்திற்கு டிக்கெட் கொடுத்ததற்க்காக
ஆக மொத்தம் 5 + 10 + 10 + 10 + 10 + 40 = 85 ரூபாய் தியேட்டர் ஓனர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு திருப்பித் தர வேண்டும்.
10 comments:
நல்லா கேட்டீங்க செல்வகுமார். தியேட்டர்காரர்களுக்கு மனசாட்சி இருந்தால் இதை யோசித்து பார்க்கட்டும்.
உங்கள் கருத்தோடு ஒத்துப் போகும் என் பதிவுக்கு வந்து கருத்தைத் தெரிவியுங்கள்
http://valluvam-rohini.blogspot.com/2008/08/blog-post_23.html#links
ஹா ஹா ஹா செம நக்கல்
நீங்க படம் பாக்க போகணுமா? :)
நியாயமான கேள்வி :-)
எப்பொழுதும் லாபமே கொடுக்க ரஜினிகாந்த் என்ன பணம்காய்க்கும் மரமா?
வெற்றியை மாத்திரம் கருத்தில் கொண்டு கோடிகோடியாக் கொட்டி கொடுத்தவர்களே?
தோல்வி வந்தால் என்ன செய்வோம் என்று ஏற்கனவே யோசித்தீரா?
சபாஷ் சர்யான கேள்வி.. :)
.. அதுமட்டும் இல்ல.. நஷ்டம் ஆனால் பணத்தை திரும்ப கேட்கும் இவர்கள் லாபம் வரும் போது அதை அப்படியே தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துவிடுகிறார்களா?.. இவர்கள் ஆட்களை வைத்தே ப்ளாக்கில் டிக்கெட் வித்து கொள்ளை அடிக்கும் இந்த கும்பல் எந்த முகத்தை வைத்து இப்படி கேட்கிறார்கள் என தெரியவில்லை...
செல்வகுமார், நல்ல பதிவு. இவர்கள் கணக்குப் படிப்பார்த்தால் எனக்கு எப்படியும் ஆயிரக்கணக்கில் இத்திரையரங்க உரிமையாளர்கள் திருப்பித் தர வேண்டியிருக்கிறது.
சாட்டையடியாய் கேள்விகள். இப்படிப் பட்ட அரங்குகளை மக்களும் புறக்கணிக்க ஆரம்பித்தால்தான் திருந்துவார்கள்.
Post a Comment