இளையராஜா வெறியர்கள் - ஏ.ஆர்.இரகுமான் வெறியர்கள்
கருணாநிதிக்கு டின்னு கட்டுபவர்கள் - ஜெயலலிதாவிற்கு டின்னு கட்டுபவர்கள்
தற்போது தமிழில் பிளாக் எழுதுபவர்களில் பலர் இந்த வரைமுறைகளுக்குள் வந்துவிடுகிறார்கள். இவர்களில் நால்வருமே தற்போது ஈழத்தமிழர் பிரச்சனையை வைத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி-ஜெயலலிதா பக்தர்களை விட்டுவிடலாம். அவர்கள் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டவர்கள்.
ஆனால் சிலர் ஏ.ஆர்.இரகுமான் ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆஸ்கர் மேடையில் எதுவும் பேசவில்லை என்று இரகுமானை குற்றம் சொல்லக் கிளம்பிவிட்டார்கள். நல்ல வேளையாக மற்றவர்கள் “இளையராஜா ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பாட்டுப் பாடவில்லை” என்று பதிலுக்குபதில் கேட்காமலிருப்பது ஒரு ஆறுதல்.
என் நண்பரொருவர் புதிதாக தற்போதுதான் தமிழ் பிளாகுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறார். என்னங்க இது? உங்கள்ல பாதிப் பேருக்கு மேல கச்சாமுச்சான்னு யோசிக்கற மாதிரி இருக்கு. பொது மக்களோட கருத்துக்கும், உங்க கருத்துக்கம் சம்பந்தமே இல்ல என்றார். உங்களுக்கு சென்சார் இல்ல, கேள்வி கேட்க யாருமில்ல அப்படின்றதால, இஷ்டத்துக்கு தறிகெட்டு எழுதறீங்க என்று (என்னையும் சேர்த்துதான்) குற்றம் சாட்டினார். சினிமா விமர்சனத்துல இருந்து அரசியல் விமர்சனம் வரைக்கும் எல்லாத்துலயுமே ஒரு டிகிரி பேத்தல், விளாசல், அறிவு, அறியாமை இதெல்லாம் தூக்கலா இருக்கு என்று ரேட்டிங் போட்டார்.
”விட்டா முத்தையா முரளிதரன் ஏன் இன்னமும் சிங்களர்கள் கூட கிரிக்கெட் விளையாடுறார். அவர் ஒரு தமிழன் தானே. இது வரைக்கும் அவர் எடுத்த விக்கெட்டுகளை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு, தமிழீழத்துக்கு ஆதரவா குரல் கொடுக்கச் சொல்லுவீங்களா?” என்று கேட்டார்.
அவர் சொன்னார், நான் கேட்டுட்டேன்.
தமிழீழத்துக்கு ஆதரவாக “முத்தையா முரளிதரன்” குரல் கொடுப்பாரா?
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் விளையாட்டு மைதானத்தில் நடு பிட்சில் நின்று கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பந்து வீச மறுக்கட்டும்.
இது வரை சிங்கள வீரர்கள் உதவியுடன், தான் எடுத்த விக்கெட்டுகளை எல்லாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எனதில்லை என்று அறிவிக்கட்டும்.
கருணாநிதி-ஜெயலலிதா இவர்களின் அரசியல் மேடையை விட,
ஏ.ஆர்.இரகுமான்-இளையராஜா இவர்களின் பாட்டு மேடையைவிட,
சிங்களர்களின் கூடவே விளையாடும், முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் மேடை, நிச்சயம் உலகத்தின் கவன ஈர்ப்பு பெறும்.
தினம் தினம் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், அவ்வப்போது ஏ.ஆர்.இரகுமானையும் மாற்றி மாற்றி திட்டி எழுதுவதால் மட்டுமே தனி ஈழம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்கள், இனி முத்தையா முரளிதரனை திட்டுவது பற்றியும் சிந்திக்கலாம்.
