திடீரென மறைந்த சாஹுல் அமீதின் மறைவை ஏனோ மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது.
ஆழ்ந்த இரங்கல்!
ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு என்னுடைய குறும்படத்தை எப்போது அனுப்பலாம்?
இதனை சாத்தியப்படுத்தியுள்ளதற்காக ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இந்தியா எக்ஸைட் நிறுவனத்துக்கு நன்றி!
Happy for the association with India Excite IT Solutions PVT LTD.
For ISR 5 Minute Short film contest, India Excite will offer remote support for cloud-based interactions and submissions for the contestants via phone, email and chat.
மற்றும் ஒரு பெருமை! ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியுடன் இணைகிறோம். இது ISR 5 நிமிட குறும்படப் போட்டிக்கு கிடைத்திருக்கும் மற்றும் ஒரு சிறப்பான அங்கீகாரம்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குழந்தைகள் உரிமை - Child Right பற்றி வலியுறுத்தும் படங்கள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும் என்பதால் போட்டியின் நல் நோக்கத்தை கருத்தில் எடுத்துக் கொண்டு இதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்கள்.
நாங்கள் வசிக்கும் திருநகரில் சுதந்திரதினம். 150 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் நகரில் கடந்த 20 வருடங்களாக அதிகபட்சம் 15 பேர்தான் கலந்து கொள்வார்கள். அதில் ஏழு முதல் எட்டு பேர் எங்கள் பகுதியை சாராத வழிப்போக்கர்கள் மற்றும் நடைப் பயிற்சிக்கு வந்தவர்களாத்தான் இருப்பார்கள். இன்று வாக்கிங் வந்த அடுத்த காலனி தம்பதிகள் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். இந்தியா பாகிஸ்தான் போரில் பங்கு பெற்ற ஏர் கமாண்டர்களில் ஒருவர் திரு.சண்முகம். எங்கள் நகரில் வசிக்கிறார். நடைப் பயிற்சிக்கு வந்த அவர்தான் இம்முறை துவக்க உரை. எங்களுடன் தன் போர் அனுபவங்களில் ஒன்றை பகிர்ந்து கொண்டார். எனக்கு ஒரு கொடி தருவீங்களா எனக் கேட்டு வந்த ராமச்சந்திரன் என்பவர்தான் இம்முறை கொடியேற்றினார். அவர் 30 வருடங்களாக எங்கள் நகரில் வசிக்கிறார்.
யுத்தகாண்டம் - சிங்கிள் ஷாட் மூவி!
நகையே உனக்கொரு நமஸ்காரம் (13.8.1976)
46 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோ கலை மன்றத்தின் சார்பாக அரங்கேறிய வி.எஸ்.ராகவனின் மேடை நாடகம் இது.
5 minute short film competition for Child Rights
The contest is designed to discover, recognize and foster young talent from around the world while creating a global conversation about Child Rights.
Three best films will be awarded along with best director, best script writer, best cinematographer, best editor and best performer.
The winners will get cash prize and discount coupons related to media production.
Very soon the details about event beginning date, film submission methods, juries and about award event will be announced.
Remember the 2022 theme for the first edition of 5 minute short film contest is "Child Rights".
- ISR Ventures
ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப்போட்டி - ISR 5 minute short film contest
இளம் படைப்பாளர்களுக்கு புதிய வாய்ப்பு! குறும்படம் எடுத்து உங்கள் திறமையை நிரூபிக்கலாம்.
ஐ.எஸ்.ஆர் வென்சர் தயாரிப்பு நிறுவனம் 5 நிமிட குறும்படப் போட்டியை அறிவித்துள்ளது.
குறும்படம் எடுப்பவர்கள் எப்போதுமே காதல் படம், திரில்லர் அல்லது பேய்படம்தான் எடுக்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் அது உண்மையில்லை. நம் இளைஞர்கள் மிகத் திறமையானவர்கள். அவர்களால் எந்த வகையிலான படத்தையும் எடுக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்தப் போட்டி.
எனவே அவர்களின் சிந்தனையை ஒருமுகப்படுத்தும் வகையில் குறும்படப் போட்டியின் மையக் கருவாக ”குழந்தைகளின் உரிமைகள் - Child Rights" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
போட்டியாளர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்கும்போது, அந்தக் குறும்படங்கள் வழியாக குழந்தைகளின் உரிமைகள் என்றால் என்ன? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் கருத்துகள் வெளியாகும்.
குறிப்பாக இளைஞர்களிடமிருந்து அது வெளிப்படும்போது மிக வேகமாக அது அனைவரையும் சென்றடையும். மிக மிக முக்கியமாக நமது இளைஞர்கள் நல்ல சிந்தனைகள் உள்ள படம் எடுக்கும் திறமையுள்ளவர்கள் என்பது நிரூபணமாகும்.
எனவே இளைஞர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப்போட்டியில் கலந்து கொள்ளுங்கள். கமர்ஷியல் படங்களும் எடுப்போம், கருத்துள்ள படங்களும் தருவோம் என்பதை நிரூபியுங்கள்.
போட்டி என்றிலிருந்து துவங்கும், அதில் எப்படி கலந்து கொள்ளலாம், பரிசுத் தொகை என்ன என்பது பற்றிய விபரங்கள் வெகு விரைவில் வெளியாகும்.
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு 9962295636 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் அனுப்பி, உங்கள் ஆர்வத்தை தெரிவிக்கலாம்.
இளம் குறும்பட இயக்குநர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
இயக்குநர் ஷங்கர் திருமணத்தில் நடிகர் திலகம், தன் மனைவியுடன் வந்திருந்து வாழ்த்தியபோது எடுத்த படம் இது.
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் அறிமுகங்கள்.
இருமல் தாத்தா முதல், குற்றாலம் அருவி வரை ஒரு பட்டியல் போட்டால் அவருடைய அறிமுகங்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இருப்பார், என் தந்தை ஐ.எஸ்.ஆரும் இருக்கிறார்.பொன்னியின் செல்வன் எப்படி இருக்கும்?