Sunday, April 26, 2009

கேப்டன், ஜெ, தோழர்கள், வை.கோ, இராமதாசுக்கு கேள்வி

போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கசாப்புக் கடைக்காரனைப் போல இரக்கமே இல்லாமல் பேசிய ஜெயலலிதா.

ஜெயலலிதா லஞ்ச் சாப்பிடாததால், அது பெரும் உண்ணாவிரதப் போராட்டமாகி, உலமே ஈழப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதாகப் பிதற்றும் கம்யுனிஸ்டு தோழர்கள்

கிரிக்கெட் மாட்சுகளுக்கு இடையில் டிரிங்ஸ் எடுத்து வரும் பையனைப் போல ஜெயலலிதாவின் டிரிங்ஸ் பையனாக மாறிவிட்ட வை.கோ.

ஐந்து வருடம் கழித்து மீண்டும் ஒரு முறை ஜெயலலிதாவை அன்புச் சகோதரியாக ஏற்று அவர் வீட்டில் விருந்து சாப்பிட்ட அண்ணன் இராமதாசு

கேப்டன் என்று பெயரை வைத்துக் கொண்டு டுவல்த் மேன் போல ஈழ விஷயத்தில் பதுங்கித் திரியும், விஜயகாந்த்.

இவர்கள் அனைவரும், ஈழப் பிரச்சனையில் தமிழின துரோகி, பந்த் பக்தர், தந்தி நாயகர், கருணாநிதி ஏமாற்றிவிட்டார் என்றும, நாங்கள் பதவிக்கு வந்தால் தனி ஈழம் பெற்றுத் தருவோம் என்று வசை பாடுகிறார்கள்.

இவர்களுக்கு என்னுடைய கேள்வி.

தேர்தலுக்குப் பிறகு நீங்கள் யாரை ஆதரிக்கப் போகிறீர்கள்?
பதவி ஏற்ற மறுநாளே இலங்கையில் போரை நிறுத்துவேன் என்று உறுதி அளிக்கின்ற அரசுக்கா?
மீண்டும் உள்(குத்து)துறை, வெளி(குத்து) உறவுத் துறை அமைச்சர்களை அனுப்பி வெட்டிப் பேச்சு வார்த்தை நடத்துகின்ற அரசுக்கா?
ஒரு வேளை நீங்கள் ஆதரிக்கின்ற அரசு உடனடி போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் அந்த அரசை கவிழ்ப்பீர்களா?

9 comments:

பாலா said...

sariyaana kelvi aana pathil solla thaan aalilai selva

நிகழ்காலத்தில்... said...

\\தேர்தலுக்குப் பிறகு நீங்கள் யாரை ஆதரிக்கப் போகிறீர்கள்?
பதவி ஏற்ற மறுநாளே இலங்கையில் போரை நிறுத்துவேன் என்று உறுதி அளிக்கின்ற அரசுக்கா?
மீண்டும் உள்(குத்து)துறை, வெளி(குத்து) உறவுத் துறை அமைச்சர்களை அனுப்பி வெட்டிப் பேச்சு வார்த்தை நடத்துகின்ற அரசுக்கா?
ஒரு வேளை நீங்கள் ஆதரிக்கின்ற அரசு உடனடி போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் அந்த அரசை கவிழ்ப்பீர்களா?\\

வாய்ப்பும் ஆட்சியும் உள்ள நம் தமிழக அரசிடம் ஏன் செய்யவில்லை எனக்கேட்டால், உங்கிட்ட ஆட்சியக் கொடுத்தா என்ன செய்வ? எனக் திருப்பி கேட்டால், என்ன சொல்றது?

ஒழுங்கா பதில் சொன்னா அது
பொருத்தமான பதிலா இருந்தா என்னைப்போல் நடுநிலையாளர்கள் ஓட்டு விழ வாய்ப்பு உண்டு.

இப்படி இடக்கு மடக்கா பதில் சொல்ல
(கேள்வி கேட்க)நீங்க எதுக்கு திரும்ப
ஆட்சிக்கு வரணும்?

திமுக விற்கு எதிரிகள் வெளியே இல்லை.

Dr. சாரதி said...

good said

Dr. சாரதி said...

good said

Dr. சாரதி said...

good said

ராசா said...