பின் குறிப்பு
நண்பர்களே,
குறிப்பாக ஈழ நண்பர்களே,
ஒரு இனப்பிரச்சனையை ஏ.ஆர்.இரகுமான் ஏன் சொல்லவில்லை, ரஜினிகாந்த் ஏன் சொல்லவில்லை என்று பேசப்புகும்போது, ஒரு இன உணர்வு வெற்று இரசிகர்களின் உணர்வாக மாறி, அர்த்தமற்ற சலசலப்புகளாக இருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன். முத்தையா முரளிதரனை குரல் கொடுக்கச் சொல்வது எனது நோக்கமல்ல. அந்த நடிகர் ஏன் குரல் கொடுக்கவில்லை, இந்த இசை அமைப்பாளர் ஏன் பறிதவிக்கவில்லை? என்று ஒரு இனப்பிரச்சனையை சாதாரண இரசிகர் மன்றப் பிரச்சனையைப் போல வலுவிழக்கச் செய்து விவாதிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்தப் பதிவின் நோக்கம் இதை வலியுறுத்துவதுதான்.
பலரும் நான் உண்மையிலேயே நான் முத்தையா முரளிதரனை வம்புக்கு இழுப்பதாகவே நினைத்து பிரசுரிக்க முடியாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிட்டார்கள்.
எனவே பின்னூட்டத்தில் எழுதியிருந்த இந்த வரிகளை தற்போது பதிவிலேயே பின்குறிப்பு என தலைப்விட்டு இணைத்துவிட்டேன்.
9 comments:
பத்த வெச்சுட்டியே பரட்ட!
நண்பரே உங்கள் கோரிக்கை என் பார்வையில் அர்த்தமற்றது. யுத்த சூழ்நிலையால் தண்ணீருக்கும் வழியின்றி ஆயிரக்கணக்கானவர்கள் தவிக்கும்போது உங்கள் பதிவை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அப்பாவி மக்களை நினைத்து வருந்துவதற்கு நீங்கள் எவ்விதத்திலும் தகுதியற்றவர்.
செல்வா அவர்களே,
நீங்கள் இப்பொழுது தான் பிரச்சனையை புரிந்து கொள்ள முயல்க்றீர்கள். இந்தியாவில் எல்லோருக்கும் பேச்சுரிமை உண்டு. ஆனால் இலங்கையில் அதுபோண்ற உரிமைக்காகத்தான் போராடுகிறாகள்.
இது போல பேச முயல்பவர்களை சிங்கள அரசு குடும்பத்துடன் கொன்றுவிடும். பயம் காரணமாக யாரும் வாயை திறக்க முடியாது. அவர்கள் சிங்களர்களாய் இருந்தால் கூட. சமீபத்தில் நடந்த லசந்தா படுகொலை இதற்கு ஒரு உதாரணம்.
மேலும், முரளிதரன் ஒரு இந்திய வம்சாவளி தமிழர்.
உண்மை கசக்கும். செல்வா
hahaha... very good question...
this would be useful for tamil cinema idiots.
Because, already, tamil cinema idiots achieved a lot in cauvery and okkenakkal issue. Now the same idiots are trying to achieve in sri lankan issue.
//இது போல பேச முயல்பவர்களை சிங்கள அரசு குடும்பத்துடன் கொன்றுவிடும். பயம் காரணமாக யாரும் வாயை திறக்க முடியாது. அவர்கள் சிங்களர்களாய் இருந்தால் கூட. சமீபத்தில் நடந்த லசந்தா படுகொலை இதற்கு ஒரு உதாரணம்.//
நண்பர்களே,
குறிப்பாக ஈழ நண்பர்களே,
நான் சொல்லவருவது இதைத்தான். நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளதைப்போல ராஜபக்ஷே அரசின் கொடூரங்களை பாதிக்கப்பட்ட நீங்களே சொல்லும்போதுதான் அது அது உண்மையான வலியையும், வேதனையையும் இந்த உலகிற்கு உணர்த்தும்.
அதைவிட்டு விட்டு, ஏ.ஆர்.இரகுமான் ஏன் சொல்லவில்லை, ரஜினிகாந்த் ஏன் சொல்லவில்லை என்று பேசப்புகும்போது, ஒரு இன உணர்வு வெற்று இரசிகர்களின் உணர்வாக மாறி, அர்த்தமற்ற சலசலப்புகளாக இருக்கிறது.
