ஜெயலலிதாவின் வானளாவிய கட்டவுட்டுகள் சரிந்து கொண்டிருந்த நேரம்.
ஆட்சி மாறி சன் டிவி ஜெயலலிதாவின் வீட்டுக்குள் புகுந்து செருப்புக்களையும், புடவைகளையும் படம் காட்டிய நேரம்.
தினமணியில் திருவாளர் 'சிறு பத்திரிகையாளர்' ஞாநி ஒரு கட்டுரை எழுதினார்.
'ஜெயலலிதா வீட்டுக்குள் மிகப் பெரிய லைப்ரரி இருக்கிறது. சன் டிவி அதைக் காட்டாமல் ஏன் நூற்றுக் கணக்கான செருப்புகளையும், புடவைகளையும் காட்டியது' என புலம்பி இருந்தார்.
சம்பந்தப் பட்ட ஜெயலலிதாவே தன்னுடைய தக தக புடவையை கட்டிக் கொண்டு, கிலோ கணக்கில் நகைகளையும் போட்டுக்கொண்டு, எருமை மாட்டு வயதில் ஒருத்தனை திடீரென வளர்ப்பு மகனென அறிவித்து, போலீஸ் கமிஷனர்களை கல்யாணத்தில் நாயனம் வாசிக்கிறவர் போல துணைக்கு வைத்துக் கொண்டு ஊர்வலம் போவாராம். ஆனால் நாம் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆஹா ஜெயலலிதாவின் லைப்ரரி எவ்வளவு அழகாக இருக்கிறது என்று ஆச்சரியப்படவேண்டுமாம்.
இப்போது சிறு பத்திரிகையாளர் ஞாநி பெரும்பத்திரிகையாளராகிவிட்டார். ஆனாலும் ஆள் மாறவே இல்லை. இவருக்கு யாரையாவது பிடித்து விட்டால் முழு பூசணிக்காயையும் குமுதத்தை வைத்து மறைப்பார். பிடிக்காவிட்டால் ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வென்றால் கூட குமுதத்தில் 'குட்டு வைப்பார்' அல்லது 'பகிரங்கக் கடிதம்' எழுதுவார்.
'வளர்ப்பு மகன் கல்யாணத்தில் தாங்கள் அணிந்த நகைகள் கவரிங் நகைகள்' என்று ஏழை ஜெயலலிதா - சசிகலா அண்டு கோ கோர்ட்டில் சொல்லியிருக்கிறார்கள்.
குமுதத்திலேயே இது வெளியாகி இருக்கிறது. தன்னுடைய ஓ பக்கங்களைத் தவிர வேறு எந்த பக்கங்களையும் படிக்காத ஞாநி இது போன்ற பக்கங்களையும் படித்து, குட்டு வைக்க மனமில்லை என்றாலும், செல்லத் தட்டு வைப்பார் என்று நம்புகிறேன்.
12 comments:
//முழு பூசணிக்காயையும் குமுதத்தை வைத்து மறைப்பார். //
:))))
//Your comment has been saved and will be visible after blog owner approval. //
இது எப்பொழுதில் இருந்து?
முதலில் நண்பர் சஞ்சய் அரசியல் பதிவர் ஆனார், அவரை பின்பற்றி அரசியல் பதிவராக முயற்சி செய்யும் சிவாவை வாழ்த்துவோம்.
//செல்லத் தட்டு வைப்பார் என்று நம்புகிறேன்.//
தட்டு வைக்கிறது என்று முடிவான பிறகு அதை வெள்ளிதட்டாகவே வைக்கும் படி கேட்டுக்கிறேன். அப்பதான் அப்ப அப்ப வச்சு எடுக்க வசதியாக இருக்கும்:))
முதல்ல மைசூர் மகராஜா எங்க அம்மாவுக்கு கொடுத்த அன்பளிப்புன்னாங்க, இப்ப மைசூர்ல இருந்து வந்த அலங்கார நிபுணர் கொண்டுவந்த கவரிங் நகைங்கிறாங்க. உண்மை என்னான்னு புன்னகையோடு பொன்னகை வித்துகிட்டு இருந்து, திடீர்னு தற்கொலை செஞ்சுகிட்டு செத்து போன பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளருக்குத்தான் தெரியும். அதாவது உண்மை எப்பவோ செத்து போச்சு.
:))))))))))))
/
குசும்பன் said...
முதலில் நண்பர் சஞ்சய் அரசியல் பதிவர் ஆனார், அவரை பின்பற்றி அரசியல் பதிவராக முயற்சி செய்யும் சிவாவை வாழ்த்துவோம்.
/
குசும்பா இது என் வலைப்பூ இல்லை. டெம்ப்ளேட் மட்டும் என்னுடையதை இவருக்கு குடுத்திருக்கேன்.
//சம்பந்தப் பட்ட ஜெயலலிதாவே தன்னுடைய தக தக புடவையை கட்டிக் கொண்டு, கிலோ கணக்கில் நகைகளையும் போட்டுக்கொண்டு, எருமை மாட்டு வயதில் ஒருத்தனை திடீரென வளர்ப்பு மகனென அறிவித்து, போலீஸ் கமிஷனர்களை கல்யாணத்தில் நாயனம் வாசிக்கிறவர் போல துணைக்கு வைத்துக் கொண்டு ஊர்வலம் போவாராம். ஆனால் நாம் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆஹா ஜெயலலிதாவின் லைப்ரரி எவ்வளவு அழகாக இருக்கிறது என்று ஆச்சரியப்படவேண்டுமாம்.//
ஹா ஹா ஹா ஹா
//இவருக்கு யாரையாவது பிடித்து விட்டால் முழு பூசணிக்காயையும் குமுதத்தை வைத்து மறைப்பார். பிடிக்காவிட்டால் ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வென்றால் கூட குமுதத்தில் 'குட்டு வைப்பார்' அல்லது 'பகிரங்கக் கடிதம்' எழுதுவார்.//
:-)))))))))
//பொண்வண்டு: மங்களூர் சிவாகிட்ட நீங்கதான் r.selvakumar - ஆ அப்படின்னு கேளுங்க //
அப்படின்னு பொண்வண்டு கேட்க சொன்னார்?
//மங்களூர் சிவா said...
குசும்பா இது என் வலைப்பூ இல்லை. டெம்ப்ளேட் மட்டும் என்னுடையதை இவருக்கு குடுத்திருக்கேன்.//
என்னய்யா ஏதோ சைக்கிளை வாடகைக்கு கொடுத்து இருக்கிறேன் என்பது போல் சொல்ற!!! எனக்கு என்னமோ மறு அவதாரம் போல் இருக்கு:)))
பொண்வண்டு: இல்லைன்னு சொன்னா அப்புறம் ஏன்யா***** உன் படம் அவர் பதிவுக்கு நேரா தெரியுதுன்னு கேளுங்க ////
சிவாவை திட்டியவை இங்கு **** ஆக்க பட்டு இருக்கின்றன!:)))
நாராயண நாராயாண:)))
gnani annanukku sariyaana saattai adi.
ஒ!... இவர நீங்க பல காலமா கவனிச்சிட்டு இருக்கீங்க போல?
Post a Comment