Wednesday, May 13, 2009

மீடியா போர் - சன், கலைஞரை ஜெயித்தது மக்கள் தொலைக்காட்சி!

தேர்தல் வரும்போது, வழக்கமாக சன்னும் ஜெயாவும் களத்தில் மோதும். நடுவில் நடந்த தாத்தா-பேரன்கள் சண்டையில் கலைஞரை கடு்ப்பேற்ற சன் டிவி நடுநிலை வேஷம் போட்டதும் ஃபோகஸ் மாறிவிட்டது. பிறகு “கண்கள் பனித்து - இதயம் இனித்தவுடன்“ இருவரும் ஒன்று சேர்ந்தார்கள்.

தேர்தல் வந்தவுடன் மீடியா போர் பழையபடி சூடு பிடித்தது. ஜெயா டிவி ஜெயலலிதாவின் தேர்தல் பரப்புரையை மட்டும் ஃபோகஸ் செய்தது. எனவே ஒரு முனையில் சன்-கலைஞர். மறுமுனையில் மக்கள் தொலைக்காட்சி. மக்கள் தொலைக்காட்சி அசரவே இல்லை.

புதுச்சேரியில் நடைபெற்ற திரைத்துறையினரின் பரப்புரையை ராஜ் டிவியிடமிருந்து பெற்று திடீர் நேரலை செய்ததை சன்னும், கலைஞரும் எதிர்பார்க்கவே இல்லை. பதிலுக்குப் பதில் ஒளிபரப்ப அவர்களிடம் எந்த சரக்கும் இல்லை.

அதே போல இன்னொரு நிகழ்ச்சி. மாம்பழத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்றால் குற்றமாகிவிடும். ஏனென்றால் பிரச்சாரத்திற்கான நேரக் கெடு முடிந்துவிட்டது. ஆனால் மாம்பழத்தைப் பற்றி ஒரு ஆவணப்படம் போடலாம். அது குற்றமல்ல.

இதுதான் மாம்பழம். மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. இந்த மாம்பழம் தித்திக்கும். அந்த மாம்பழம் புளிக்கும் . . . என்று நொடிக்கொரு முறை மாம்பழம், மாம்பழமென தனது சின்னத்தை உச்சரிப்பது போல ஒரு ஆவணப்படத்தை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. சன், கலைஞர், தேர்தல் கமிஷன் உட்பட எல்லோருக்கும் பெப்பே காட்டிவிட்டு அட்டகாசமாக தனது மறைமுகப் பிரச்சாரத்தை மக்கள் தொலைக்காட்சி செய்தது.

ஆனால் நேற்று மாலைதான் ஹைலைட். திராவிடர் கழகம் தயாரித்த விசிடிக்கு நேற்று மதியம் தடை விலக்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் அவலத்தை விளக்குகின்ற சிடி என்று அவர்கள் சொன்னாலும், அது உண்மையில் காங்கிரசுக்கும், தி.மு.கவுக்கும் எதிராக பிரச்சாரம் செய்கின்ற சிடி. பிரச்சாரத்திற்கான கடைசி நேரம் கடந்துவிட்டிருந்த படியால் தேர்தல் கமிஷனின் விதிப்படி அதை மக்களிடம் போட்டுக் காண்பிக்க முடியாத நிலை. அதை ஒரு நிகழ்ச்சியாக டிவியிலும் காட்ட முடியாத நிலை. அதனால் அந்த சிடியை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது என்று ஆளும் கட்சி அசந்திருந்த நேரத்தில் மக்கள் தொலைக்காட்சி மிக சாமர்த்தியமாக ஒரு வேலை செய்தது. என்ன தெரியுமா?

திடீரென செய்திகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது. செய்தி என்ன தெரியுமா? பெரியார் திராவிடர் கழகம் தயார் செய்திருந்த சிடிக்கு தடை நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட அந்த சிடியை இப்போது பார்க்கலாம் என்ற ஒற்றை வரிச் செய்திதான். அந்த ஒற்றை வரி முடிந்தவுடன் அந்த சிடி ஒளிபரப்பப்பட்டது.

அசத்தலான அட்டாக். நிகழ்ச்சியாக அதை காண்பிக்க முடியாது. ஏனென்றால் அது பிரச்சாரமாகிவிடும். ஆனால் இதுதான் அந்த தடை நீக்கப்பட்ட சிடி என்று செய்தியாக ஒளிபரப்ப முடியும். ஏன் என்று எந்த விதியும் கேள்வி கேட்க முடியாது. சன்னும், கலைஞரும் பேந்தப் பேந்த விழத்துக் கொண்டிருக்க, மக்கள் தொலைக்காட்சி அட்டகாசமாக பிரச்சார நேரம் முடிந்த பின்னும் நள்ளிரவு வரை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை, அமெரிக்கா தூங்கிய நேரத்தில் இந்தியா விழித்துக் கொண்டது என்பார்கள். அதே போல மீடியா பிரச்சாத்தைப் பொறுத்தவரையில் சன்னும் - கலைஞரும் தூங்கிய நேரத்தில் மக்கள் தொலைக்காட்சி எழுந்து கொண்டது.

