மனதைப் பிசையும் தமிழ் இனப்படுகொலை காட்சிகளுடன் ஆளும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று முழங்கும் சிடிக்களை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் மக்களை பார்க்கவிடாமல் கேபிள் கட், சில இடங்களில் பவர் கட் என்று மக்கள் தொலைக்காட்சி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சியின் நற்பெயரை(?)க் கெடுக்க சமூகவிரோதிகள் திட்டமிட்டு மின்சாரம் துண்டிப்பு, 4 பேர் கைது என்று சன்னும், கலைஞர் டிவியும் பதிலுக்கு பதில் ஏசிக் கொண்டிருக்கின்றன.
ஜெயா டிவி கப்சிப் என்றிருக்கிறது. அந்த சிடியையும் கண்டுகொள்ளவில்லை, மின்வெட்டையும் கண்டுகொள்ளவில்லை.
மக்கள் தொலைக்காட்சியில் நான் அந்த சிடிக்களை முழுக்கப் பார்த்துவிட்டேன். இதுவரை பார்க்காதவர்கள் உடனே மக்கள் டிவியை பார்க்கவும். போகிற போக்கைப்பார்த்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு (பிரச்சார நேரம் ஓய்ந்த பின்னும்) எதிர்பிரச்சாரமாக விடிய விடிய ஒளிபரப்பாகும் என எண்ணுகிறேன். அதே சமயம் ஆளும் தி.மு.க எப்படியாவது நீதி மன்றத் தடையை பெற்றுவிடும் என்று தோன்றுகிறது.
இந்த சிடிக்கள் எப்படியும் யுடியுபில் வந்துவிடும். ஆனால் தேர்தல் பரபரப்புடன் பார்க்வேண்டுமானால் இப்போதே மக்கள் டிவி பாருங்கள்.
நீதி - வழக்கறிஞர்களுடன் மோதக் கூடாது. மோதினால் . . . ? பிரச்சாரம் ஓய்ந்தபின்னும், எதிர்கட்சிகளுக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய நீதிமன்ற அனுமதி கிடைக்கும்.
1 comment:
பிற்சேர்க்கை
===========
மக்களை சிடி பார்க்க விடாமல் பவர்கட் என்று மக்கள் டிவி குற்றம்சாட்ட,
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏதோ தகிடுதத்தம் செய்யத்தான் பவர்கட் என்று ஜெயா டிவி குற்றம் சாட்டுகிறது.
மொத்தத்தில் உறங்கப்போகும் முன் மக்களுக்கு நாளைய தேர்தல் குறித்து ஒரு திகிலை உண்டாக்கிவிட்டார்கள்.
நல்ல நாளிலேயே பலர் ஓட்டுப்போட வரமாட்டேன்கிறார்கள். பெரிய மனது பண்ணி, நாளைக்கு ஓட்டுப் போடலாம் என்று தீர்மானித்தவர்களையும் இந்த நள்ளிரவு மோதல் முடக்கிப் போட்டுவிடும்.
Post a Comment