
"அமிதாப் பச்சன், அமீர்கான், சல்மான் கான் எல்லாம் இன்டர்நெட்ல எழுதறாங்களாமே? என்ன எழுதறாங்க சார்?"
"பிளாக்(Blog) எழுதறாங்க"
"அப்படின்னா?"
என்னுடைய நண்பர், ஒரு திரைப்பட இயக்குனர். அவருக்கும் எனக்குமான உரையாடலின் முதல் பகுதி இது.
"பிளாகுகளின் பலம் என்ன சார்?"
"நினைச்ச நேரத்துல, நினைச்ச விஷயத்த, யாரைப் பற்றியும் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காம உடனே பிளாக்ல எழுத முடியும். இதுதான் பிளாகுகளின் பலம்"
அவருக்கும் எனக்குமான உரையாடலின் இடைப்பட்ட பகுதி இது.
"பிளாகுகளின் பலவீனம் என்ன சார்?"
"நினைச்ச நேரத்துல, நினைச்ச விஷயத்த, யாரைப் பற்றியும் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காம உடனே பிளாக்ல எழுத முடியறதுதான் பிளாகுகளின் பலவீனமும்"
அவருக்கும் எனக்குமான உரையாடலின் அடுத்த பகுதி இது.
"ஏன் அப்படி சொல்றீங்க?"
"அமீர்கான் ஷாருக்கானை தன்னுடைய காலை நக்குகிற நாயுடன் ஒப்பிட்டு எழுதினார். சென்சார் செய்யவோ, அனுமதிதரவோ யாரும் இல்லாததால் தான் அவர் அப்படி எழுதினார்"
"அவங்களுக்குள்ள ஏதாவது தொழில் போட்டி இருக்கும் சார். அதான் அப்படி எழுதியிருப்பாரு"
அவருக்கும் எனக்குமான உரையாடலின் இறுதிப் பகுதி இது. கடைசி வரை எல்லையில்லாத சுதந்திரம் தான் பிளாகுகளின் சுதந்திரம் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
poda pokkai vaaya.. ponnunga patthi unaku enna therium?
இது "(இளம்) பெண்கள் ஏன் பிளாகுகளில் தென்படுவதில்லை" என நான் எழுதியிருந்த பிளாகுக்கு வந்த பெயர் போடாத கமெண்ட். என்னை வசை பாடியிருக்கும் இந்த கமெண்டை எழுதியது ஆனா பெண்ணா என்று தெரியவில்லை. அதே போல என்னை வாடா போடா என்று ஏக வசனத்தில் திட்டியிருப்பதற்கும் காரணம் தெரியவில்லை. ஆனாலும் இப்படி இவர் என்னை திட்ட முடிந்ததற்கு காரணம், பிளாகுகளின் எல்லையில்லாத சுதந்திரம்தான். இதுவே பிளாகுகளின் பலவீனம்.
இதை எனது நண்பர் ஒப்புக் கொள்வார் என்று நம்புகிறேன். நீங்களும், அதாவது என்னை திட்டி எழுதியிருக்கும் நீங்கள் உட்பட, அனைவரும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
4 comments:
/
ஆனாலும் இப்படி இவர் என்னை திட்ட முடிந்ததற்கு காரணம், பிளாகுகளின் எல்லையில்லாத சுதந்திரம்தான். இதுவே பிளாகுகளின் பலவீனம்.
/
அண்ணாச்சி ஜிம்ஷா ப்ளாக்ல இருக்கிற "வட்டி" பதிவுல உங்க பின்னூட்டத்தை பாத்துதான் இங்க வந்தேன்.
கமெண்ட் மாடுரேஷன் போட்டு அது மாதிரி கமெண்ட் எல்லாம் தூக்கீடுங்க சில அனானி சொறி நாய்கள் அசிங்கமா பேச எழுத பின்னூட்ட என்றே அலைகிறார்கள் என்ன செய்ய அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி போல
டியர் மங்களூர் சிவா,
உங்கள் பதிவுக்கும் சிநேகத்துக்கும் நன்றி!
உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.பிளாகுகளின் மூலம் விமர்சிக்க வேண்டிய விஷயங்களை, தகுந்தவாறு விமர்சிக்க முடிந்தாலும் அதனை தவறாக பலர் பயன்படுத்துகின்றனர் என்பதும் உண்மை.
கல்வித்துறையில் project head என profileலில் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே தங்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை பற்றி நிறைய தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
M.Sc., B.Ed முடித்துள்ள எனக்கு seniorityபடி அரசு வேலை
கிடைத்தல் சமபந்தமான புதிய அரசு ஆணைகள் போன்ற தகவல்களை அறிய மின்னஞ்சலில் தங்களை தொடர்பு கொள்ளலாமா?
நன்றாக இருக்கிறது, சிவா அண்ணா. backlink கொடுத்தற்கு நன்றி.
Post a Comment