புது வேலை, புது அலுவலகம். நம்ப ஆள் எப்பவுமே கொஞ்சம் உடனடியா சூடாகிற ஆள்.
முதல் நாளே கேண்டினுக்கு ஃபோனைப் போட்டார்.
"முட்டாளே காபி குடுத்து அனுப்பியிருக்கியே, அது ஏண்டா சூடா இல்ல?"
மறுமுனையில் இருந்தவர் நம்ப ஆளை விட டபுள் சூடாக கொதித்தார்.
"டேய் என்னையே மிரட்டறியா? நான் யார் தெரியுமா?"
"யாருடா நீ ?"
"நான்தான்டா இந்த கம்பனியோட முதலாளி". நம்ப ஆள், டக்கென்று 'ஜெர்க்'கானாலும் அசரவில்லை.
"டேய் நீ இந்த கம்பெனியோட முதலாளியா இருக்கலாம். ஆனா நான் யாரு தெரியுமா?"
"யாரா? யாருன்னா கேட்கற? போன்ல பேசற உன்னை எனக்கெப்படிடா தெரியும்?"
நம்ப ஆள் டபக்கென்று ஃபோனை வைத்துவிட்டு "அப்பாடா" என்று பெரு மூச்சுவிட்டார்.
============
டீச்சர் :
"எட்டை ஒன்பதால பெருக்கி, விடையை எண்பத்தொன்பதால பெருக்கினா என்ன வரும்?"
மாணவன்:
"தப்பான விடை வரும் டீச்சர்"
============
ஒரு நல்ல மனைவி எப்போதுமே கணவனை மன்னித்துவிடுவாள், தான் தப்பு செய்யும்போது
============
சிக்கனத்திற்கு சொல்லப்படும் மிகச் சிறந்த யோசனைக்கு ஒரு இலட்சம் தருவதாக நிர்வாகம் அறிவித்தது. ஒரு இலட்சம் வேண்டாம், 50 ஆயிரம் கொடுங்கள் போதும் என்றவருக்கு, ஒரு இலட்சம் கிடைத்தது.
5 comments:
/
ஒரு நல்ல மனைவி எப்போதுமே கணவனை மன்னித்துவிடுவாள், தான் தப்பு செய்யும்போது
/
அப்பாடா இத படிச்சதுக்கப்புறம்தான் கொஞ்சம் மூச்சு வருது!
:))))))))))))
tea joke super
:))
முன்னாடி இருந்த டெம்பிளேட் நல்லா இருந்திச்சு...
Post a Comment