மீண்டும் சொல்கிறேன். முத்தையா முரளிதரனை குரல் கொடுக்கச் சொல்வது எனது நோக்கமல்ல. அந்த நடிகர் ஏன் குரல் கொடுக்கவில்லை, இந்த இசை அமைப்பாளர் ஏன் பறிதவிக்கவில்லை? என்று ஒரு இனப்பிரச்சனையை சாதாரண இரசிகர் மன்றப் பிரச்சனையைப் போல வலுவிழக்கச் செய்து விவாதிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்தப் பதிவின் நோக்கம் இதை வலியுறுத்துவதுதான்.
உண்மையான பொது நலவாதி யாரும் கிடையாது, ஈழத்தமிழர்களை பற்றி அலசி ஆராய்ந்து ஒருகவளம் சோறு இறங்கவில்லை என்றெல்லாம் பதிவிட்டுவிட்டு கடைசியில் tamilish இல் ஒரு ஒட்டு கேட்க்கும் நபர்கள்தான் அதிகம்
அய்யா எனது முதல் commentடை என் இன்னும் publish பண்ண வில்லை?
பரவாயில்லை....
////// gokul said...
மேலும், முரளிதரன் ஒரு இந்திய வம்சாவளி தமிழர்.//////
////முரளிதரன் ஒரு இந்திய வம்சாவளி தமிழர்.//////
நான் கோகுலை support பண்றேன்
இங்கு நடக்கும் அவலம் அங்கு ஆயாக உக்காந்து blog எழுதும் உங்களுக்கு எங்கே தெரியும்? இலங்கையில் இரண்டு தமிழர்கள் இருக்கிறார்கள்... இலங்கை தமிழர் and இந்திய வம்சாவளி தமிழர்...அதில் ரொம்பவும் பாவப்பட்ட தமிழன், இந்திய வம்சாவளி தமிழன்....
இவன் எல்லா பக்கத்திலையும் அடி வாங்குறவன், யாருமே இவன மதிப்பதே இல்லை..ஏன் ஈழ(இலங்கை) தமிழன் கூட நம்மவனை தோட்டக்காட்டான், கள்ளதோணி என்று ஏசுவான்..இந்த லட்சணத்தில நாங்க எப்படி அவங்களுக்காக குரல் கொடுக்க முடியும்...ஒருவேளை இலங்கை போர் முடிந்து சமாதானம் வந்து, தமிழ் ஈழம் மலர்ந்தால் கூட அங்கு போய், இந்திய வம்சாவளி தமிழன் வாழமுடியுமா?
வாழவிடுவார்களா????
வெல்டன் அன்னோனி . நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நானும் இலங்கை தமிழன் தான், ஆனால் இந்திய வம்சாவளி தமிழன், எங்களுக்காக இந்தியாவில் யாரும் குரல் கொடுக்க வில்லை. காரணம் நாங்கள் எண்ணிகையில் மிக குறைவு என்பதால் என நினைக்கிறேன். மலையக தமிழர்கள் எங்கும் எல்லா இனத்தவர்களுக்கும் இடையில் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்பவர்கள். ஈழ தமிழரை போல் இல்லாமல், நாங்கள் இலங்கை நாட்டில் சிங்கள மக்களுடன் மிக சந்தோசமாக தான் வாழுகிறோம். இந்திய அரசியல் வாதிகள் நீலி கண்ணீர் வடிக்கும் ஈழ தமிழர்கள் எங்களை அவர்களுக்கு அருகே அண்ட விட மாட்டார்கள். ஏனேன்றால் நாங்கள் எல்லாம் கள்ள தோணி என்பவர்கள் என்பதலாம். உண்மையில் பார்த்தல் நீங்கள் எல்லாம் எங்களுக்காக பேசவேண்டும். ஆனால் ஓட்டுக்காக அவர்களுக்கு பேசுகிறீர்கள்.
Post a Comment