Friday, August 22, 2008

நானும் அவளும் . . . சில பழக்கங்களும்.


"சார்... நான் ஒரு ஆச்சாரமான பிராமிண். இந்த Resortல நான் வெஜ் சமைக்கறாங்க, அதனால கண்டிப்பா பூண்டு யூஸ் பண்ணுவாங்க. எனக்கு மட்டுமில்ல எந்த பிராமிணுக்கும் பூண்டு வாசனையே கூடாது. அபச்சாரம். அதனால தயவு செய்து நாம வேற ஹோட்டலுக்குப் போயிடலாம்."

இந்த வரிகளை படிக்கும்போது சிரிப்பு வருதா? வரும். அடுத்த வரிகளையும் படிங்க.

நான் அந்தப் பெண்ணை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். யாரோ ஒருவனுடன் பைக்கில் வந்து இறங்கி எங்களுடன் காரில் வந்து அமர்ந்து கொண்டாள். அவள் முதன்முதலில் அறிமுகமான சினிமாக் காட்சிஎதுவெனத் தெரிந்தால் சட்டென்று அவளா என்று என்னைப் போலவே வியப்பீர்கள். ஆனால் அது எந்தக் காட்சியென்று நான் சொல்லப் போவதில்லை. அவள் 'மெட்டிஒலியில்' நடித்திருக்கிறாள். முடிந்தால் யாரென்று யூகியுங்கள், ஏனென்றால் கடைசிவரை அவள் யாரென்று நான் சொல்லப்போதில்லை.

வழியில் டிபன் சாப்பிட்டுவிட்டு, கார் ஒரு திருப்பத்தில் திருவான்மியூருக்குள் நுழையும்போது, அதுதான் என் ஹஸ்பெண்ட் என்று கைகாட்டினாள். சிறிது நேரத்திற்கு முன் அவளை பைக்கில் வந்து இறக்கிவிட்ட அந்தக் கணவன், பான்பராக் மென்றுகொண்டிருந்தான்.

நான் நடத்தப்போகும் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கத்தான் அவள் வந்திருந்தாள்.

"நைட்டே திரும்பிடலாமா?", என்றாள்

"மிட் நைட் ஆகும்."

மொபைல் போனை எடுத்து "ஏங்க நான் வற்ரதுக்கு நாளைக்கு மத்தியானம் ஆகும்", என்றாள் எங்கோ தொலைவில் பான்பராக்கை மென்று கொண்டிருந்தவனிடம்.

இரவு நிகழ்ச்சி நடக்க இருந்த Resortல் மதிய உணவுக்கு முன், "ஒரு தடவை ஸ்கிரிப்டை பாத்துடறியா?" என்றேன். அவள் சரி எனச் சொல்லும்போது எனது மடி அருகே இருந்தாள். ஒரு முறை, இரு முறை தொடர்ந்து பல முறை, ஆனாலும் அவளால் அந்த ஸ்கிரிப்டை தன் வசப் படுத்தவே முடியவில்லை.

"சார் சாப்பிட்டுட்டு உட்காரலாமா?" என்றாள். நான் அலுப்புடன் கையை அலம்பிக்கொண்டு டேபிளுக்கு வந்தேன். டேபிளில் இரண்டு கோப்பைகளில் விஸ்கி.

"இது யாருக்கு?"

"நமக்குத்தான்" என்றாள்.

"நான் மது அருந்துவதில்லை."

"ஆச்சரியமா இருக்கே. எப்படி சார் இந்தமாதிரியெல்லாம் இருக்கீங்க?" என்று கேட்டுக்கொண்டே இரண்டு லார்ஜையும் அவளே முடித்துவிட்டாள்.

"எனக்குப் பசிக்கிறது. உணவு அருந்தலாமா?", என்றேன்.

"வேண்டாம் சார்", என்றாள்.

"ஏன்?"

இப்போது முதல்வரியைப் படியுங்கள், சிரியுங்கள்.

5 comments:

மங்களூர் சிவா said...

nice
:))

மங்களூர் சிவா said...

மெட்டி ஒலி எல்லாம் பாத்ததில்லை

:)))

Anonymous said...

ஏன் ஆச்சாரமான வெஜிடேரியன்கள் குடிக்கக் கூடாதா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

Anonymous said...

//ஏன் ஆச்சாரமான வெஜிடேரியன்கள் குடிக்கக் கூடாதா?

//

இல்ல ஆல்கஹால் தயாரிக்க, மூலப் பொருட்களை நொதிக்க யீஸ்ட் அப்படின்னு ஒன்ன போடுவாங்களே? அது அசைவம் இல்லியோ?