12 comments:

Anonymous said...

Hahahahahahahahaha funny thats good reply,for those sun kalaingar!very soon sun going to sleep in foregin country,because now Vijay TV has quality and best programe!!

Anonymous said...

Vannakam Selva

Yesterday in manny place in Tamilnadu put power off when that CD Telecast so many people can not watch it.

that incident main role act DMK family.

so this election last in congress and many seat loss Dmk soon.

Anonymous said...

If Tamilnadu and Tamils want to have good future,first of all we should send this all political parties to hell.otherwise tamila vidivu ennpathe kidaikathu.
When people are running behind free rice,free tv,free free free free in future they will announce free prostitute also!!!

ISR Selvakumar said...

Dear Mr. Anonymous,
As many are opposing, I am not against the free schemes for poor. I support those schemes. Why?

Please read my previous blog about this.
http://selvaspeaking.blogspot.com/2008/12/subsidy.html

கலையரசன் said...

மக்கள் டி.வி. எப்பொழுதோ முன்னேறிவிட்டது!!
பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com

பிரேம்குமார் அசோகன் said...

தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, சில மாதங்களாகவே சன் -கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு கடுக்காய் கொடுத்து வருகிறது மக்கள் தொலைக்காட்சி. ஈழத்தின் நடக்கும் இனப் படுகொலையின் ஆணி வேரை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றை பல வாரங்களாக தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி அது. தேர்தல் கூட்டணி முடிவான தருணத்தில் நிகழ்ச்சியின் போக்கில் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் -திமுகவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் காணொளி, ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதற்கு பதிலடி கொடுப்பதற்குள் தேர்தல் திரைப்படம் தொடங்கி விட...இதோ கிளைமாக்ஸை நெருங்கிவிட்டோம்!!

பிரேம்குமார் அசோகன் said...

தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, சில மாதங்களாகவே சன் -கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு கடுக்காய் கொடுத்து வருகிறது மக்கள் தொலைக்காட்சி. ஈழத்தின் நடக்கும் இனப் படுகொலையின் ஆணி வேரை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றை பல வாரங்களாக தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி அது. தேர்தல் கூட்டணி முடிவான தருணத்தில் நிகழ்ச்சியின் போக்கில் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் -திமுகவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் காணொளி, ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதற்கு பதிலடி கொடுப்பதற்குள் தேர்தல் திரைப்படம் தொடங்கி விட...இதோ கிளைமாக்ஸை நெருங்கிவிட்டோம்!!

ISR Selvakumar said...

பிரேம்,
தமிழ் பதிவர்கள் பலரும் விரும்புவது போல காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியின் படுதோல்விதான் நீங்கள் விரும்பும் கிளைமாக்ஸ் என்றால் அது நடக்கப்போவதில்லை. இது எனது கணிப்பு.

Anonymous said...

Makkal tholaikatchi is run by Dr.Ramdass. Even at the end of the period of the govt Dr.Ramdass and his are enjoying the power .For election purpose he is acting that he is affectionate for the tamil people in Srilanka.This time ramadass role as an actor will not work out. He will get only namam.

ISR Selvakumar said...

எக்ஸிட் போல்கள் ராமதாஸ் அண்டு கம்பெனிக்கு உற்சாகம் தரக் கூடியதாக இல்லை.

ஒன்றிரண்டாவது ஜெயித்தால் அவர் ஜெவுடன் ஓரளவுக்கு சுமுகமாகத் தொடரமுடியும். இல்லையென்றால் சட்டசபை தேர்தல் வரும்போது அன்புச் சகோதரி ஜெ அவரை பாசத்துக்குரிய அண்ணன் என்று கூட பார்க்காமல் வைகோவைப் போல பிழிந்துவிடுவார்.

பார்க்கலாம்.

ISR Selvakumar said...

பல பதிவர்கள் நினைப்பது போல சிடிக்குப் பயந்து மின்சாரத்தை தடை செய்யவில்லையாம். உண்மையிலேயே டிரிப் ஆகி விட, மக்களை திசை திருப்ப சமூக விரோதிகள் என கதை கட்டியதாகச் சொல்கிறார்கள்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு, சிடிக்குப் பயந்து மின்சாரத்தை தடைசெய்துவிட்டதாக மக்கள் தொலைக்காட்சி எதிர்பிரச்சாரம் செய்ததாம்.

இதுதான் உண்மையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அந்த சிடி அரசியல் ரீதியாக சலசலப்பை உண்டு பண்ணியதே தவிர, தமிழகத்தையே மாற்றி யோசிக்க வைத்ததாக நான் நினைக்கவில்லை.

சோழன் கொடி said...

அரசியல் பண்ணாமல் எப்படி தம்பிகளா ஒரு தொலைக்காட்சியை நடத்த முடியும். சும்மா ராமதாஸை குறை சொல்லனும் என்ற நோக்கத்திலேயே பேசாதிங்கப்பா. ஈழப்பிரச்சினை சொல்றதுக்கு ஒரு டிவி இருக்கேன்னு நினைங்கடா தம்பிகளா