மிக சரியானது,
இன்றைக்கு தமிழனுக்காக போராடும் ஒரே அமைப்பு பாரதி ராஜா தலைமையிலான "திரையுலக தமிழீழ ஆதரவு" மட்டுமே,
மற்றவையெல்லாம் போலி நாடகமே..

பிரேம்குமார் அசோகன் said...

சிறிய இடைவெளிக்குப் பின் 'உங்கள்' பதிவு. பதிலளிக்க இயலாத கேள்விகள். .
ஈழ பிரச்சனையில் அதிமுக கூட்டணி மற்றும் விஜயகாந்த் மட்டும் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கவில்லை... ஈழத்தில் தமிழர்கள் மீதான வெறித்தாக்குதலை ராஜபக்சே தீவிரப்படுத்தியிருந்த நேரத்தில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கேள்வி-பதில், கவிதை எழுதக் கூட முடியாத அளவுக்கு ஐம்புலன்களையும் அசைக்க இயலாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நம் தமிழனத் தலைவர், தமிழ்க் குடிதாங்கி கருணாநிதி. ஆனால் தன் செல்ல நாய்க் குட்டியைப் பார்க்காமல் ஏங்கிப் போய், சைரன் வைத்த தனி காரில் அதை மருத்துவமனைக்கு எடுத்து வரச்சொல்லி கொஞ்சி மகிழ்ந்திருக்கிறார் அந்நேரத்தில்.
நாய்க்கு அளிக்கும் முன்னுரிமையைக் கூட ஈழத் தமிழனுக்கு அளிக்காத நம் தமிழினத் தலைவர், இப்போது தேர்தல் பயத்தால் பந்த் நடத்துகிறார், தந்தி அடிக்கிறார்...

ஒவ்வொரு தேர்தலுக்கும் வெவ்வேறு விதமான "அலை" கிடைத்து விடுகிறது நம் குடிதாங்கிகளுக்கு...
ராஜிவ்காந்தி அனுதாப அலை, ஜெயலலிதாவின் சொத்து சேர்ப்பால் உருவான எதிர்ப்பு அலை, வெங்காயம், ரஜினி வாய்ஸ்.. இப்போது ஈழ தமிழர்கள் மீதான தாக்குதல்.
ஈழத் தமிழர்களின் உணர்வுகள் தேர்தல் பிரச்சார ஒலிப்பெருக்கிகள் மூலம் மே 13ம் தேதி வரை கற்பழிக்கப்படும். தேர்தல் முடிந்ததும் அவர்களின் உணர்வுகள் அனாதைப் பிணஙளைப் போல புதைக்கப்படும்.
இந்த தொனியை உங்கள் பதிவில் எதிர்பார்த்தேன்.
(பெரிய பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்)

ISR Selvakumar said...

அன்புச் சகோதரி இன்று ஒரு படி மேலே போய் “தமிழ் ஈழம்“ பெற்றுத் தருவேன் என்று சவால் விட்டிருக்கிறார். வருடங்கள் பல கடந்துவி்ட்டாலும், தான் சிறந்த நடிகை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஈழப் பிரச்சனை ஓட்டுப் பிரச்சனையாக உருவெடுப்பது போலத் தெரிந்ததும், பல்டிக்கு மேல் பல்டி அடித்துக் கொண்டிருக்கிறார்.

நான் நம்பப் போவதில்லை.

ISR Selvakumar said...

பிரேம் தமிழீழப் பிரச்சனையில் பலரும் பலவிதமாக எழுதிக் குவித்துவிட்டார்கள். குறிப்பாக கருணாநிதியை கடித்துக் குதறிவிட்டார்கள். இப்போது வீசிக் கொண்டிருப்பது கருணாநிதி எதிர்ப்பு தமிழீழ அலை. இந்த சந்தடி சாக்கில் அண்ணா தி.மு.க தலைவி, தமிழீழத் தலைவியாக ஒரு 40 நாட்களுக்கு நடித்து 40 எம்.பி.சீட்டுகளுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார். அதற்கு வை.கோ, இராமதாசு, கம்யுனிஸ்டு தோழர்கள் எல்லாம் துணை போகிறார்கள்.

இந்த விஷயத்தில் கருணாநிதி கும்பல்களுக்கும், ஜெயலலிதா கும்பல்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

இந்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். அதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.

இதை வெளிப்படுத்த நினைத்து எழுதப் பட்டதுதான் இந்தப் பதிவு.

நன்றி பிரேம்.