பல Exit Poll கள் ஜெயலலிதாவுக்கு வெற்றி முகம் என்று கூறின. ஆனால் Post Pollகள் தி.மு.க கூட்டணியின் அலை அடிக்கிறது என்று சொல்கின்றன.
எக்ஸிட் போல் என்பது ஓட்டுப் போட்டுவிட்டு வாக்குச் சாவடியிலிருந்து வெளியே வருபவரிடம் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டு கணிப்பது.
போஸ்ட் போல் என்பது, நிதானமாக சில சமயங்களில் ஒரு நாள் கழித்துக் கூட வாக்காளர்களை அவர்களுடைய இடத்திலேயே சந்தித்து யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டு கணிப்பது.
எக்ஸிட் போல்களில் பங்கு பெறும் வாக்காளர் பெரும்பாலும் உண்மையைச் சொல்லுவதில்லை. காரணம் வாக்குச் சாவடிசூழ்நிலை, பதற்றம் மற்றும் பயம்.
போஸ்ட் போல்களில் பங்கு பெறும் வாக்காளர்கள் ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஏனென்றால் வாக்களித்துவிட்டு வெகு நேரம் கழித்துதான் அவருடைய கருத்து கேட்கப் படுகிறது. மிக முக்கியமாக அவருடைய இடத்திலேயே கேட்கப்படுவதால் பதற்றமோ, பயமோ இருப்பதில்லை.
எக்ஸிட் போலில் வாக்காளரிடம் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் பார்ட் டைமில் வேலை செய்பவர்கள். கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மக்களை சந்திக்கிறார்கள். உடனுக்குடன் சூட்டோடு சூடாக கணிப்புகளை தெரிவிக்கும் போட்டியில், எக்ஸிட் போல் நடத்துபவர்கள் இவர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கு வாக்காளரிடம் துல்லியமான பதிலை கேட்டு வாங்கும் திறமையோ, பயிற்சியோ குறைவு.
ஆனால் போஸ்ட் போலில் வாக்காளர்களை சந்திப்பவர்கள் இதற்கென்று பயிற்சி பெற்றவர்கள். வாக்காளர்களிடம் நயமாகப் பேசி, நண்பரைப் போல உறவாடி முடிந்தவரையில் உண்மையை வெளிவரவைப்பார்கள்.
எக்ஸிட் போல் வாக்குச்சாவடிக்கு அருகில்தான் நடக்கிறது. அவர்கள் வாக்காளர்களை சந்திக்கும்போது, ஒரு குறிப்பிட்ட கட்சியினர் அதிக அளவில் வாக்களிக்க வந்திருந்தால், அதன் துல்லியம் அடிபட்டுப்போகிறது.
போஸ்ட் போல் இந்த தவறை சரி செய்யும் விதமாக பரவலாக தொகுதியின் வெவ்வேறு பகுதிக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து நடத்தப் படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் எக்ஸிட் போலை விட, போஸ்ட் போலுக்கு நம்பகத்தன்மை அதிகம்.
இந்த அடிப்படையில் பார்த்தால் சில எக்ஸிட்போல்கள் ஜெயலலிதா ஜெயிக்கிறார் என்று கூறுகின்றன. டைம் நவ் போன்ற சானல்கள் தேர்தலன்று காலை ஒன்பதரை மணிக்கே, ஜெயலலிதா முந்துகிறார் என்று தங்கள் எக்ஸிட் போலின் அடிப்படையில் கூற ஆரம்பித்துவிட்டன.
இன்று வெளிவந்த போஸ்ட் போலின் அடிப்படையில் பார்த்தால் குறிப்பாக சிஎன்என்-ஐபின் சேனலின் கணிப்புபடி, கிட்டத்தட்ட இது தி.மு.க அலை. தடுமாறுகிறது இரட்டை இலை.
இந்த முடிவுகளுக்கான காரணிகள்
வாக்குப் பதிவு சதவிகிதம் கூடியிருப்பது
இலங்கைப் பிரச்சனை - எல்.டி.டி.யி ஆதரவு
தி.மு.கவிற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ள பரவலான ஆதரவு
குறிப்பாக தி.மு.விற்கு நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள ஆதரவு
”வெள்ளம் வந்தப்ப 2000 ரூபாய் குடுத்தாரு”
”ஒரு ரூபாய்க்கு அரிசி இதுக்கு முன்னாடி யாரு குடுத்தா?”
