Sunday, April 26, 2009

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்ஜியின் ஓட்டுக் கலைப் பயிற்சி - முதல் மாணவி ஜெயலலிதா

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்ஜி சமீபத்தில் இலங்கை சென்று இடம்பெயர்ந்த மக்களை பார்த்து வந்தாராம். அவர்களின் துயரங்களை ஒரு சிடியில் பதிவு செய்து ஜெயலலிதாவுக்கு போட்டுக் காண்பித்தாராம். உடனே ஜெயலலிதா மனது மாறி, தமிழீழத்துக்கு ஆதரவு தரத் தயாராகிவிட்டாராம்.

நல்ல ஜோக்! ஆண்டாண்டு காலமாகத் தொடரும் போராட்டம். எத்தனை இழப்புகள்! எத்தனை மரணங்கள்! அத்தனையையும் தேர்தல் தேதி அறிவிக்கும் முதல் நாள் வரை “போரில் மக்கள் சாவது சகஜம்” என்று எள்ளி நகையாடிய ஜெயலலிதா, சிடியைப் பார்த்ததும் மனது மாறிவிட்டாராம்.

ரவிஷங்கர் ஜி! ஈழத்தில் விழும் ஒவ்வொரு பிணமும் ஒவ்வொரு ஓட்டு என்பதை “சோவை மீறி” எப்படி ஜெயலலிதாவுக்குப் புரியவைத்தீர்கள்?

இன்றைய தேதியில் ஈழப் பிரச்சனையை வைத்து ஓட்டுக்களை வாங்கும் கலைதான் சிறந்த வாழும் கலை என்று ஜெயலலிதாவுக்கு எப்படிப் புரியவைத்தீர்கள்?

ரவிஷங்கர் ஜி,நீங்கள் இலங்கை சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியது வெளிப்படையான விஷயம். ஆனால் திரும்பி வந்ததும் நேற்று வரை தனி ஈழத்தை அதற்கான போராட்டத்தை அங்கீகரிக்காமல், எதிர்த்து வந்த ஜெயலலிதாவை (தேர்தல் நேரத்தில்) சந்தித்ததில்தான் ஏதோ மர்மம் இருக்கிறது.

ஒரு வேளை நாளை அம்மா ஜெயித்து ஈழப் பிரச்சனையை கை கழுவினால் நீங்கள் தமிழ் மக்களிடமிருந்து கருணாநிதியைப் போல “பதுங்கி வாழும் கலையை” கற்க வேண்டியதிருக்கும். சங்கராச்சாரியார் முதல் எஸ்.வி.சேகர் வரை ஜெயலலிதாவை நம்பிய யாரும் சுய மரியாதையோடு வாழ்வதாக சரித்திரம் இல்லை. ஜாக்கிரதை!

7 comments:

கண்ணா.. said...

மிக சரியாக புரிந்துள்ளீர்கள்... பதிவு மிக.. அருமை...

ஈழனின் பிணத்தில் மீது ஏறி நின்று ஜாலியாக அரசியல் செய்து வருகிறார்கள்.....

தூ.... மானங்கெட்ட ஜென்மங்கள்...

பாலா said...

ithellam arasiyalla sarva saatharanam bosssss

pirichu meiyunga paarthukalam

Anonymous said...

About this Swamiji i had some misgivings before.Like when he visited a Srilankan tamil refugee camp in Tamilnadu,he wanted to make sure all TV channels who were there gave publicity to him handing over sarees to them.When someone doing a good deed the publicity given is good.But for a Swamiji? Now he met with Jayalalitha and advised her!She also wants Eelam! Excellent!

Anonymous said...

"மிக சரியாக புரிந்துள்ளீர்கள்... பதிவு மிக.. அருமை...

ஈழனின் பிணத்தில் மீது ஏறி நின்று ஜாலியாக அரசியல் செய்து வருகிறார்கள்.....

தூ.... மானங்கெட்ட ஜென்மங்கள்..."

-நான் வழிமொழிகிறேன்.

ராஜரத்தினம் said...

நிச்சயமான் உண்மை.taken for granted என ஜெயலலிதாவை நம்பும் யாரும் சுயமரியாதையுடன் வாழமுடியாது. அது நிச்சயம் (அவர்களின்)தவறுதான். I told sometime back that only after LTTE leader killed thing will be normal. This is somewhat going to happen as blessing disguise for tamils.

Unknown said...

I appreciate and glade about your political range of vision. Jeyapal

Unknown said...

I appreciate and glade about your political range of vision. Jeyapal