Tuesday, August 19, 2008

காந்தியும், புத்தரும், விஜயகாந்தும் ஒன்றாம் . . .


கூட்டணி இல்லாமல் தனித்து நின்று தனித்து நின்று ஜெயிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
காந்தியும் தனி மனிதர் தான், புத்தரும் தனி மனிதர்தான் அதே போல நானும் தனி மனிதன்தான்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் விஜயகாந்த்தின் சுயதம்பட்டம் இது.

விஜயகாந்த் கூட்டணியோ அல்லது மாற்றணியோ, எதையோ ஒன்றை வைக்கட்டும். அதற்க்காக காந்தியையும், புத்தரையும் தன்னைப் போன்ற முதலமைச்சர் ஆக ஆசைப்படும் சாதாரண அரசியல்வாதியாக தரமிறக்க வேண்டாம்.

காந்தியும், புத்தரும் தங்களைத் தாங்களே வென்றவர்கள். தங்களைப் போன்றே மற்றவர்களும் நடக்க உதாரணமாகத் திகழ்ந்த தத்துவ ஆசான்கள். விஜயகாந்த்தைப் போன்று கருப்பு எம்.ஜி.ஆர், வெளுப்பு எம்.ஜி.ஆர் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு மக்களை முட்டாளாக்கியவர்கள் அல்ல.

விஜயகாந்த்துக்கு மனதளவில் தான் காந்திக்கும், புத்தருக்கும் துளியும் ஈடு இல்லை என்று தெரிந்திருக்கும். இருந்தாலும் உதட்டளவில் கூட அவர் அந்த மாதிரி பேச வேண்டாம் என்பதற்க்காகத்தான் இந்த கண்டன வரிகள்.

5 comments:

கோவி.கண்ணன் said...

கொஞ்ச நாளில் காந்தி தாத்தா மாதிரி தலை வழுக்கை ஆகிடுவார். அப்பறம் ஆசையை அறவே திறக்கனும், அவர் பொது நல ஆசையாக, பொதுமக்களின் ஆசையாக முதல்வர் பதவி கிடைக்க விரும்புகிறார். அவருக்கு தனிப்பட்ட விருப்பமில்லை, அப்ப அவர் காந்தியும் புத்தரும் மாதிரி தானே !

Anonymous said...

vijayakanth avargale, ithellaam romba ovara theriyalaya? makkalai neengalum madayan aakka paarkiringale? neenga mattum yenthavagai la different tunu sayalula kaminga vaayila vendaam.
neengalum thaan matrakachingaluku inaya yellathaume sejittu buththan, ganthi nu yen punithamanavargali kalanga paduthiringa?
vendaanga naangalelaam pavamga....please.....

Anonymous said...

His comparison with Gandhuji And Buddha Seems to have exposed his insaness.He is a pucca lunatic,to be imbounded in a lunatic asylum.This fellow likes fights ,terror etc in his film where as those Mahans preached non violence,Passion And love.He is intensive in politics not with the intention to do service to humanity but because his Kerala Namboothiri's forecasted that no one can prevent him from becoming political VIP.Those willing to join his party have to say how much they could spend for party development.so, with those people spending their pocket money have to do party works to make the clean administration if he becomes (?)CM?

மோகன் காந்தி said...

தன்பிறந்த நாளை வருமை ஓழிப்பு தினமாக தனக்கு தானே சொல்லிக்கொண்டவர்.காந்தியையும், புத்தரையும் தனக்கு இடாக சொல்வதை மக்கள் ஓரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவர் சொன்னது சரிதான்.
அவர் தனி மனிதர் தான்! ஒட்டிப் பிறக்கவில்லை.
காந்தி, பிராந்தி, வாந்தின்னு காதில கேட்டமாதிரி இருந்தது,
அதான் இந்த பக்கம் வந்து பார்த்தேன்.