”இலவச டிவி தந்திருக்காரு”
”இன்னும் கேஸ் ஸ்டவ் தருவாங்களாமே”
இதெல்லாம் கிராமப்புரங்களில் பரவலாக ஒலித்த டயலாக்
அலை எதுவுமில்லாத தேர்தல். இந்த எம்.பி பரவால்ல. காதுகுத்துக்கு நெறைய மொய் எழுதுனாரு என்று படு லோக்கல் காரணிகள் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய தேர்தல்
”ஏழை பணக்காரன்னு பாக்கலப்பா. வீட்டுக்கு ஒரு டிவி உண்டுன்னு வந்து சொல்லிட்டுப் போயிட்டானுங்கப்பா. சில வீட்டுக்கு குடுத்துட்டானுங்க. சிலருக்கு எலக்ஷனுக்க அப்புறம்ன சொல்லிட்டானுங்க. அதாவது இலவசத்தை கரெக்டா வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டானுங்க. கிராமப் புறத்துல வேற என்ன வேணும்” இது கம்பம் அருகிலிருக்கும் உத்தமப்பாளையத்தை சேர்ந்த என்னுடைய நண்பர் கூறியது.
கூட்டணிகள் பெறக் கூடிய வாக்குகளின் சதவிகிதம்
தி.மு.க கூட்டணி - 47%
அ.தி.மு.க கூட்டணி - 34%
விஜயகாந்த் - 10%
மற்றவர்கள் - 9%
தனிப்பட்ட முறையில் எனக்கும் இதுதான் தேர்தல் முடிவாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. காலையில் தெரிந்துவிடும்.
கொசுறு -
அன்புமணி ராமதாஸ் மீண்டும் காங்கிரசுடன் இணைவதில் தயக்கம் எதுவிமில்லை என்று கூறிவிட்டார்.
நரேந்திர மோடி ஜெயலலிதாவை சந்திக்கவுள்ள நிலையில், தோழர்கள் ஜெவை வீட்டுக்கே சென்று சந்தித்த பிறகும், மூன்றாவது அணியின் மீட்டிங்கிற்கு வருவது சந்தேகமாம்.
4 comments:
மன்னிக்கவும். உங்கள் காரணங்கள் ஏற்கக்கூடியதாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
எக்ஸிட் போலில் ஓட்டுயிட்டு வெளியே வருபவர்கள் சூழ்நிலை காரணமாக அதிமுக என்றிருப்பார்கள் என்கிறீர்கள். ஏன் அவர்களுக்கு திமுகாவின் மீது பயம் கிடையாதா? சொல்லப்போனால் அடிதடிக்கு பெயர் போனது திமுகாவே.
அடுத்து எக்ஸிட் போல் எடுப்பவர்களை போல அல்லாமல் வாக்காளர்களிடம் மிகச்சாதூர்யமாக பேசி விஷயத்தை வாங்குவார்கள் என்றிருக்கிறீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்பதற்கு முன் என்ன “என்ன சார் நலமா? சாப்பாடு ஆச்சா?” என்று கேட்பார்களா?
யார் ஜெயிக்கிறார்கள் என்பதல்ல என் இந்த கருத்து சொல்லவருவது.
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
போஸ்ட் அருமை. தொடருங்கள்.
why should she attend the meeting when her position is not clear. she should talk to her friend and goto her guest house in OMR, hibernate for another 2 years until the assembly election
//சிஎன்என்-ஐபின் சேனலின் கணிப்புபடி, கிட்டத்தட்ட இது தி.மு.க அலை. தடுமாறுகிறது இரட்டை இலை.
இந்த முடிவுகளுக்கான காரணிகள் - இலங்கைப் பிரச்சனை - எல்.டி.டி.யி ஆதரவு //
எங்கோ இடிக்குதே???
Avasaram vendam thalaiva.....Innum counting mudiyala
Post a Comment